கருக்கலைப்பிற்கு பின் கருத்தரிப்பு : செய்யவேண்டியவை மற்றும் செய்யவேண்டாதவை

கருக்கலைப்பிற்கு பின் கருத்தரிப்பு : செய்யவேண்டியவை மற்றும் செய்யவேண்டாதவை

ஒரு பெண் கருக்கலைப்பிற்கு  பிறகு கருத்தரிக்க சாத்தியமா ? நிபுணர்கள் சில கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

ஒரு இந்திய  பெண் வாழ்நாளில் சந்திக்கும் அணைத்து போராட்டங்களில், கருக்கலைப்பில் மட்டும் அவள் வெற்றியும் இழப்பும் பெறுகிறாள். இது உடலுக்கும் உணர்விற்கும் உள்ளான போராட்டம் என்பதால், இரண்டு விஷயங்களில் அவள் குழம்புகிறாள்.

 • என்னால்  கருக்கலைப்பு பிறகு கருத்தரிக்க முடியுமா? கருக்கலைப்பு பிறகு எப்படி விரைவில் கருத்தரிக்க முடியும்?
 • நிபுணர்கள் இதை சத்தியம் என்றாலும், இதனால் ஏற்படும் விளைவுகளும் அபாயங்கள் பற்றிய தகவல்களை நன்று அறிந்திருக்க வேண்டும்.

conceive after abortion

 

கருக்கலைப்பு பிறகு கருத்தரிப்பது பாதுகாப்பானதா?

கருக்கலைப்பு,  ஒரு சான்றிதழ் பெற்ற மருத்துவரின் சரியான வழிகாட்டுதலின் கீழ் நிகழ்ந்தால் அது எந்த விதத்திலும் பாதிக்காது. இது கருவளத்தை பாதிக்காது. டாக்டர். மஞ்சந்தா,புஷ்பவதி சிங்கானியா ஆராய்ச்சி நிறுவனம் (PSRI),தில்லி .எண்டோஸ்கோபி ஆலோசகர், " கர்பம் தரித்தல் சாத்தியம்தான் . செய்முறையில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அந்த சிக்கல்களையும், கருமுட்டை சேதாரங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். "

கருக்கலைப்பு-பின்  அபாய காரணிகள்

இந்தியாவில், பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் பல சிக்கல்கள் நேர்ந்த பெண்கள் உள்ளார்கள். "கூடுதலாக, கருக்கலைப்பு மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன.இந்த சலுகை யை தவறாக பயன்படுத்தினால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன".

ஐபாஸ் ஆய்வின்படி, பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால், இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பெண் இறக்கிறாள் என்று தெரியவந்தது. எனவே,ஒரு மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை.

டாக்டர் மன்சந்தா, 21  வாரங்களுக்கு பின் மேற்கொள்ளும் கருக்கலைப்பின் அபாயங்களை பட்டியலிட்டுள்ளார். இதுவே, சட்டபடியாக கடைசி வாரம்.

அதிகப்படியான இரத்தப்போக்கு

21 வாரங்களுக்கு பின் மேற்கொள்ளும்   கருக்கலைப்பினால்  தீவிர ஹேமொர்ரேஜ் அல்லது பெண்களுக்கு அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சினைகள் உருவாகும். ஆயிரத்தில் ஒரு கருக்கலைப்பில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதனால் உடம்பில் இரும்பு சத்து குறைபாடு உண்டாகும். எனினும், அதிக இரத்தப்போக்கு  ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனை பாதிக்காது.

conceiving after abortion

கருப்பைவாய் சேதம்

இது கருப்பை நுழைவாயிலில் சேதம் விளைவிக்கும் .ஆயிரத்தில் பத்து கருக்கலைப்பில் இந்த சேதம் ஆகும் அபாயம் இருக்கிறது. அறுவை சிகிச்சையின்போது கருவை கருப்பையிலிருந்து வெளியெடுக்கும்போது இந்த சேதம் ஏற்படும். மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்தாலும் இது ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் . டி & சி  முறை பயன்படுத்தினால், கருப்பையில் காயம் உண்டாகும். இந்த சேதத்தினால் பிற்காலத்தில் கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறையும்.

நோய்த்தொற்று

மருத்தவ ஆலோசனை இல்லாத கருகலைப்பால் நோய்த்தொற்று அல்லது இடுப்பு அழற்சி நோய் (Pid) ஏற்படலாம். இந்த சிக்கல் கருவுறு திறனை பாதித்து சிலசமயங்களில் மரணத்திற்கு கொண்டுசெல்லும்.

குறிப்பு:  எனினும், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு எதிர்கால கருத்தரிப்பும் பெண்களின் கருவளத்தையும் பாதிக்கும். அனால், மருத்துவ மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் கருகலைப்பால் கருவளத்துக்கும் கருத்தரிப்புக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஆறப்போடும் காலம்

நிபுணர்கள் ஆலோசனையின்படி, பெண்கள் கருக்கலைப்பிற்கு  பிறகு  சிறிதுகாலம் கருக்கொள்வதை தள்ளிப்போடவேண்டும்." பெண்களுக்கு குறைந்து மூன்று மாதமாவது கருக்கொள்வதை தள்ளிபோடுமாறு வேண்டிக்கொள்கிறோம். உடலுக்கும் மனதிற்கும், குறைபாடுகளை நிவர்த்திசெய்து சரியாக செயல்பட கால  அவகாசம் தேவை" என்கிறார்  டாக்டர் மன்சந்தா.

இந்த காலத்தேவைக்கு பின்வரும் இரண்டு காரணங்களுக்காக பரிந்துரைக்கிறார்

 • மருத்துவ அபாயங்கள் குறைத்தல்: தாய்க்கும் சேய்க்கும் அதிக மருத்துவ சேதங்களும் சிக்கல்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த  கால அவகாசம் தேவை.
 • வாழ்க்கை அபாயங்கள் குறைத்தல் : பெண்கள் ,தாங்களோ அல்லது தங்கள் குழந்தையோ ஆபத்தில் இருந்தால், கருக்கலைப்பிற்கு சம்மதித்திருக்கலாம்.

" இந்த இரு காரணங்களுக்காகவும், உடனடியாக  கருவூரும் முடிவு உயிருக்கிய ஆபத்தாக முடியும் " என்கிறார் டாக்டர் மன்சந்தா. எனினும், கருக்கலைப்பிற்கு  பிறகு கருத்தரிப்பது சாத்தியம்.

கருக்கலைப்பு பிறகு கருத்தரிக்கக்கூடிய எந்த அளவுக்குப் பாதுகாப்பானது புரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்:

[youtube

கருக்கலைப்பு பிறகு நான் எப்படி விரைவில் கருத்தரிக்க முடியும்?

மூன்று மாத காலை இடைவேளை தேவை என்றாலும் ,7 -10 நாளிலே கருக்கலைப்பு பிறகு கருத்தரிக்க முடியும்.

 • கருத்தடை சாதனைகள் எதுவும் உபயோகியோகிக்கவில்லை என்றால், உங்கள் கருப்பை  மீண்டும் செயல்பட்டு கருத்தரிக்க முடியும். உங்களுக்கு விருப்பமில்லை என்றால், கருத்தடை சாதனைகளை பயன்படுத்துங்கள். அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
 • இள்ங்காலத்திலே, கருக்கலைப்பு செய்துகொண்டால் உடனடியாக கர்ப்பத்தய் இயக்க முடியும். இதனால், அறுவை கருக்கலைப்பிற்கு பின் ஒரு மாதம் பொறுத்திருக்கவேண்டும்.

விரைவான குணமடைய  முன்னெச்சரிக்கைகள்

கருக்கலைப்பு, உடலுக்கும் உணர்விற்கும் சவாலான காலம் . நீங்கள் விரைவாக குணமடைய பின்வரும் 9  முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்.  

 • அதிகமாக நீர் பருகுங்கள். பழச்சாறுகள், சூப் மற்றும் பழங்கள் உட்பட திரவங்கள் நிறைய எடுத்துக்கொள்ளுங்கள்.
 • கருப்பை குணமடைவதற்காக மூன்று வாரங்களுக்கு கனமான பொருட்கள் எதையும் தூக்க வேண்டாம்.
 • நோய்த்தொற்று தவிர்ப்பதற்கு, உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆண்டிபையாடிக்குகள் எடுத்துக்கொள்ளவும்.
 • இரெண்டு வாரங்களுக்கு உடற்பயிற்சியை தவிர்க்கவும்.
 • டாம்பான்ஸ், வேதியலால் /நீரால் கழுவுதல் மற்றும் செக்ஸை இரண்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
 • ஒன்பது வாரங்களுக்கு பிறகு கருகலைத்தால், மார்பிலிருந்து பால்போன்ற திரவியம் கசியலாம். இதற்கு ஒரு கதகதப்பான பிராவை அணியவேண்டும்.

இதையெல்லாம் பின்பற்றினால். நீங்கள் கருத்தரிப்பில் ஈடுபடலாம்.

Yoga picture : யோகா போன்ற லேசான உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் சீராகி கருத்தரிப்பிற்கு எளிதாக்கும்.

கருக்கலைப்பு பிறகு  எப்படி கர்பம் தரிக்கமுடியும்

 • மருத்துவரை ஆலோசிக்கவும். தினசரி உங்கள் மருத்துவரிடம் தொடர்பில் இருங்கள்.வேறு எந்த சிக்கலும் ஏற்படாமல் இது முன்னெச்சரியாக இருக்க உதவும்.
 • கருக்கலைப்பு மேற்கொள்ளும்போது முன்னெச்செரிக்கையுடன்  இருக்கவேண்டும் : கருக்கலைப்பு மேற்கொள்ளும்போது  அதிக சேதம் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை ஆலோசித்து, உகந்த முன்னெச்சரிக்கைகள் பயன்படுத்த வேண்டும்.
 • உடற்கட்டை தக்கவைத்து கொள்ளவும் : யோகா போன்ற லேசான உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் சீராகி கருத்தரிப்பிற்கு எளிதாக்கும்.
 • செக்ஸ் : உங்கள் மூன்று மாத  இடைவேளை நிறைவடைந்தால்,நீங்கள் செக்சில் ஈடுபட தொடங்கலாம். அதிக முறை ஈடுபட்டால் கர்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகம்.
 • செக்ஸ் தவிர்த்தல் : உடல் ஆற தேவையான மூன்று மாதங்கள் முடியும்வரை செக்ஸை தவிர்ப்பது நல்லது.
 • ஓவ்யுலஷன் கிட்டை பயன்படுத்தவும்  :ஓவ்யுலஷன் கிட் எனப்படும் அண்டவிடுப்பின் கருவி சாதனத்தை பயன்படுத்தவும். உங்கள் மாதவிடாய் சுழற்சிகள் கண்காணிக்க உதவும். உங்கள் கருத்தரிப்பிற்கும் பயன்படும். நீங்கள் எப்பொழுது கர்பம் தரித்தீர்கள் என்று அளவில் கொள்ளும்.
 • பெட் ரெஸ்ட்டில்  நேராக படுக்கவும் : இந்த மூன்றுமாத  காலகட்டத்தில் உங்கள் இடுப்பு கீழே ஒரு தலையணையை வைத்து ஓய்வெடுக்க வைக்க முடியும். இந்த கருக்கலைப்பு பிறகு கருத்தரிக்கக்கூடிய முறை எளிதாக்கும்.

நிபுணர்கள், கருக்கலைப்புக்கு  பிறகு கருத்தரிக்கக்கூடிய வேண்டுமென்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்டு ,உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்.

Source: theindusparent

Any views or opinions expressed in this article are personal and belong solely to the author; and do not represent those of theAsianparent or its clients.

Written by

theIndusparent