"என் கணவருக்கு ஒரு கடிதம் " கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு"

"என் கணவருக்கு ஒரு கடிதம் " கணவருக்காக ஒரு தாயின் பாராட்டு"

"நான் ஒழுங்காக பேசாததற்கு வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்"

ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். அப்பாக்கள், தங்கள் தகுதியுள்ள,   மதிப்பும் பாராட்டும் பாராட்டும் பெறுவதில்லை. தந்தையர் தினம் தவிர, நம் கணவரையும், குழந்தையின் தந்தையாகிய அவரை எப்போதெல்லாம் பாராட்டுகிறோம்?

ஒருவேளை நீங்கள் உங்கள் " குடும்ப தலைவரை" பாராட்டும் ஒரு சில குடும்பங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தலைவரிடம் நம்

நன்றி உணர்வை நாம் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.

ஜேசிகா ஓக்ஸ் - சந்தோஷமான தாய், அன்பான மனைவி, மற்றும் பிரபலமான பிளாக்கர்- அவரது வலைத்தளத்தைப் பயன்படுத்தி, அவர் வாழ்க்கை துணைக்கு  பாராட்டுத்தெரிவிக்கிறார்.

உண்மையில், தன் கணவனை உதாசீன படுத்தியதற்கும், குறைவாக மதிப்பிட்டதற்கும் பகிரங்கமாக  மன்னிப்பு கேட்டார்

""நான் ஒழுங்காக பேசாததற்கு  வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன்"

தனது வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட கட்டுரையில் எழுதுகிறார்.

ஓக்ஸின் பிரபலமான வலைப்பதிவு தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதிலிருந்து,இந்த கட்டுரை வைரலாகி விட்டது. ஹஃபிங்டன் போஸ்ட் போன்ற பெரிய செய்தி ஊடகங்களும் இந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டார்கள்.

இதனால், ஓக்ஸின் எண்ணம், தன் மீதோ தன் வலைத்தளம் மீதோ கவனத்தை பெற அல்ல. அனால் அவரது அற்புதமான கணவருக்கு தன் நன்றியுணர்வை காட்ட இந்த தளத்தை பயன்படுத்தினார். இந்த கட்டுரை பல இதயங்களை கவர்ந்தது.உலகத்திலுள்ள அணைத்து அப்பாக்களுக்கும் ஒரு சமர்ப்பனமாய் அமைந்தது.

அம்மாக்கள் / மனைவிகள், ஓக்ஸின் கட்டுரையை படிக்க நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய மனிதருக்குநன்றி சொல்லுங்கள். அவரால் குறையற்ற மனிதராக இருக்க முடியாது. ஆனால், அவரால் முடிந்த வரை ஒரு சிறந்த கணவனாக மற்றும் அப்பாவாக இருக்க முடியும்.
A letter to my husband, the father of my child

ஜெசிகா ஓக்சின் திறந்த கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு!

"அன்புள்ள கணவனுக்கு

நான் தூங்க செல்லும் முன், மிகவும் கோபமாக இருந்தேன். உன்மீதும் உலகத்தின் மீதும் கோபமாக இருந்தேன்.சலிப்புடன் சோர்வாகவும்

இருந்தேன் . முக்கியமாக, சோகமாக இருந்தேன். தூங்க செல்லும் முன் கோபமாக தூங்க கூடாது என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் அதை பற்றி நான் கண்டுகொள்ளவில்லை. என் மீது சுய பரிதாபம் கொண்டேன். நான் ஏன்

கோபமாக இருந்தேன் என்று உனக்கு தெரியவில்லை.அதை பற்றியும் நினைத்து கோபப்பட்டேன்.  உன்னால் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்து வருந்தினேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் தனிமையாக உணர்ந்தேன்.

இது போல் அடிக்கடி தனிமையாக உணர்வேன்

என் உணர்வைஉன்னால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை ?  நாள் முழுவதும்  உழைக்கிறேன், வீட்டை  சுத்தம் செய்கிறேன், குழந்தையை பார்த்து கொள்கிறேன், வீடு பில்லை கட்டுக்கறேன். இதற்கிடையில், கடைகளுக்கும் நான் தான் போக வேண்டும் . இதை எல்லாம் சமாளிக்க போராடும்போது என்னை அறியாமல் நான் அழுவேன். அனால் நீயோ, எதையும் கண்டுகொள்ள மாட்டாய்

நேற்று மிக கடினமான நாள்.நம் செல்ல குழந்தை அடம்பிடித்து கொண்டே இருந்தாள். இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை,காலை முழுவதும் விளையாடினாள். பல பொருட்களை உடைத்தாள், அழுதுகொண்டே, நம் நாய்க்குட்டியின் ரோமத்தை பிடுங்கி இழுத்தாள். நாய் உணவை தரையில் கொட்டி, தன் சிப்பி கப்பிலுள்ள தண்ணீரையும் கொட்டிவிட்டாள். எனக்கு பைத்தியம் பிடித்ததுபோல் இருந்தது!  

நானும் அழுதுவிட்டேன். ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று நினைத்துக்கொண்டே அழுதேன்.

குழந்தையை சமாளிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை.இவள் கூச்சலை என்னால் கையாள முடியவில்லை. நம் வீடும் கலைபரமாக இருந்தது. அடுத்த நாள், வீட்டில் பல வேலைகள் இருந்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான். நீ வேலை முடித்து வீட்டிற்கு வந்தாய். எனக்கு ஒரு முத்தமிட்டு, குழந்தையை அனைத்து கொண்டு, அவள் பொம்மைகளிடம் அவளை கொண்டு சேர்த்தாய்உன் முகம், சற்றும் சலனமில்லாமல் , சந்தோஷமாகவும் தெளிவாகவும் இருந்தது
A letter to my husband, the father of my child

சோகம், கோபம்,விரக்தி என்று உணர்ச்சி குழப்பத்தில் இருந்தேன் .

எப்படி உன்னால் அவ்வளவு  அமைதியாக இருக்க முடிந்தது? நாள் முழுவதும் நான் என்ன செய்தேன் என்று உனக்கு தெரியுமா?ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும், என் கனவுகளும்  இலக்குகளும் போராடி ஜெயிப்பதற்கும் , குடும்பத்தை கவனித்துக்கொண்டும் இருக்கிறேன்! இதெல்லாம் உன்னால் கண்டுகொள்ள முடிகிறதா ? ஆனால் அந்த உணர்வுகளை உன்னிடம் நான் பகிர்ந்ததே இல்லை. எல்லாவற்றையும்  மனசுக்குள் பூட்டி வைத்தேன்.

அந்த இரவு பொழுது சாதாரணமாக கழிந்தது- நம் வேலைகளை பார்த்து, குழந்தைக்கு சோறூட்டி நாமும் சாப்பிட்டு இனிமையாக இரவை கழித்தோம்.

நாம் படுக்கை அறைக்கு சென்றோம்.நான் செய்ய வேண்டிய எல்லா வேலையும்  ஆராய்ந்த,  தனிப்பட்ட முறையில் செய்த எல்லா வேலையையும் கவனித்து கொண்டிருந்தேன், என் வேலையை இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று எண்ணி வெறுப்படைந்தேன். அனால் உன் வேலையே நீ பார்த்துக்கொண்டிருந்தாய்.என்  சோகம் உன் கண்ணனுக்கு தெரியவில்லை.
A letter to my husband, the father of my child

என் பக்கத்தில் நீ படுத்துக்கொண்டிருந்தாய். என் தலையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று உனக்கு தெரியவில்லை. நாம் பேச ஆரம்பித்தோம். அனால் எனக்கு பேச விருப்பமில்லை. எனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டாய். " ஒன்றுமில்லை" என்று சொல்லி குளிக்க சென்று விட்டேன்.

பிறகு " ஒன்றுமில்லை என்று சொல்லாதே. என்ன பிரச்சனை இருந்தாலும் என்னிடம் சொல்" என்றாய்

" மீன் கார்லஸ் " படத்தில் வருவதுபோல், வார்த்தைகளை அள்ளி கொட்டினேன்.அந்த நேரத்தில் என் மனதில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கொட்டி தீர்த்தேன்.

நீ குழந்தையுடன் உதவ மறுக்கிறாய்.

நீ வீட்டை சுத்தம் செய்ய மறுக்கிறாய்.

இதுவரை எனக்கு நன்றி சொன்னதில்லை

என் வேலையில் நான் தோற்கிறேன்

எனது உடலை நான் வெறுக்கிறேன்

உன் கவலை உன்னை பற்றி மட்டும்தான்

இந்த பட்டியல் நீளமாக  தொடர்ந்து.

ஓக்சின் கடிதத்தை தொடர்ந்து படிக்க எண் மூன்றை அழுத்தவும்

இன்று காலை நான் கண் விழித்தபோது, நம் குழந்தையை தொட்டிலில்  இருந்து எடுத்துக் கொண்டு, பால் கொடுத்து , நம் கட்டிலுக்கு அழைத்து வந்தாய்.ஒவ்வொரு காலையும் என்ன செய்வியோ அதைதான் இன்றைக்கும் செய்தாய்.குளித்து முடித்து, , வேலைக்கு தயாராகி,குப்பையை எடுத்து ஒவ்வொரு நாளும் உதவுவாய்.எனக்கும் குழந்தைக்கும் காலை உணவு தயார் செய்துகொண்டு சாப்பிட அமர்ந்தோம். எங்களுக்கு ஒரு முத்தமிட்டு " ஐ லவ் யு போத் " என்று சொல்லிக்கொண்டு கிளம்பினாய்.

இன்றைக்கு மட்டுமல்லாமல், தினமும் இதைத்தான் செய்வாய்.என்னைப்போல் நீயும் வேலைக்கு செல்கிறாய்.எங்கள் உணவிற்காக நீயும் உழைக்கிறாய் . நம் தோட்டத்தை பராமரிப்பதில் உதவுவதோடு அல்லாமல், எங்களையும் பாதுகாக்கிறாய்.

நான் எப்பொழுது உதவி கேட்டாலும், நீ எனக்கு உதவுவாய். நான் அழுதால், எண் பிரச்னையை தீர்த்து வைப்பாய்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில்  செய்ய வேண்டிய காரியங்களை நான் விளக்கினால், எனக்காக அதை செய்வாய். எல்லா நேரங்களிலும் நீ அமைதியாகவே இருக்கிறாய். வீட்டில் ஒருவராவது அமைதியாக இருக்கவேண்டும்,நம் குடும்பம் ஒன்றாக இருப்பதற்கு நீதான் பசையாக இருக்கிறாய்.நான் கவலையோடு இருக்கும்போது என்னை சிரிக்கவைத்து மகிழ்விப்பாய். நம் குடும்பம் முழுமையாக்குகிற சமாதானமும் ஆறுதலும் உன்னால்தான் தரமுடியும்.

நான் ஏன் கோபமாக இருந்தேன்? ஏனென்றால், 95 சதவிகிதம் நானே யோசித்துக்கொண்டு குழம்பி கொண்டிருந்தேன்.

என் உணர்ச்சிகளை நான் சொல்லாமலே நீ புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.உன்னை  கிச்சனை சுத்தம் செய்ய சொல்லாமல், நானே சுத்தம் செய்து முடித்து உன்னிடம் கோபம் கொள்வேன். குழந்தை அழுதால் உன்னை பார்க்க சொல்லாமல், நானே குழந்தையை தூக்கி கொண்டு சமாதான படுத்துவேன்.

கேட்காமலே எல்லாவற்றையும் செய்துவிட்டு, உன்னையும் திட்டுவேன்.

என்னை மன்னித்துவிடு. ஐ அம் சாரி.

நான் ஒழுங்காக பேசாததற்கு  வருந்துகிறேன், கோபமாக இருந்ததற்காக வருந்துகிறேன். உன்னை பொருட்படுத்தாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். உன்னுடைய உதவி இல்லாம நான் எப்படி ஒரு நாளை சமாளிக்க போகிறேன் என்பதுதான் என் சவாலாக இருந்தது. உன்னை குறை சொல்வதற்கான அருகதை எனக்கில்லை . நீ டிவி பார்ப்பதுபோல், நானும் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொண்டு. குழந்தையை விளையாட விட்டு  டிவி பார்ப்பேன். இதற்காக நீ என்னை ஒரு போதும் குறை சொன்னதில்லை.

என் உணர்வுகளை உள்ளடக்கிக்கொண்டே இருக்காமல், உன்னுடன் பகிர நான் கற்றுக்கொள்ள வேண்டும். என் மன அழுத்தம் மற்றும் என் சோர்வு பற்றி உன்னிடம் நான் பேச வேண்டும்

என் குறைபாடுகளை நீ மன்னித்ததுபோல், உன் குறைகளை நான் மன்னிக்கவேண்டும்.உன் குறைகளை விட்டு, நிறைகளில் நான் கவனம் செலுத்தவேண்டும். நான் உதவி கேட்டால் நிச்சயம் அதை நீ மறுக்கமாட்டாய். நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன். என்னை மன்னித்துவிடு.

ஐ அம் சாரி. ஐ லவ் யு

உன்னை உதாசீனப்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடு.

இப்படிக்கு

உன் காதல் மனைவி

இந்த கட்டுரை முதலில் பாஸிடிவ்லி  ஓக்ஸ் மற்றும் ஹஃபிங்டன் போஸ்ட் ஆகிய தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

Source: theindusparent

Written by

theIndusparent