எடை இழக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்

எடை இழக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்

ஏன் 6.30  மணிக்கே இரவு உணவை முடித்துக்கொள்வது நல்லது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

எடை இழக்க என் பயணம் தொடங்கியதில் இருந்து,சிறிய சிறிய வாழ்க்கை முறை மாற்றத்தால் என் கனவு  இலக்கை  அடைய எளிதாக இருந்தது.

எடை இழக்க தொடங்கியதிலிருந்து நான் 30 கிலோ எடை குறைத்துவிட்டேன்.இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, என் எடை 80 கிலோவாக  உயர்ந்தது .இப்பொழுது என் எடை 50  ( அடிக்கடி 50 -யிலிருந்து 51  வரை மாறிக்கொண்டிருக்கும் )

என் முந்தைய வாழ்க்கை முறையில், பசிக்காதவரை சாப்பிடமாட்டேன் .கண்டா நேரத்தில் சாப்பிடும் பழக்கம் இருந்தது . ஜங்க் உணவு மற்றும்  பதப்படுத்தப்பட்ட  உணவு, என்று எது  ஐயூர்ந்தாலும்   அதை மட்டுமே  சாப்பிடும் பழக்கம் இருந்தது.என் தினசரி வாழ்விலும் எந்த உடற்பயிற்சியும் இல்லை.

பலர் என் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும்.  மற்றவர்கள் இதை நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்றும் கூறுவார்கள் .இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று நான் புரிந்துகொள்கிறேன்.குடும்பத்தின் சாப்பாடு வழக்கத்தின் அடிப்படையில்தான் சாப்பிடவேண்டும் என்று இருக்கும்.கூட்டு குடும்பத்தில் இருந்தால். எல்லோருக்கும் முன்னாக  சாப்பிட கடினமாக இருக்கும்.

எனினும், சீக்கிரமாக இரவு உணவை முடித்துக்கொள்வதால், அதிக கொழுப்பு குறைந்து , என் ஆரோக்கியம் மற்றும் ஸ்டாமினா உயர்ந்தது என்பதே என் கருத்து.எடை இழக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்

மும்பெல்லாம் , என் உணவை இரவு 9.30 - 10.00  மணிக்குள் முடித்துவிடுவேன்.  இப்பொழுது, மாலை 6 .30  மணிக்கு சாப்பிட்டுவிடுவேன்.பலர்க்கு இது சாத்தியமில்லாமல் இருந்தாலும், 8 மணிக்குள் உங்கள் இரவு சாப்பாட்டை முடிப்பது , உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் எடை இழப்பிற்கும் மிக அவசியமானதாக இருக்கும்

சீக்கிரமாக இரவு உணவை முடித்துக்கொள்வதின் நன்மைகள் இதோ

  • இரவு உணவிற்கும், அடுத்தநாள் காலை உணவிற்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளிதான் உடலால் திறம்பட காலை உணவை நன்கு உபயோகிக்கமுடியும்.இதனால் உடலில் உள்ள கொழுப்பும் கலோரிகளும் எளிதில் கரைந்துவிடும்.
  • தாமதமாக இரவில் சாப்பிடுவதனால், உங்களை அறியாமலே அதிகமாக சாப்பிடத்தூண்டும்.இதுவே சீக்கிரம் சாப்பிட்டால், உணவு உண்பதும் சிற்றுண்டி சாப்பிடுவதுளைபோல் தோன்றும். அதிக அளவு சாப்பிட தோன்றாது
  • எடை இழக்க நீண்ட காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனால் கால போக்கில் உங்கள் எடை குறைப்பதற்கு உடல் சாத்தியம் அதிகரிக்கிறது.

என் நாளின் கடைசி உணவை மாலை 6 .30  -ற்கு முடித்துக்கொள்வேன்.பிறகு, 10  கிலோமீட்டர் நடப்பேன்.( பலருக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும், நீங்கள்  15 நிமிடம் நடக்கலாம்- இது செரிமானத்திற்கு உதவும்எடை இழக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் இரவு நேர சாப்பாட்டினால் பல நன்மைகள் ஏற்படும்

எனினும்,வேலையிலிருந்து வீடு திருமினாலும்,  இரவில் விழித்திருக்க அதிக பசி தூண்டும்.இருந்தும், எதுவும் சாப்பிடாமல், காமோமைல் அல்லது ஜாஸ்மின் டீயை பருகுவேன். என் உடல் எடையை பராமரித்து என்னையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்

நான் கூறுவது முற்றிலும் தவறாக உங்களுக்கு தோன்றலாம்.நான்  தனிக்குடும்பத்தில் வாழ்ந்து வருகிறேன்.இது கூட்டு குடும்பத்தில் இருப்பதிலிருந்தும் வேறுபட்ட்டதுதான்.உங்கள் குடும்ப வழக்கத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.

Written by

theIndusparent