என் குழந்தை தன் குழந்தை இல்லை என்று என் கணவருக்கு தெரியாது!

என் குழந்தை தன்  குழந்தை இல்லை  என்று என் கணவருக்கு தெரியாது!

என் கணவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் நான் தொடர்பில் இருந்தேன். இப்பொழுது நான் கர்பமாகிருக்கேன்- சிங்கப்பூர் சார்ந்த தாய் நம்முடன் தன் கதையை பகிர்கிறார்.

என் கணவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் நான் தொடர்பில் இருந்தேன். இப்பொழுது நான் கர்பமாகிருக்கேன்- சிங்கப்பூர் சார்ந்த தாய் நம்முடன் தன் கதையை பகிர்கிறார்.

நான் 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டேன். .அப்பொழுது எனக்கு 27  வயது, என் கணவருக்கு 30 வயது. ஒரு வருடம் கழித்து என் முதல் குழந்தை பிறந்தது. இரண்டு வருடம் கழித்து என் இரண்டாவது  குழந்தை பிறந்தது.

என் கணவர், ஒரு ஆஸ்திரேலியர்.வீட்டிலே இருப்பதற்கு எனக்கு போதுமான பணத்தை சம்பாதித்து கொடுத்தார்.ஆனால் ரியல் எஸ்டேடில் தொடர முடிவெடுத்ததில் உறுதியாக இருந்தேன்.

என் வேலை நேரங்கள் நீடித்து இருந்தாலும், என் பெண் குழந்தைகள் தூங்கின பின்பு நான் வந்தாலும், என் வேலையே விடுவதில் நான் தயாராக இல்லை.

2005 ஆம் ஆண்டில், என் கணவரும் நானும் எங்கள் 5 வது திருமண நாள் கொண்டாடிய பிறகு, என் திருமண பந்தத்தில் உள்ள உற்சாகம் முடிந்துவிட்டது என்று உணர்ந்தேன். என்னை தவறாக எண்ண வேண்டாம். என் கணவர் ராபர்ட், நான் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர்தான். சாக்லேட், ஷாம்பெயின், மற்றும் சிறு சிறு பரிசுகள் கொண்டு என்னை ஆச்சரிய படுத்துவார்.

எனினும், நான் நெய்த  முழு குடும்ப வாழ்க்கையையும் பிடிக்காமல்தான் சகித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வருடம்  வெளிநாட்டில் பணிபுரியும் சந்தர்ப்பத்திற்காக காத்ரிருந்தேன். என்  'அழகிய குடும்பம்' கட்டமைப்பு என்னை சளிக்கவைத்தது.என் குடும்பத்திடம் என் திட்டத்தை நான் தெரிய படுத்தவில்லை. நான் வெளியேறாதான் நினைத்தேன். இதெல்லாம் ஜேக்-கை சந்திக்கும் வரை.

ஜேக் - என் அக்கிலேஸ் ஹீல்

பளபளப்பான புன்னகை, ஆழமான குரல், மர்மமான கண்கள், செதுக்கிய  தாடை - ஜேக் கிரேக்க கடவுள் போல் தோற்றமளித்தான் அவர் புகித் டிமாவில் ஒரு காண்டோவை விரும்பினான். அவன் திருப்தி அடைய ஒரு அபார்ட்மெண்ட் கண்டுபிடிக்க பெரிய அளவிற்கு பாடுபட்டேன்.

பல்வேறு அடுக்குகளை பார்க்க இன்னும் சந்தித்தபோது, நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன். 1 . ஒரு கப் காபிக்காக என்னை சீக்கிரமாகவே சந்திப்பான் 2 ., ஒரு மணிநேரமோ அல்லது 2 மணிநேரமோ எங்கள் சந்திப்பிற்கு முன்னாள் எல்லா வேலைகளையும் கான்செல் செய்துவிடுவேன். அவனது முதலில் காய் நகர்த்த நான் காத்திருந்தேன்.

இறுதியாக அப்பர் புகித் திமாஹில்  உள்ள ஒரு கவர்ச்சியான  இரண்டு படுக்கையறை  அபார்ட்மெண்டை தீர்வு செய்தான்.அவசியமான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டிருந்தபோது,அவனோடு படுக்கையறையை  பகிர்ந்து கொள்ளும் அதிர்ஷ்டமான பெண்ணை நினைத்து நான் பொறாமை பட்டேன்.
affair

ஜெக்கும் ஜானும், முந்தைய வாரங்களில் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். அவனுக்கு  36 வயது. அவரது  தாயார் லெபனீஸ் மற்றும் தந்தை பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்.இளம் வயதிலேயே இங்கிலாந்தின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார். தனது வேலையில் இருந்து இங்கு மாற்றபட்டார்.இங்கு தனது பணியை பற்றி மிக ஆவலாக இருந்தார்.

சிங்கப்பூரில் அவனது நோக்கம் இங்கிருக்கும் கலாச்சாரத்தை படிப்பதும், இங்குள்ள உள்ளூர் மற்றும் கிழக்கின் கொள்கைகளை ஒருங்கிணைப்பதும், இங்கே பொழுதை கழிக்க ஒரு நல்ல துணையை தேடுவதுதான் என்றான்.நான் என்னைப் பற்றி அவனிடம் சொன்னேன்

நான் அனுபவித்த வளர்ச்சி, என் பள்ளி நாட்கள், முதலியன மாற்றி மனம் திறந்தேன்.ஆனால் என் திருமணத்தை மாற்றி நான் சொல்லவில்லை.அவனுக்கு தெரிய அவசியமில்லை என்று தோணியது.ஆண் வாடிக்கையாளர்களிடம்  என் வீடுகளை விற்க, நான் என் திருமண மோதிரத்தை கழற்றிவிடுவேன்.

மேலும் வாசிக்க அடுத்த பக்கத்தில் செல்க

ஒரு வாரம் கழித்து,நான் ஜேக்கை அவர் வீடிற்கு சென்று பார்த்தேன்.எனக்காக   ஒரு அற்புதமான விருந்தை  தயார் செய்திருந்தான்.எங்கள் கனவுகள் மற்றும் ஆசைகள் பற்றி பேசினோம்..நாங்கள் இனிப்பு சாப்பிட்டு  இருந்தபோது,என் கைகளை பிடித்து என் கண்களை பார்த்தான்.

ஒரு சாவியை காட்டி " இனி இது உன்னுடையது, ஜெஸ்.என்னுடன் சேர்ந்து வாழ உன்னை கட்டாயப்படுத்தமாட்டேன்.உனக்கு இங்கே ஒரு இடம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு நீ சம்மதித்தாள், உலகத்திலே சந்தோஷமான மனிதன் நான் தான்!"என்றான். ஒரு நிமிடம் நான் சந்தோஷப்பட்டாலும்,என் குடும்பம் பற்றிய யோசனையும் எனக்கு வந்தது. என் இதயம் ஜேக்கை தேடியது. அதற்காக  என் குடும்பத்தை விட்டு கொடுக்க முடியாது"

நான் ஜேக்குடன்  ஒரு சமரசத்திற்கு வந்தேன்.நான் அவனை வாரநாட்களில் சந்தித்தேன்.சில இரவுகள் அவனுடன் கழிப்பேன்.அந்த இரவுகள் என் தோழிகளுடன் இருப்பதாக என் கணவரிடம் பொய் சொல்வேன்.

ராபர்ட் என்மீது  ஒரு போதும் சந்தேகப்படவில்லை.எப்பொழுது ராபர்ட் என்னை கட்டி அணைத்தாலும், என் குற்ற உணர்வு என்னை கொன்றது.அதை சரி செய்ய, அந்த இரவே நான் ரொபெர்ட்டுடன் உடலுறவு வைத்து கொள்வேன்.காட்டு விலங்குகளைப்போல் நடந்துகொள்வோம். என் குற்ற உணர்விற்காக நான், என் மீதிருந்த காதலுக்காக அவர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜேக் கிறிஸ்துமஸுக்காக வீட்டிற்கு செல்ல முடிவு செய்தான். நான் வேலையை காரணம் காட்டி வரமாட்டேன் என்று பொய் சொன்னேன்.அங்கே அவன் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது, இங்கே நான் கருத்தரித்தேன். சோதனையும் வேதனையும் என்னை தேடி வந்தது.குழந்தை வளர வளர , இது யார் குழந்தை என்ற யோசனையும் என்னோடு வளர்ந்தது.

சில நாட்களுக்குள், ஜேக் வீடு திரும்பப்போகிறான்.நான் முக்கியமான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஜேக்குடனும்  குழந்தையுடன் இருக்கவேண்டும். அல்லது , அவனை விட்டுவிட்டு குழந்தையுடன் என் குடும்பத்துடன் இருக்கவேண்டும்.

ராபர்ட் மற்றும் ஜேக் ஆகிய இருவரும் கெளகேசியர்களாக இருந்ததால், குழந்தையின் அப்பா யார் என்ற சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை .அதனால் ஒரு முடிவெடுத்தேன்.என் கைபேசி எண்ணை மாற்றினேன்.

என் மகன் எயிடன் பிறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இந்த கட்டுரையை நான் எழுதும்பொழுது,எயிடன் தன அழகான கண்களால் என்னை ஒரு கணம் பார்த்தான். ஜேக் பார்த்த அதே கண்கள்.

எடிட்டர் குறிப்பு (Editor's pick):இது ஒரு உண்மை  கதை. ஆனால் நம் எழுத்தாளர் அடையாளத்தை பாதுகாக்க, தொடர்புபட்ட அனைத்து பெயர்களையும் நாங்கள் மாற்றியுள்ளோம்.

Source: theindusparent

Written by

theIndusparent