ஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

ஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

பல பெற்றோர்களுக்கு ,இந்த சிறுவயதோலே குழந்தைக்கு அறமும் நெறியும் கற்றுக்கொடுப்பதை சிறுபிள்ளைத்தனமாக கருதலாம்.இருப்பினும், அந்த கருத்தை மறுபரிசீலனை செய்யலாமா?

நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள், ஐந்து வயதில் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய லட்சியங்களை புரிந்துகொள்ளும் திறமை இருக்கும் என்று நம்புகிறார்கள்

சமீபத்தில், பேரண்ட்ஸ்.காம் ,குழந்தை நன்னெறியுடன் வளர தேவையான ஐந்து குணாதிசியங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள்   தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

1.நேர்மை

எல்லா குணங்களுக்கும் அடித்தளமான மதிப்புகளில் நேர்மை, ஒன்றாகும்.சிறு வயதிலே, உண்மையைக் கூறும் நேர்மையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது முக்கியம். நேர்மையின் மதிப்பை தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க, பெற்றோர்களும் குழந்தைகளிடம் நேர்மையாக இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெற்றோர்கள் நீங்கள்தான் மும்மாதிரியாக இருக்கவேண்டும் .இதைபார்த்துதான், குழந்தைகளும் அவர்கள் நண்பர்களுடன் உண்மையாக நடந்துகொள்வர்.

எதெற்கெடுத்தாலும் கோபப்படாமல், குழந்தைக்கு மும்மதிரியாக இருப்பதுதான் உண்மையாகவே குழந்தைக்கு நேர்மை கற்பிக்க முடியும்.குழந்தை பொய் சொன்னால், அவர்கள் மீது கோபப்படாமல், குற்றவுணர்ச்சி எழும்பாமல் பொறுமையாக உண்மையை வெளிப்படுத்த வையுங்கள்

 
honesty

2. நீதி

உங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது முன்னரே சரி தவறு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் .ஏதேனும் தவறு நடந்தால், நிச்சயம் அதற்கான தண்டனையும் நீதியும் கிடைக்கும் என்று புரியவைக்கவேண்டும்.தண்டனைக்குரிய தவறு ஏதேனும் செய்தால், தாங்கள் செய்த தவறை புரிந்துகொண்டு முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும், பெற்றோர்கள் குழந்தைக்கு எதிராக ஏதேனும் அநீதி ஏற்பட்டால், அதற்கெதிராக போராட வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லித்தரவேண்டும் .மைதானத்தில் ஏதேனும் ஒரு குழந்தை தாக்கப்பட்டால்.அதற்கெதிராக நிச்சயம் உங்கள் குழந்தை தட்டிக்கேட்க ஊக்கப்படுத்துங்கள்.அநீதிக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க சொல்லிக்கொடுங்கள்

ஐந்தாவது பிறந்த நாளுக்குள் உங்கள் குழந்தை புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

3. உறுதி

ஒரு குழந்தைக்கு கற்பிப்பதற்கான எளிதான அறம், உறுதி.பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைக்கு உறுதியை எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள் .தாங்கள் செய்யவேண்டிய சாதாரண விஷயஙங்களுக்கு அதிகமாக பாராட்டாமல் இருப்பதே இந்த குணத்தை மேம்படுத்தி வளர்க்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் குழந்தை பல் துலக்கினால், அதற்காக  கொண்டாடுவது அவசியமா ? இல்லை, இந்த பழக்கத்தை தினமும் ஊக்குவிக்க வேண்டும்.

உறுதியாக  இருக்கும் குழந்தைகளிடம்தான் பெற்றோர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை (மென்மையான முறையில் ) வழங்கமுடியும்  எளிதில் வராத விஷயங்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்துவதன் மூலம் உங்கள் பிள்ளைகள் தீர்மானத்தை வளர்த்துக்கொள்வதற்கு உதவுங்கள், அவர்களது மும்முயற்சிக்காக அவரை புகழுங்கள்.அவர்கள் ஏதேனும் செய்ய விருப்பப்பட்டால் , அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். ஈடுபட்ட காரியம் வெற்றியாகும்வரையில் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

 
justice 3

4. கருத்தில் கொள்வது

கருத்தில்  வைத்துக்கொள்வது என்பதை கற்பிப்பது பலருக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால், அவர்களுக்கு புரியும் விதத்தில் எளிதாக பாடத்தை  கற்பித்தால், இந்த அறத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம். நீங்கள் யோசித்துப்பார்த்தால், இது அவ்வளவு பெரிய சவாலாக இல்லை

குழந்தைகள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எண்ணவேண்டாம்.அவர்கள் சுற்றியுள்ள மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பதற்கும், கண்டிப்பதும் நன்றாக தெரியும்.சொல்லும் செயலும் ஒருவருக்கு நன்மை தரும் என்பதை குழந்தைகள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.

 
Fotolia_99046308_Subscription_Monthly_M

5 . அன்பு

உங்கள் குழந்தைக்கு உங்கள்மீது அன்பு வெளிக்காட்ட தெரியாதபோதில், அவர்களுக்கு அன்பு இல்லை என்று நினைக்கவேண்டாம்.பெரும்பாலும் பெற்றோர்கள் ,இயற்கையாகவே குழந்தைக்கு அன்பு புரிந்துவிடும் என்று எண்ணுகிறார்கள் .இருப்பினும், குழந்தைகள் வளர வளர அன்பை புரிந்து கொள்ள, அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் மீது அன்பை வெளிகாட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.

மீண்டும் ஒருமுறை, பெற்றோர்கள்தான் மும்மாதிரியாக வழிநடத்த வேண்டும்.உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் பண்பும்தான் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம். உங்கள் துணையிடமும் குழந்தைகளிடமும் அன்போடு நடத்துங்கள் உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றி அடிக்கடி  பேசுங்கள்.உங்கள் பெற்றோரிடம் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் பற்றியும் பேசுங்கள்.

mom and kids drink milk

 

முதலில் சொன்னதுபோல், குழந்தைகளின் மனதில்  எளிதில் விஷயங்களை பதியவைக்க முடியும்.அதனால் உங்கள் குழந்தை நீங்கள் வெளிக்காட்டும் அன்பை பார்த்துதான் அவர்களால் தங்கள் அன்பை வெளிப்படுத்தமுடியும்

இந்த கட்டுரை பேரண்ட்ஸ்  நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது

Written by

theIndusparent