ஒரு தாயாகிவிட்ட பிறகும் இந்த 5 விஷயங்களை நான் கைவிட மாட்டேன்

lead image

ஒரு தாயாக இருப்பதால், நீங்கள் விரும்பியதை முற்றிலும் நிறுத்திவிட்டு,24X7 குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

தங்கள் தேவையை தியாகம் செய்து , குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய தாய்மார்கள் பெரும் அழுத்தத்தில் இருந்தனர்.

இருப்பினும், இந்நாளில் பெண்கள் ஆண்களுடன் சமமான பொறுப்பில்  இருக்கும்போது, இந்த அழுத்தம் ஏற்பட தேவை இல்லை. திருமணமும் குழந்தையும் உண்டான பின், உங்கள் வாழ்க்கை தேவை முற்றிலுமாக முடிந்து போய்விடும் என்ற அர்த்தம் இல்லை.

ஒவ்வொரு தாயும் முதலில் ஒரு பெண். தாய், மருமகள் அல்லது மனைவி ஸ்தானத்தை விட நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதுதான் நம் அடையாளத்தை தீர்மானிக்கிறது.இதற்குதான், நான் விரும்பும் இந்த ஐந்து விஷயங்களை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்தேன்!

# 1  என் பொழுதுபோக்குகளை விட்டு கொடுக்க மாட்டேன்

எனக்கு  நடனம் மிகவும் பிடிக்கும். என் 10 -வது   படிப்பின் காரணமாக, தற்காலிகமாக நடன பயிற்சியை நிறுத்தினேன்.ஆயினும், இப்பொழுது

வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த போது,  கடந்த வருடம் கதக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். என் பதட்டங்களையும் மன அழுத்தத்தையும் மட்டுமே குறைக்காமல், எனக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தது.

என் மகளும் என்னுடன் என் வகுப்பிற்கு வருகிறாள். அவளும்

கதக் கற்றுக்கொள்ள விரும்புவதாக சொன்னாள். இது நாங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு சின்ன சந்தோஷம். உங்களுக்கும்  வாழ்க்கையில் இது போன்ற ஆசை இருந்தால், நிச்சயமாக பின்தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்

# 2  என் தொழில்துறை  மற்றும் இலட்சியத்தை  கைவிட மாட்டேன்

ஒரு தாயாக இருப்பதால், நீங்கள் விரும்பியதை முற்றிலும் நிறுத்திவிட்டு,24X7  குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஒரு தாய், மருமகள் அல்லது மனைவி ஸ்தானத்தை விட நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதுதான் நம் அடையாளத்தை தீர்மானிக்கிறது.நான் வேலைக்கு

செல்வதற்கு முன் குழந்தையை டேகேரில் விட்டுவிடுவேன்.இதில் எனக்கு எந்த கஷ்டம் ஒன்றும் இல்லை.
Modern_Indian_Woman 2

தவிர, நாள் முழுவதும் டிவி பார்க்காமல், அவள் வயது குழந்தைகளுடன் விளையாடுகிறாள்.புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதோடு, நம்பிக்கையுடனும் கலகலப்பாகவும் இருக்கிறாள்.இதனால் எனக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை.

நான் கைவிட முடியாத விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ( Continue Reading)

#3  என் தோழிகளை விட்டு கொடுக்க மாட்டேன்

திருமணமானவுடன், பல பெண்கள் தங்கள் தோழிகளை இழந்துவிடுகிறார்கள். உங்களை மகிழ்ச்சியாக ஆக்குவது மட்டுமல்லாமல், உங்கள் பிரச்னையை தீர்த்து வைத்தும் மன அழுத்தத்தை குறைக்கவும் தோழிகள் உதவுகிறார்கள்.என் மன அமைதிக்காக, என் தோழிகளோடு  செலவழிக்க முயற்சிப்பேன்

#4 நான் அலங்கரித்து கொள்வதை விட்டுவிடமாட்டேன்

தாயாக இருப்பதால், அலங்கரித்து கொள்வதில் விருப்பம் இருக்கக்கூடாது என்ற அவசியமில்லை. சில நேரங்களில் " "உனக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை" என்றும் தாய்மார்கள் கூறுவார்கள். உங்களின் சந்தோஷத்திற்காக நீங்கள் அலங்கரித்து கொள்கிறீர்கள். சமீபத்திய பேஷன் உடைகளை அணிந்து, ஷாப்பிங் செய்து புதிய துணிகளை முயற்சிக்கவும். இதை எதற்காகவும் நீங்கள் நிறுத்தவேண்டாம்!

மேலும், உங்கள் குடும்பத்தாரையும், உங்களைச் சுற்றியிருந்த அனைவரையும் சந்தோஷப்படுத்துவதற்கு , புத்தாடை  உடுத்தி சந்தோஷப்படுங்கள்! எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தயாராகுங்கள். யாருக்குதான் பாராட்டு பிடிக்காது ?

# 5 என் உடல்நலத்தை இழக்க மாட்டேன்

இறுதியாக,தாய்மார்கள் தங்கள் உடற்கட்டையும் உடல்நலத்தையும் புறக்கணிக்கக்கூடாது. நான் அன்றாட உடற்பயிற்சியை செய்து, ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன். என் குடும்பத்தை கவனித்துக்கொள்ள இந்த ஆரோக்கியம் எனக்கு தேவை.

இது எடை குறைப்பதற்கோ அல்லது அழகாக தோன்றுவதற்கோ இல்லை. உங்கள் நலனுக்கும் ஆரோக்யத்திற்கும்தான். உங்களை நீங்களே கவனித்து கொள்ளாவிட்டால், யாரும் உங்களை கவனிக்க முடியாது என்று நினைவில் கொள்ளுங்கள்.

படங்கள் பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner