என் மகள்கள் 8 மணிக்கே தூங்கிவிடுவார்கள். இப்படிதான் அவர்களுடைய பழக்கத்தை மாத்தினேன்
பல தாய்மார்களையும் ஒன்றாகப் பிணைந்த பல விஷயங்களில் ஒன்று, தங்கள் குழந்தைகள் எவ்வளவு தாமதமாக தூங்குகிறார்கள் என்பதுதான். மேலும், அவர்களை தூங்க வைக்க அவர்கள் படும் பெரும்பாடும் இதில் அடங்கும்.
" என் மகள் கஷ்டப்பட்டு 1 மணிக்குதான் தூங்க செல்வாள்"
" நான் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்கள் நேரத்திற்கு தூங்க போவதில்லை.நானும் முயற்சிப்பதை விட்டுவிட்டேன்"
" இரவு 2 மணி வரைக்கும் பிஸியாகவே இருக்கிறாள்"
நான் தாயானதிலிருந்து நான் கேட்ட வாக்கியங்கள் சில இவை. எனக்கு தெரிந்தவரை, நான் கர்பமானதிலிருந்து இள தாய்மார்கள் சிலர் "இப்பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் தூங்கிகொள். பிரசவத்திற்கு பின் குழந்தை தூங்கவே தூங்காது" என்பார்கள்.
என் மகள் பிறந்த முதல் ஆண்டு மிகவும் கடினமாகத்தான் இருந்தது ....
முதலில், அச்சுறுத்தலாகவே இருந்தது.அனைத்து புதிய அம்மாக்கள் போல, என் முதல் மகள் பிறந்த பின் பயங்கர சோர்வாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது.பல நாட்கள் இரவா பகலா என்றே தெரியவில்லை.விநோதமான நேரங்களில் என் மகள் விழித்து கொள்வாள். சில நாட்கள், பகலில் தூங்கவே மாட்டாள். சில நாட்கள், அவள் தூங்க வைக்க பாடுபடும் நேரத்தைவிட குறைந்த நேரத்திற்கே தூங்குவாள்.
நான் ஒரு மணி நேரம் தூங்க வைக்க முயற்சி செய்தால், 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவாள். இதே பிரச்னை சுழற்சியில் தொடங்கும்.முதல் வருடத்தில், காலையில் குட்டி தூக்கம் போட்டுவிட்டு, இரவு முழுதும் விழித்துக்கொண்டு ஆட்டம்போடுவாள்.
எனக்கு மயக்கம் வரும் சமயத்திலும், அனால் கொஞ்சம்கூட ஓய்வெடுக்காமல் விளையாடி கொண்டிருப்பாள்.1 - 2 மணிவரை முழித்துக்கொண்டு, பிறகு 6 மணிக்கு விழித்துக்கொள்வாள்.
நான் இரண்டாவது முறையாக கர்ப்பமானபோது,ஒரே விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன். இதே தூக்க பிரச்னையும் சிக்கல்களும் திரும்ப வரக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். பெற்றோருக்குரிய புத்தகங்களை படிப்பதை நிறுத்திவிட்டேன்.குழந்தைகள் அதிக நேரம் விழித்துக்கொள்வது சாதாரணமான விஷயம் என்று எண்ணுவதை நிறுத்தினேன்.என் வழியில் சில விஷயங்களை சோதித்து பார்க்க முடிவெடுத்தேன்.
இரண்டாவது குழந்தையுடன் என் திட்டம்
முதல் 4 மாதங்களுக்கு,நான் எளிதாக எடுத்துக்கொள்ள முடிவு செய்தேன். எனக்கு வலி, அசௌகரியம் மற்றும் அழுகை அதிகமாக இருந்தது. அதற்குமேல்,என் குழந்தைக்கு வாயுப்பிடிப்பு அதிகமாக இருந்தது. அதனால், அவளை எளிதில் தூங்கவைக்க முடியவில்லை.5 மாதங்களுக்கு மேல், அவளது வாயு பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்தது. இப்பொழுதுதான், என் குழந்தையின் தூக்க பழக்கத்தை மாற்ற சரியான நேரம் என்று முடிவெடுத்தேன்.
நான் செய்தது இதுதான்
என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது என் முதல் மகளுக்கு 6 வயது.என் முதல் பகல், அவள் அப்பாவுடன் தூங்கும் சமயம் நான் என் இரண்டாவதுடன் தூங்குவேன்.முதலில் என் முதல் குழந்தைக்காக நேரம் ஒதுக்கி, அவளது தூக்க பழக்கத்தை சரிசெய்ய முடிவெடுத்தேன்.அவள் குட்டித்தூக்கம் போட்டால், ஒரு மணிநேரத்திற்குமேல் தூங்க விடமாட்டேன்.அவளை நிறைய விளையாடவிட்டு, அவளை சோர்வாகி விடுவேன்.
டின்னர் 6:30 மணிக்கு தயாராக இருக்கும். 7 மணிக்குள் அவளை சாப்டிடா செய்வேன். ஏறக்குறைய 7:15 அளவில் ஒரு டம்பளர் பால் குடித்து , என்னுடன் உக்கார்ந்து சில கதைகள் படிப்பாள்.அதற்குப் பிறகு, 7:30 மணியளவில், எல்லா விளக்குகளையும் அணைத்துக்கொண்டு அவள் அப்பாவுடன் படுத்துக்கொள்வாள். அவர் 9 அல்லது 9:30 வரை விழித்துக்கொண்டிருந்தாலும், படுக்கையில்தான் இருப்பாள்.
அவள் எழுந்துக்கச்சொல்லி கேட்டாலும் அவள் அப்பா விடமாட்டார்.என் மகளை கட்டுப்படுவதற்கும், தன்னைத்தானே கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கும் என் கணவர் தன்னால் முடிந்த முயற்சி எடுத்தார்.பல நேரம் ஒன்றும் செய்யாமல் படுத்துக்கொண்டிருப்பார்.
என் இரண்டாவது குழந்தையை 6 மணிக்கே குளுப்பாட்டிவிடுவேன்.பிறகு, மெதுவாக பேசி, மசாஜ் செய்துவிட்டு, தலையை தடவி கொடுக்க ஆரம்பித்துவிடுவேன்.என் முதல் மகள் தூங்க சென்ற பின், என் இரண்டாம் மகளுக்கு பாலூட்டி அவள் பக்கத்துலே படுத்து கொள்வேன்.
அவளுக்கு பசித்தால், படுத்துக்கொண்டே பாலூட்டிவிடுவேன்.குழந்தைகளுக்கு கவனம் சிதறாமல் இருப்பதற்கு, நானும் என் கணவரும் ரூமில் செல்போன் வைப்பதை நிறுத்திவிட்டோம். முதலில்,குழந்தை பல மணிநேரத்திற்கு விழித்துக்கொண்டு இருப்பாள். படிப்படியாக, 8 வது மாதத்தை அடைந்தவுடன்,நீண்ட நேரம் தூங்க ஆரம்பித்தாள்.பல மணி நேரத்திற்கு அவள் தூக்கம் நீடிக்கும்.
இன்று, என் மகள்களுக்கு 4 மற்றும் 10 வயதாகிறது. மூத்தவள், 7 மணிக்குள் டின்னர் சாப்பிட்டு 8 மணிக்கு தூங்கிவிடுவாள்.நாங்கள் வீட்டில் இல்லை என்றால், அவளுக்கு 8 மணிக்குமேல் விழிப்பது கடினமாக இருக்கும்.பகல் தூக்கத்தை நிறுத்திக்கொண்டாள்.
நான்கு வயதான இளைய மகள், பகலில் தூங்குவதை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்கே டின்னர் சாப்பிட்டுவிட்டு , 7 மணிக்குள் தூங்கிவிடுவாள்.
குழந்தைகள் இருவரும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டார்கள். காலை 6 .30 மணி அளவில்தான் விழித்துக்கொள்வார்கள்.