என் கொடுமைக்கார மாமியார் என் திருமண பந்தத்தை உடைத்தார்

என் கொடுமைக்கார மாமியார் என் திருமண பந்தத்தை  உடைத்தார்

எனக்கு திருமணமாகி ஒரு மாதத்தில், என் மாமியார்தான் எல்லா முடிவுகளையும் எடுக்க ஆரம்பித்தார்

ரீட்டாவும்* ராஜும்* மருத்துவ கல்லூரியில் இருவரும் படிக்கும் போது விரிவுரையகத்தில் சந்தித்தார் . மருத்துவ மாணவர்களாக ஒரு கல்லூரி பிராஜெக்ட்டிற்காக இணைக்கப்பட்டனர். மறுக்கமுடியாத நட்பு காதலாய் மாறி, விரைவில் டேட் செய்ய தொடங்கினார்கள்.

6 ஆண்டுகளுக்கு பிறகு, ராஜ் ரீட்டாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்வதற்காக சம்மதம் கேட்டார். அவர்களது திருமணம்

அற்புதமானதாக நடந்தது.அனால் அந்த உறவை முறித்தது அவரது மாமியார். " அவர்  தந்திரமானவர் , போட்டியாளர் மற்றும் மிகவும் நச்சுத்தன்மை உடையவராகவும்  இருந்தார்"

எங்களுடன், தன் வீட்டிலுள்ள மிக மோசமான நிலைமையை பற்றி ரீட்டா மனம் விட்டு பேசினார்.

அவரது கதை ...

எனக்கு நிச்சயம் ஆனதற்கு முன்பே என் மாமியாரிடம் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. ஆளுமை, கருத்து, வாழ்க்கை முறையில் கருத்து வேறுபாடு  என்றுபல இருந்தது.தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் மனப்பான்மையும், எதற்கெடுத்தாலும் நாடகம் நடத்தும் சுபாவம் கொண்டவர். ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்!
saas-bahu-new

குற்ற உணர்ச்சி தூண்டுபவராகவும்  பழிவாங்குபவராகவும் என் மாமியார் இருந்தார்.. ஒரு பாலிவுட் தொலைக்காட்சி தொடரில் வரும் கொடுமைக்கார மாமியார் போலதான் என் மாமியார். இந்தியா மாமியாராக இருப்பதால். பாரம்பரியமாகவும் பழமைவாதியாகவும் அவர் இருப்பார் என்று எதிர்பார்த்தது உண்மைதான்.இதை என்னால் சகித்துக்கொள்ள முடியும் என்றும் நினைத்தேன்.  

எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ராஜை நேசித்தேன். அவருக்காக எதையும் செய்ய துணிந்தேன். . நான் விரும்பிய பிரகாசமான எதிர்காலத்தைத்தான் நான் நினைத்து கொள்வேன். சொந்த வீடு, குழந்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போல் கனா கண்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து கொண்டேன்.

என் மாமியார் ஒரு சர்வாதிகாரி

எனக்கு திருமணமான ஒரு மாதத்தில், எனக்காக எல்லமுடிவுகளும் என் மாமியார் கீது எடுக்க தொடங்கினார். நான் சாப்பிடுவது, எப்பொழுது ஷாப்பிங் செய்வது, மற்றும் எப்பொழுது தூங்குவது என்று எல்லாவற்றையும் என் மாமியார்தான் முடிவுசெய்தார். அடிக்கடி கடிகாரத்தை பார்த்து" மணி 10 . குழந்தைகளை தூங்க வை. என் மகனை தொந்தரவு செய்யாதே"

இது போன்ற கருத்துகள் என் மனதை காய படுத்தியது. எனக்கும் ஏதாவது திரும்ப சொல்ல தோன்றும். அனால், நான் என்னை கட்டுப்படுத்தி கொள்வேன். அனைவரையும் மகிழ்விப்பததுதான் என் ஒரே  நோக்கம். என் பலவீனத்தை தவறாக பயன்படுத்தினார்.

நான் செய்யும் சிறு சிறு விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பார்.எப்பொழுதும் மதிய உணவை ஓட்டலில் சாப்பிடுவதால், ஒரு இரவு என் கணவருக்காக சமைக்க  முடிவெடுத்தேன். உடனே என் மாமியார் என் சமையலறையில் தன் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, என் சமையல்  முறைகளை அவமானப்படுத்துவார் " உன் அம்மாக்கு உனக்கு சமையல் சொல்லி கொடுப்பதோடு என்ன வேலை?" என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டது.

என்னிடம் சொன்ன பெரும்பாலான விஷயங்களை  நானும் கண்டுகொள்ளவில்லை. என்னிடம் சொன்னதெல்லாம் என் கணவர் ராஜிடம் சொன்னேன் .அனால் ஒரு சின்ன புன்னகையுடன் இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்வதே என்கிறார் . முதல் சில மாதங்கள் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் போக போக என் பொறுமையை சோதிக்க ஆரம்பித்தார்.

என்  தூரத்தை தக்கவைத்து கொண்டேன் . நான் வேலைக்கு சென்று வீடு திரும்பினால், இரவு உணவு வரை என் ரூமிலே இருப்பேன். அனைவரையும் டின்னெரை ஒன்றாக சாப்பிட வைப்பார்.எனக்கு அடைபட்டதுபோல் இருந்தது.என் தூண்டுதலுக்கு பிறகு, என் கணவர் தனி குடிதினத்திற்கு சம்மதித்தார். இந்த செய்தியை என் கணவர் என் மாமியாரிடம் சொன்னபோது. அவர் எரிமலை போல் வெடித்தார்!

அனைவரையும் மரியாதையோடு நடத்தவேண்டும் என்றுதான் எனக்கு சொல்லிக்கொடுக்க பட்டிருக்கிறது.அனால் என் மாமியாரின் நடத்தையால் அவர் மீதிருக்கும் மதிப்பு கொஞ்சம்கொஞ்சமாக குறைந்தது.அவர் நல்லவர்தான். அனால் எங்கள் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக,அவரை பார்த்தாலே எனக்கு கோபம் வந்தது.

இரண்டு மாதங்கள் கழித்து நாங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றோம்.இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக ராஜ் உணர்ந்தார். மிகவும் வருந்தினார். அவரை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.என்னுடன் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க ராஜும் ஆவலாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன் (நான் கர்ப்பமாக இருந்தேன்).

முதல் குழந்தை பிறந்தது

முதல் வீடும் முதல் குழந்தையும் எங்களுக்கு கிடைத்தது.எப்பொழுதும் சோர்வுடனும் மூட் அவுட்டிலும் இருந்தார்.எங்களிடமிருந்து எங்களுக்கே உண்டான  சிறப்பு தருணங்களை அவர் தாய் திருடினார்.என்னால் அதை திரும்ப பெறவே முடியாது.இதற்காக அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.

" நீ வீட்டை விட்டு வெளியே சென்றால் உன் வீடு வாசற்படியை மிதிக்கமாட்டேன்" என்று என் மாமியார் நாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்குமுன் சொன்னார்.அந்த வார்த்தையின்படி, எங்கள் குழந்தையை பார்க்க அவர் வரவில்லை . என் கணவர் இதைக்கண்டு மிகவும்வருந்தினார். அவர் மனம் தளர்வதை பார்க்க முடியாமல், நான் தான் என் கணவரை தன் தாயை வீட்டிற்கு அழைத்துவரும்படி கேட்டுக்கொண்டேன். என் மாமியாரும் ஒப்புக்கொண்டார். எங்கள் வீட்டிற்கு குடி வந்தார்.

ரோஹன்* பிறந்த போது, அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை (மீண்டும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லாததை தவிர). என் விருந்தினர்களுக்கு முன் என்னை அவமானப்படுத்துவார்.ராஜ் மற்றும் அவரது நண்பர்கள், என் உறவினர்களிடம் முன் என்னைக் குறைத்து மதிப்பிடுவார்.சில வருடங்களுக்கு முன்னர் என் பெற்றோர் இறந்துவிட்டார்கள்.என் மன வேதனையை என்னுள்ளே வைத்துக்கொள்வேன்.

ரோஹனை தன் அறைக்குள் கூட்டிச்சென்றுவிடுவார் .பாலூட்டுவதற்கும், விளையாடுவதற்கும் கூட எனக்கு குழந்தையை கொடுக்கமாட்டார்.என்னை விட அவர் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வேன் என்று என்னிடம் சொன்னார்.

இது போன்ற எல்லைகளை தாண்டக்கூடாது என்று என் கணவரிடம் சொல்லி என் மாமியாரிடம் சொல்ல சொன்னேன் .

அவருடன்  கலந்துரையாடுவதை ஒப்புக் கொண்டபின், அவர் அதை இரண்டு முறை செய்ய தவறிவிட்டார். நான் அவரிடம் நேரடியாக சொல்ல தீர்மானித்தேன்.அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி நான் எப்படி உணர்ந்தேன் என்பதை தெளிவாக உணர்த்தினேன்.

ராஜ் என்மீது வருத்தமாக இருந்தார்

அவரை நேரடியாக எதிர்த்தது எனக்கு பெருமையாக இருந்தது.அனால், ராஜ் கலக்கமடைந்தார்.எனக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னாலும், இந்த குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரிவதில்லை.இப்பொழுது என் மகனுக்கு வயது 2 . விஷயம் இன்னும் மோசமாக இருந்தது.என் மாமியார் என் எல்லா முடிவையும் குறுக்கிட்டார். எங்கள் பிரச்னையை கண்டு மன அழுத்தம் கொண்டு இதை பற்றி அவர் பேச மறுத்தார்.

என் கணவரிடம், என் பிள்ளைக்கு நான் ஒரு மோசமான தாயாக பாவித்தார் . நான் அதிக நேரம் அலுவலகத்தில் செலவிடுகிறேன் என்றும், என்னை விடநல்ல மனைவி அவருக்கு கிடைப்பார் என்றும் தகாத முறையில் பேசினார். என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவ்வளவு ஆர்வமாக இருந்தார்.என்னிடம் ஏன் இத்தனை பிரச்னை என்று எனக்கே தெரியவில்லை.

கடந்த மாதம், ராஜ் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். இனிமேல் என்னுடன் வாழவிருப்பமில்லை என்று சொல்லி என்னையும் என் குழந்தையையும் விட்டு வெளியேறினார். என் குடும்பத்தினரிடமும்  நண்பர்களிடமும் இதைப்பற்றி சொன்னேன், பிரச்சனைக்கு எதிர்த்து குரல் கொடுக்காத கோழையுடன் வாழ வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள்.

ஆனால் என் இதயம் அவருக்கு சொந்தமானது. நான் அவருக்காக போராடுவேன் , என் மகன் தன்  அப்பாவுடன்தான்  வளர வேண்டும். இப்பொழுது நாங்கள் தனித்து வாழுகிறோம்.என் மாமியாரால் மாறமுடியாது.ஆனால் என் கணவனுடனும் மகனுடனும் இருக்க நான் மிகவும் விரும்புகிறேன்.

என் கதைக்கு காலம்தான் பதில் சொல்லும்.இந்த வலியை எதிர்கொள்ள வலிமையும் உறுதியும் எனக்கு கொடுக்கும்படி நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.நாங்கள் சீக்கிரம் சேர வேண்டும் என்றும் நான் வேண்டிக்கொள்கிறேன். என் பெற்றோரை இழந்த பிறகு என் கணவனையும் இழந்துவிடுவேன் என்று நான் நினைத்துக்கூட  பார்க்கவில்லை. ஆனால் இதான் வாழ்க்கை. இல்லையா?

*பாதுகாப்பிற்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது

Source: theindusparent

Written by

theIndusparent