என் சுக பிரசவத்தில் எந்த சுகமும் இல்லை

lead image

மீனாட்சி ஐயர் தனது பிரசவ கதையை பகிர்ந்துகொள்கிறார். அவருடைய, சுக பிரசவம் எவ்வாறு அதிர்ச்சிகரமாக மாறியது என்பது பற்றியும் சொல்கிறார்.

என் கர்ப்பத்தின் ஒன்பது மாதங்கள் சந்தோஷமாக இருந்தது.( முதல் மும்மதத்தில், வயிற்றில்  வளரும் சிசுவிற்கு ஏற்றாற்போல் உங்கள் உடல் மாறவேண்டும்.நோய், நெஞ்செரிச்சல், கடுமையான கவலை, தீவிரமான ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றையும் யோசித்து பாருங்கள் )

என் டெர்மின் இறுதிநாள்வரை என்னால் வேலைக்கு போக முடிந்தது.என் சரியான உடற்கட்டினால், என் வாழ்க்கையை இயல்பாகவே வாழ முடிந்தது. வயிறு வளர்ப்பும், கடுமையான சோர்வும்  தவிர வேறு எந்த ஆரோக்கிய பிரச்னையும் நான் சந்தித்ததில்லை.

எனக்கு குழந்தை பிறந்து  5 மாதங்கள்  ஆகிவிட்டன. இந்த அதிர்ச்சிகரமான பிரசவ தாக்கத்திலிருந்து என்னால் இன்னமும் மீள முடியவில்லை.

இன்னும் 10  நாளில் குழந்தை டியூ

டிசம்பர் 15 , என் குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள், என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்.என் கணவரும் நானும் இரவு உணவை முடித்துவிட்டு,எப்பொழுதும் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்தோம். குழந்தை ஒரு 9.30 மணியளவில் அதிக அளவு உதைகள்  தொடங்கியது.அன்று காலையில்தான் நாங்கள் டாக்டரிடம் சென்றோம். குழந்தை வெளியே வர இன்னும் 10  நாட்கள் ஆகும் என்றதால் இதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இரவில் நேரம் ஆக, உதைகள் தீவிரமாகத் தொடங்கியது.எனக்கு தூங்கிவதில் சிரமம் இருந்ததால், நானும் என் கணவரும் பேசிக்கொண்டுதான் இருந்தோம். 2.30 மணியளவில் எங்கள் கண்களை மூடிவிட்டோம்.

அந்த இரவு, என் நீர்கூடம் உடைந்ததுபோல் கனவுகண்டேன். உடனடியாக விழித்துக்கொண்டபோது, என் கனவு நிஜமாத்தாய் அதிர்ச்சியுடன் உணர்ந்தேன். 3.45 மணியளவில், அம்னோடிக் திரவத்தில் மூழ்கி இருந்தேன். எந்தவித பயமும் இல்லாமல், நிதானமாக எழுந்து பாத்ரூமிற்கு சென்றேன்.

கழிவறையில் அமரும்போது, இரத்தம் மற்றும் சளி நீரோட்டம் என் உடலிலிருந்து அதிகமாக வெளிவந்தது.அனால் நான் பதட்டப்படவில்லை. நான் மருத்துவமனைக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. என் குழந்தை வெளியே வரப்போகிறாள்.

 

என் சுக பிரசவத்தில் எந்த சுகமும் இல்லை

Artwork courtesy: Indu Harikumar for the India Birth Project

என் கணவர் என்னுடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை

என் கணவர் என்னை அருகில் அனுமதிக்கவில்லை.அவர் தொலைவில் இருந்து பார்க்கத்தான் முடியும். அவர் தொடர்ந்து அனுமதிக்க படுமாறு வேண்டுகோள் விதித்தார். அனால் இது அவர்கள் காதில் விழவில்லை.என் கையை பிடித்து எல்லாம் சரியாகத்தான் நடக்கும் என்று உறுதியளிக்கத்தான் அவர் ஆசைப்பட்டார். நான் வழியில் அழுது கத்தும்போது, அவர் அறையை பல முறை வெளியேறும்படி கேட்டுக்கொள்ள பட்டார்.

9.30 மணியளவில், என் உடல் சீக்கிரம் விட்டு கொடுக்க ஆரம்பித்தது.பிகோடினின் வலுவான டோஸினால், என் உடலால் இயற்கையாகவே பிரசவிக்க முடியாது.வலி தாங்க முடியாததால், எபிடியூரல் கேட்டேன்.

ஒரு சில நிமிடங்களுக்கு உணர்ச்சியில்லாமல் இருந்தேன் .அனால் மீண்டும் வலி தொடங்கியது.இப்பொழுது 8 செ.மீ. டியலேட் ஆகிவிட்டது. அனால், இன்னும் குழந்தை வெளிவரவில்லை.  வலுவான டோஸ் பிகோடினும்  எபிடியூரலும் கொடுக்கப்பட்டது.

11.15 மணியளவில், என் குழந்தையை புஷ் செய்ய மருத்துவர் அறிவித்தார். அனால் என்னால் எதை புஷ் செய்யமுடியும்? எனக்குதான் வயிற்றிக்குக்கீழ் உணர்ச்சியே இல்லேயே. கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் புஷ் செய்ய தொடங்கினேன். ஒரு கட்டத்தில் , என் அனிஸ்தேடிஸ்ட், என்மேல் அமர்ந்து பிரஷர் செய்ய தொடங்கினார்.ஒழுங்கான தகவல் இல்லாமல் புஷ் செய்ய தொடங்கினேன்.

இறுதியாக, 11.39am மணிக்கு, எனக்கு ஒரு மெல்லிய அழுகை குரல் கேட்டது,  ஒரு நிமிடம் என் கண்களை மூடிக்கொண்டேன். எபிசோடோட்டமி ( வஜினாவில் வெட்டி குழந்தையை எடுப்பது) செய்துதான்  என் மகளை பெற முடிந்தது. இந்த முறை வேண்டாம் என்று அடிக்கடி என் டாக்டர்களிடம் சொல்லிருக்கிறேன். அனால், இந்தியாவில் இதுதான் நிலையான நடைமுறை என்று கூறப்பட்டது . இன்னும் கடுமையாக வலியுறுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

என் குழந்தையுடன் தோல்-க்கு-தோல் தொடர்பைக் கேட்டுக் கொண்டிருப்பதால்,அவளை சுத்தம் செய்வதற்கு முன்பு 30 வினாடிகளுக்கு அவள் என் மார்பில் வைத்திருக்கப்பட்டது. மயக்கத்தில் கூட, என் மனப்பான்மையைப் பற்றி என் அனிஸ்தேடிஸ்ட்  கேலி செய்தது என் காதில் விழுந்தது.

என் வஜினாவில் ஆழ்ந்த வெட்டினால்  (சுமார் 10 செ.மீ.), இரத்தம் இழந்து,   என் ஹீமோகுளோபின் அளவு குறைந்தது.  எனக்கு இரண்டு பாட்டில்கள் ஹீமோகுளோபின் கொடுக்கப்பட்டன. அது வேலை செய்யாதபோது, சுத்தமான இரத்தம் வழங்கப்பட்டது.நான் நான்கு நாட்களை மருத்துவமனையில் கழித்தேன், ஐ.வி இணைக்கப்பட்டு, வலியுடன் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன்.

ஊசிக்காக என் கைகளை குத்தி குத்தி , வலி இல்லாமல் என்னால் கையை தூக்க முடியவில்லை. இதனால் நரம்பு சேதத்தை விளைவித்தது, அப்போதிலிருந்து, பல சிக்கல்கள் தோன்றின. த்ரோபோபிலிட்டிஸ், பிசூர், கொக்கிக்ஸின் தீவிர வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.என் குழந்தையின் சிரிப்பும், என் குடும்பம் மற்றும் நண்பர்களின் அன்பு மற்றும் ஆதரவினால் என்னால்  சமாளிக்க முடிந்தது.

இப்பொழுது என் மகளுக்கு ஐந்து மாத வயது.அவள் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும், IV ஏத்திய வலியுடன் தாய்ப்பாலூட்டி கொண்டிருக்கிறேன். என்னால் 5  நிமிடங்களுக்கு மேல் ஒழுங்காக உட்கார முடியவில்லை.அனால் நான் தாய்ப்பால் ஊட்டுவதில் உறுதியாக இருந்தேன். வலி சமாளிக்க முடியாமல் சமாளித்தேன். ஆனால் ஒரு தாயாக எனது உரிமைகளை உறுதிப்படுத்தாததால் எனக்கு கஷ்டமாக இருந்தது.

என் குழந்தைக்கு ஒரு நல்ல தாயாகவும், கவனிப்பாளராகவும் இருக்க முயற்சித்தேன். என் பிரசவம் மென்மையாக  இருந்தால், இன்னும் அதிகமாக செய்திருப்பேன்.தன் பிரசவ முறையை தேர்ந்தெடுக்க ஒரு தாய்க்கு உரிமை இல்லை என்பது கசப்பான உண்மை.பெற்றோரின் உரிமைகளை துரதிருஷ்டவசமானதாக ஒரு கேலிகூத்தாக மாறிவிட்டது.

இந்திய பர்த் பிராஜெக்ட்- டின் ஒரு பகுதியாக மீனாட்சி ஐயரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்திய பர்த் பிராஜெக்ட் என்பது பிரசவத்தின் ஏற்ற தாழ்வை பற்றிய தொகுப்பு.. உங்கள் கதையை பங்களிக்க, [email protected] க்கு மின்னஞ்சலை விடுங்கள்

Source: theindusparent