என் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை  நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்

என் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை  நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்

குழந்தைகள் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் முன் பசை போன்று ஒட்டிக்கொண்டிருப்பதை நாம் விரும்பாவிட்டாலும், அவர்கள் வயதிற்கு பரிந்துரைக்கப்பட்ட திரை நேரத்தை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பது சொல்லப்படாத உண்மை.

நாம் தாய்மார்கள், அழையா விருந்தாளிகளுக்கு சமைக்கும்போதும், அலுவலக காலக்கெடுவிற்குள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும்போதும், நம் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள தொலைக்காட்சியின் உதவியை நாடுவோம்.  அச்சமயத்தில் அது நமக்கு கடவுளை போல தோற்றம் அளிக்கும்.

ஒரு சராசரி இந்திய குடும்பம் போல், நாங்களும் எங்களது நான்கு வயது மகளுடன் இப்பிரச்சனையை எதிர் கொண்டோம். பிறகு தொலைக்காட்சி இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம். அனால், இதை சொல்வதை விட செய்து காட்டுவது கடினம் என்று புரிந்து கொண்டோம்.

TV

மேலும், தொலைக்காட்சியை விட பல ஒளிச்சித்திரங்கள் இக்காலத்தில் உள்ளது ( ஆம், நாம் ஸ்மார்ட்பஹோனே, ஐபாட் போன்றவைதான்) தொலைக்காட்சி அணிந்திருக்கும் சமயம், பிள்ளைகள் தங்கள் பொழுதுபோக்கிற்காக வேறு திரைகளை நோக்கி செல்லும்.

எனினும், இதை தடுக்க வேறு வழிகள் இல்லை என்று அர்த்தமில்லை  நான் எடுத்த முக்கியமான முடிவை பட்டியலிட்டுள்ளேன். பார்த்து பயனடையுங்கள்!.

முற்றிலும் அகற்ற வேண்டாம் அளவிற்கு மிஞ்சியதெல்லாம் நன்மையை விட தீங்கு அதிகம் விளைவிக்கும். ஆனாலும், சில பழக்கங்களை முற்றிலும் அகற்றுவது கடினம். திரை நேரத்தை அடியோடு நிறுத்தாமல்,கொஞ்சம் கொஞ்சமாககுறையுங்கள். இச்ச்செயல் குழந்தைகள் பழக்கப்படுத்தி கொல்வதற்கு எளிதாக அமையும்.

உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு குறைந்து 3 மணிநேரம் நீடித்து  பார்க்கும் பழக்கம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். முதலில், அதை இரண்டு ஒருமணி காட்சி நேரமாக பிரித்து கொடுங்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு, 40 நிமிடமாகவும், மூன்றாவது வாரத்தில் 30 நிமிடத்திற்கு குறையுங்கள்.

நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த 30 நிமிட காலவரம்பிற்குள், குழந்தையும் திரை நேரத்தை அமைப்பதும் , துண்டிப்பதும் உங்கள் விருப்பம்.

திசை திருப்புங்கள்  தொலைக்காட்சியை தவிர வேறு பொழுதுபோக்கு இல்லாத குழந்தையை, வேறு எதையாவது செய்ய சொல்வது அபத்தம். மாறாக, அவர்கள் மனதை திசை திருப்ப வேறு வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

அவர்களுடன் நேரத்தை செலவிட்டு விருப்பு வெறுப்புகளை கண்டறியுங்கள். தொலைக்காட்சியின் தீமைகளை நிதானமாக எடுத்து சொல்லுங்கள். குழந்தையாக மட்டும் பாவிக்காமல், உங்களுக்கு சமமான ஒருவரை போல் நடத்துங்கள். அவர்களின் நிறைகுறைகளை கேட்டு, ஆலோசித்து,உற்சாக படுத்த்துங்கள்.

சொல்வதை செய்யுங்கள் குழந்தையை படிக்க சொல்லிவிட்டு, நீங்கள் நெடுந்தொடர் பார்ப்பது நியாயமல்ல.அத்தகைய சூழலில், தான் வேண்டுமென்றே தண்டிக்கப்படுவதாகவும்,தனக்கு விரும்பாத காரியத்தை செய்ய சொல்லி வற்புறுத்தப் படுவதாகவும் தோன்றும். மேலும்,கவனம் சிதறி ஈடுபட்ட காரியத்தில் செயல் பட முடியாது.

உங்கள் குழந்தையின் நலனிற்காக, அவர்கள் பள்ளி மற்றும் உறங்கும் நேரத்தில் மட்டும் தொலைக்காட்சி கண்டு களியுங்கள். அவர்கள் இருக்கும் சமயத்தில், தொலைக்காட்சி இல்லாத வாழ்க்கையை வாழ உதவுங்கள்.

இக்கடுமையான சூழ்நிலையில், என் மகள் படிக்கும்போதும் விளையாடும்போதும் நான் ஆதரவாக இருக்கிறேன்.  நெடுநாள் பழக்கத்தை மாற்றுவது மிகவும் கடினம்.உங்களுக்கு பிடித்த உணவோ அல்லது தினசரி குடிக்கும் ஒரு குவளை தேநீரை விட்டு கொடுப்பது எவ்வளவு கடினம் என்று யோசித்து  பாருங்கள்.உங்கள் குழந்தையின் வலியை புரிந்து கொள்ளுங்கள். உனக்கு நான் எப்பொழுதும் பக்கபலமாக இருப்பேன் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுங்கள்.

Source: theindusparent