ஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும் பல இந்திய தாய்மார்கள் பொதுவாக கொண்ட ஒரு விஷயம்

ஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும்  பல இந்திய தாய்மார்கள்  பொதுவாக கொண்ட ஒரு விஷயம்

இந்த தாய்கள் ஒற்றுமையாக கொண்ட ஒரு விஷயம் குழந்தைகளும், அவர்களை சார்ந்த மூட நம்பிக்கையும்தான்.

இந்த தாய்கள் ஒற்றுமையாக கொண்ட ஒரு விஷயம் குழந்தைகளும், அவர்களை சார்ந்த மூட நம்பிக்கையும்தான்.

உங்கள் தாய்மட்டும்தான் திருஷ்டிக்காக கருப்புபோட்டு அணிய சொல்கிறார் என்று நினைக்கிறீர்களா? கிடையவே கிடையாது. சில பிரபலங்களும் இது போன்ற மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்.

கருப்பு தயிரிலிருந்து   திருஷ்டி வளையல்கள் வரை, எல்லா மூடநம்பிக்கை முயற்சிகளையும் குழந்தைகள்மீது திணிக்கிறார்கள்.இந்த மூன்று பிரபலமான தாய்கள் ஸ்வர்யா ராய் பச்சன், ஷில்பா ஷெட்டி குந்த்ரா மற்றும் கரீனா கபூர் கான்.

கண் பட போகிறது

அண்மையில் ஒரு நேர்காணலில், மூன்றாவது முறையாக தந்தையான சயீஃப் அலி கான் கண் படுவதில் நம்பிக்கை இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

சைஃப், தனது வாட்சாப் புகைப்படமாக, பிறந்த குழந்தை தைமூரின் புகைப்படத்தை வைத்திருந்தார். விரைவில் அது இணையத்தில் பிரபலமானது. கரீனாவுக்கு, தைமூரின் படத்தை வெளியிடுவதில் இஷ்டமில்லை.
ஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும்  பல இந்திய தாய்மார்கள்  பொதுவாக கொண்ட ஒரு விஷயம்

""ஆமாம், அவருக்கு இதில் இஷ்டமில்லை.. குழந்தைமீது கண் பட்டுவிடுமோ என்ற பயம் அவருக்கு இருந்தது. அனால் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.என் குழந்தையை மறைத்து வைக்க அவசியமில்லை. .பிறந்ததிலிருந்தே தைமூர் பிரபலமானதால், அவனை சாதாரண குழந்தைப்போல்வளர்க்க கொஞ்சம் கஷ்ட படுவோம். அவன் எங்கிருந்தாலும் உலகம் அவனை கண்காணித்து கொண்டேதான் இருக்கும்.அதனால், அவனை தன்னடக்கத்துடன் நடந்துகொள்ள கற்றுக்கொடுப்பேன்" என்கிறார் சயீஃப்.

இப்பொழுதுதான், கரீனா மூடநம்பிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஆனால் ஷில்பா, பல வருடங்களாக  மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளார்.

ராகு காலம்

ஷில்பா ஷெட்டி, 'ராஜ்' மற்றும் ' வியான்' என்று பொறிக்கப்பட்ட திருஷ்டி தங்கச் சங்கிலியை அணிவார். அவரது மகன் வியானும் திருஷ்டி தாயத்து அணிவார். தன் குழந்தைமேல் எந்த கண்ணும் படக்கூடாது என்பதற்காக இது போல் சிவப்பு கயிறு கொண்ட வெள்ளி தாயத்தை குழந்தைக்கு அணிவித்தார்.
ஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும்  பல இந்திய தாய்மார்கள்  பொதுவாக கொண்ட ஒரு விஷயம்

ஷில்பா ஷெட்டிக்கு ராகு காலத்தில் பெரும் நம்பிக்கை இருக்கிறது. ராகு காலத்தின் போது எந்த முக்கியமான வேலையும் செய்ய மாட்டார்.

உண்மையில், இந்திய பிரீமியர் லீக் ஆட்டங்களில் ஷில்பா தனது அணியின் வெற்றிக்காக சின்னச்சின்ன பழக்கங்களை மேற்கொண்டார்.

"இதுபோல் வேடிக்கையான மூடநம்பிக்கைகள் நம் எல்லோருக்கும் உண்டு. என் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடும்போது, அவர்கள் வெற்றிக்காக, இரண்டு கடிகாரங்கள் அணிய ஆரம்பித்தேன்.நாங்கள்  ஒவ்வொரு  முறை பேட்டிங் செய்யும்போது, வெற்றிக்காக என் கால்கள் தனித்தனியாக வைத்துக்கொள்வேன். அனால் எதிரணி விளையாடும்போது, கால்களை குறுக்கே வைத்துக்கொள்வேன். இப்பொழுது தாயத்துதான் என் புதிய பற்று" என்கிறார் ஷில்பா ஷெட்டி.

திருஷ்டி பொட்டு

இன்னொரு பிரபலமான தாயான ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு பக்தியும் மூடநம்பிக்கையும் அதிகம் . ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் இருந்ததால், முதலில் இரண்டு மரங்களை திருமணம் செய்து கொண்டார்.இதன் பிறகுதான் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார்.
ஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும்  பல இந்திய தாய்மார்கள்  பொதுவாக கொண்ட ஒரு விஷயம்

தன் குழந்தை ஆராதயாவின் மேல் கண்பட கூடாது என்பதற்காக அவள் இடது கணுக்காலில் திருஷ்டி பொட்டு வைப்பார். பொட்டு அணிவதன் மூலம் ஆராதையாவை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.அவள் பிறந்ததிலிருந்தே, ஒரு கருப்பு திருஷ்டி கயிறோடு காணப்படுவதுடன், இன்றுவரை தொடர்ந்து அணிகிறாள்.

அண்மையில் ஒரு கணபதி பூஜையில். இதே கருப்பு கயிறுடன் தன் தாயுடனும் பாட்டியுடனும் காணப்பட்டார்.

இந்த தாய்மார்கள் பலவகையில் பிரபலமானவர்களாக இருந்தாலும்,தன் குழந்தையின் நலனிற்காக, சில மூடநம்பிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும்,இதை முழுமனதுடன்தான் செய்கிறார்கள்.

Source: theindusparent

Written by

theIndusparent