ஏன் என் குழந்தைக்கு எடை குறைகிறது?

ஏன் என் குழந்தைக்கு எடை குறைகிறது?

" ஏன் என் குழந்தைக்கு எடை குறைந்து கொண்டே போகிறது" என்று யோசித்ததுண்டா?உங்கள் குழ்நதையின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் உடனடியாக கவனம் செலுத்த தொடங்குங்கள் .

குழந்தையின் உடல் நலக்குறைவுதான் தாயின் மிகமுக்கியமான கவலையாகும்.  உணவு, உடல் நடவடிக்கைகள், தூக்கம் ஆகியவற்றை நீங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும், குழந்தையின் எடை குறைந்துகொண்டே போவது சற்று கவலைக்குள்ளாகும் விஷயம்தான்.

"என் குழந்தை எவ்வளவு எடையை கொண்டிருக்க வேண்டும்.என் பிள்ளைக்கு போதுமான அளவு உணவளிக்கவில்லையா? உடல்நிலை  சரியில்லாமல்  போனதா?

உங்கள் குழந்தையின் எடை இழப்பை கவனித்தும் அதற்கான விளக்க கிடைக்கவில்லையெனில்,இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

ஏன் என் பிள்ளைக்கு எடை குறைகிறது?

ஏன் என் குழந்தைக்கு எடை குறைகிறது?

எடையில் கூட்டல் குறைவு இருப்பது சகஜம்தான். இருப்பினும் அதி விரைவாக குழந்தைக்கு எடை இழப்பு ஏற்பட்டால், பெற்றோர்களுக்கு அதிகப்படியான கவலை ஏற்படுத்தும்.

பருவமடைதல் , குழந்தைகளின் எடை இழப்பில்  முக்கிய பங்கு வகிக்கும்.

ஆண்களின் ஆண்குறி வளர்ச்சி , பெண்களின் மார்பக வளர்ச்சி மற்றும் உயரத்தின் வளர்ச்சி போன்ற  பல்வேறு உடல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.இதனாலும்  எடை இழப்பு ஏற்படும்.

எளிதாக கலோரிகளை செலவழித்தாலோ ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமலோ , நோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வளர்சிதைமாற்றம் குறைவாக இருந்தால் குழ்நதைகள் பெரும்பாலும் எடை இழப்பார்கள்.

குழந்தையின் எடை இழப்பு அவர்களின்  ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வளர்ச்சி மீதான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

குழந்தை மீது ஏதோ குறை இருப்பதுபோல் பாவிக்கவேண்டாம். ஒரு நபரின் உடல்நிலை அவரது எடையால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பற்றி புரிந்துகொள்ளலாம்.

 

குழந்தையின் சிறந்த எடை என்ன?

 

குழந்தையின் உடல்நிலையை சரிபார்க்க, அவருடைய உடல் நிறை குறியீட்டை (BMI) சரிபார்க்க வேண்டும்.வயதிற்கேற்ற உயரமும் எடையும் சரியாக சுட்டிக்காட்ட உதவும்.

உங்கள் டாக்டரிடம் ஆலோசனையா பெறலாம், இல்லையேல் BMI கால்குலேட்டரை வாங்கிக்கொள்ளலாம்.உடல் கொழுப்பையும் , வயதிற்கேற்ற எடையை கண்காணிக்கவும் உதவும்.

டாக்டர் நான்சி டான், கிளென்ஈகிள்ஸ்   மருத்துவ மையத்தில் பணிபுரியும் குழந்தை நல மருத்துவர், ஏசியன் பேரண்ட்  நிருபர்களான எங்களிடம் உடல் நிறை குறியீட்டை (BMI) பற்றி விளக்கினார்.

 

மருத்துவரின் கூற்று

உடல் நிறை குறியீட்டு அல்லது பிஎம்ஐ என்பது ஒரு நபரின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரின் உடற்பருமனின் நிலையை கணக்கிடுவதற்கு உதவும்.ஒரு நபரின் உடல் எடையை அவருடைய உயரத்தால் வகுத்து கணக்கெடுக்க உதவும்.ஒருவரின் வயதையும் அவரது இனத்தையும் சார்ந்த வேறுபாடுகள் இருக்கும்.

பல்வேறு உடல் வகைகளால், தென் கிழக்கு ஆசியர்களுக்கு உடற்பருமன் ஏற்படும் வாய்ப்புகள் , மேற்கத்திய சகாக்களுடன் ஒப்பிடுகையில் குறைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பிஎம்ஐ பெரியவர்களை விட குழந்தைகளுக்கு வித்தியாசமாக அளவிடப்படுகிறது.ஆரோக்கியமான எடை வீச்சு தீர்மானிக்க , குழந்தைகளின் பாலினமும் வயதும் தேவைப்படும்.

இந்த காரணிகள் அனைத்தையும் மனதில் கொண்டு,குழந்தையின் ஆரோக்கிய எடையை தீர்மானிக்க முயற்சிக்கும்போது , வீட்டில் பயன்படுத்தப்படும் BMI கருவி சிக்கலாக இருக்கும்.எடை குறைவு ஏற்பட்டால், உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

பிஎம்ஐ அட்டவணையை படிப்பது  எப்படி ?

ஒவ்வொரு பிஎம்ஐ தரவரிசை அளவு சதவிகிதமாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளையின் எடை சதவிகிதம் ஐந்திற்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு எடை  குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

உங்கள் பிள்ளைக்கு எடை குறைந்து விட்டால்,உணவு மற்றும் உடல் செயல்பாடுகளுடன் உதவி தேவைப்படும் என்பதை தீர்மானிக்கவும் இந்த அட்டவணை தேவைப்படும்.

தனது வயது மற்றும் உயரத்திற்கு ஆரோக்கியமான எடையை பெற  சில உணவு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் பரிந்துரைக்க கூடும்.

உங்கள் பிள்ளையின் திடீர்  எடை இழப்பு  பல நோய் காரணிகளோடு சேர்ந்திருந்தால், அப்பொழுதுதான் கவலைகொள்ளவேண்டும். எனவே, உங்கள்  பிள்ளையின் தினசரி வாழ்க்கை மற்றும் உணவு முறையை கவனிக்கவேண்டும்.

 

குழந்தைகள் எடை இழப்பிற்கான சாத்தியமான காரணங்கள் என்ன?

பின்வரும் அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால், விரைவாக எடை இழக்க தொடங்குவர்.பெரும்பாலான சூழ்நிலையில்,  எடை இழப்பு ஒரு பெரிய அடிப்படை மருத்துவ சிக்கலின் முதல் அடையாளமாக இருக்கலாம்.

எனவே, இவை உடலின் சாதாரண மாற்றங்கள் என்று மட்டுமே புறக்கணிக்க முடியாது

 • ஜுரம்
 • நீர்ப்போக்கு
 • சிறுநீர் குறைதல்
 • வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி
 • குளிர் மற்றும் இருமல்
 • தொண்டை வலி
 • மார்பு மற்றும் காது வலி
 • தூக்கமின்மை
 • மன அழுத்தம்
 • பிலுமியா அல்லது அனோரெக்சியா  போன்ற உணவு சீர்குலைவுகள்
 • குழந்தை பருவ புற்றுநோய்
 • இரைப்பை குடல் பிரச்சினைகள்

இந்த அறிகுறிகளை உங்கள் குழந்தையிடம் தென்பட்டால், நிச்சயம் மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.இந்த அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால்,

ஊட்டச்சத்து பொறாமல் இருக்கலாம்.

குழந்தையின் எடை எப்படி அதிகரிக்க உதவுவது?

பிள்ளையின் எடையை அதிகரிக்க, அவரது உணவை

பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.

 • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களுடன் கொண்ட ஆரோக்கியமான உணவு, குழந்தையின் எடையை நிச்சயம் அதிகரிக்கும்.
 • பல்வேறு விதமான பழ வகைகள் மற்றும் காய்கறிகளை கொடுக்கவும்.
 • அரிசி, உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் கூட பாஸ்தா உட்பட கார்போஹைட்ரேட் உணவை கொடுங்கள்
 • பால் மற்றும் பால் பொருட்கள் கொடுக்கலாம்
 • முட்டை, மீன், பீன்ஸ், பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்
 • குறைந்தபட்சம் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவேண்டும்

உணவு மாற்றம் மட்டுமல்லாமல், குழந்தைக்கு மன சோர்வு இல்லாத வாழ்வும் நல்ல ஓய்வும் தேவை.மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.  

Written by

theIndusparent