உணவு சேர்க்கைப்பொருட்கள் குழந்தையின் உடல்நலனிற்கு தீங்கு விளைவிக்குமா?

உணவு சேர்க்கைப்பொருட்கள் குழந்தையின் உடல்நலனிற்கு தீங்கு விளைவிக்குமா?

கீழே குறிப்பிட்டுள்ள 9 சேர்க்கைப்பொருட்களை நிச்சயமாக தவிர்க்கவேண்டும்.இவை எவ்வாறு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

பிஸியான நகர்ப்புறப் பெற்றோர்களைப் போலவே வீடு கிச்சனில் பதப்படுத்தப்பட்ட உணவை மட்டுமே சேகரித்து வைத்தால், மீண்டும் ஒருமுறை சிந்தித்து பாருங்கள். அதிலிருக்கும் சேர்க்கை பொருட்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்ததுண்டா?

இந்த சேர்க்கைகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தோற்றம் மற்றும் சுவையை மெருகேற்ற உதவும்.எனினும்,குழந்தைகளுக்கு மிக ஆபத்தானது.

உணவு சேர்க்கைப்பொருட்கள் குழந்தையின் உடல்நலனிற்கு தீங்கு விளைவிக்குமா?

குழந்தையின் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக பல ஆய்வுகள்  நிரூபித்துள்ளன.தீங்கு விளைவிக்கும் நடத்தை, மனச்சோர்வு, ஹைபாக்டிவிட்டி அல்லது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் முடிவுசெய்கின்றன.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இங்கிலாந்து அரசு நிதி ஆய்வில் குழந்தைகளின் உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்பட்ட சேர்க்கைகளால் குழந்தைகளுக்கு சண்டையிடும் பண்புகளை வளர்க்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளில் இந்த  சீர்குலைக்கும் நடத்தையில் இருக்கும் அதிகரிப்பை கண்டறிந்தனர்.இதனால், அந்நாட்டின் உணவு அமைப்பை பல உணவு பொருட்களுக்கு தடை விதித்தது.

யதார்த்தத்தில் , இந்த உணவு சேர்க்கை பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கவும் முடியாது .

எனவே, இந்த பொருட்களை கண்டறிந்து தவிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை.

குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த  9  உணவு சேர்க்கைகளை  தவிர்க்கவும்

உணவு சேர்க்கைப்பொருட்கள் குழந்தையின் உடல்நலனிற்கு தீங்கு விளைவிக்குமா?

நல்ல உற்பத்தி நுகர்வோர் நிறுவனங்கள் தங்கள் பதப்படுத்தப்பட்ட உணவில் சேர்க்கைகளை சேர்ப்பார் .இதில் தானியங்கள், மிட்டாய்கள், சீரியல்கள் , பானங்கள் மற்றும் "இயற்கை" பழச்சாறிலும் இது போன்ற சேர்க்கைகள் கலக்கப்படும்.

இந்த கூடுதல் சேர்க்கைகளை எப்படி தவிர்ப்பது? லேபில்களை கவனமாக படிக்கவும்.

வாசகர்களாகிய உங்களுக்காகவே இந்த அப்பட்டியலை சேகரித்துள்ளோம்.தவிர்க்கப்படவேண்டிய 9  உணவு சேர்க்கைகளை நீங்கள் பட்டியலிட்டுள்ளோம் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளோம்

 • செயற்கை இனிப்பேற்றிகள் : பெரும்பாலான 'சர்க்கரை இல்லாத' மிட்டாய்கள்பா மற்றும் குறைந்த கல்லூரிகள் உள்ள  பானங்ளில்  இதுபோன்ற செயற்கை இனிப்பேற்றிகள் உள்ளன.சாகிரைன், சோடியம் சைக்லமேட், அஸ்பார்டேம், அஸ்கல்ஃபெம் பொட்டாசியம்  மற்றும் உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் ஆகியவற்றை இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள லேபிளை படியுங்கள்.கார்ன் சிரப்பால் உடல் பருமன் அதிகரிக்கும் என்பதை அணைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
 • செயற்கை நிறங்கள்: உணவுகள் மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கு வண்ணம் சேர்க்கும் ரசாயன சாயங்கள் அதிக தீங்கை விளைவிக்கும்.பளபள தோற்றமுள்ள எந்தவொரு உணவு பொருட்களையும் வாங்குவதற்கு முன், வண்ணச் சேர்க்கையை கவனிக்கவும்.ப்ளூ 1, ப்ளூ 2, ரெட் 3, ரெட் 40, பச்சை  3, மஞ்சள் 5, மஞ்சள் 6 மற்றும் எஃப் அண்ட் சி லேக்ஸ்  (நிறங்களின் கலவை)மற்றும் ஆரஞ்சு பி  ( சாசேஜ் மற்றும்  ஹாட்டாக் உணவுகளில் இருக்கும்) குழந்தைகளில் அதிக அளவு ஆட்டத்தை அதிகரிப்பதில் உதவும்.  
 • டிரான்ஸ் கொழுப்பு மற்றும்  ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்: உப்புகள் மற்றும் எண்ணெய் சார்ந்த உணவுகள் ,பல மாதங்களானாலும்  புத்தம்புது தோற்றத்தில் இருப்பதை பாத்திருக்கிறீர்களா?இதற்கு காரணம் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் தான். இந்த டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொண்டால், LDL (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) கொழுப்பு அதிகரித்து HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) போன்ற நல்ல  கொழுப்பை குறைக்கிறது.இதய நோய் மற்றும்  நீரிழிவு ஆபத்தை அதிகரிக்கும்.
 • சோடியம் பென்சோயேட்: பானங்கள் மற்றும் அமில உணவுகளான  ஊறுகாய் மற்றும் சாலட் டிரேசிங்கில் இருக்கும் . இயற்கையாக இருக்கும்  இரசாயனமாக இருந்தாலும்,  வைட்டமின் சி- யுடன் கலந்தால் பென்சீனாக மாறுகிறது.குழந்தைகளில் சோடியம் பென்சோயேட் மற்றும் ஹைப்பர் ஆக்டிவிடிக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்  இதற்காகத்தான குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் கொடுக்கக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுரைக்கிறார்கள்.
 • இரசாயன பாதுகாப்பான் :  BHA ( பியூடாய்லேடெட்ஹய்ட்ராக்சி அனிசோல் ) மற்றும் BHT ( பியூடாய்லேடெட்ஹய்ட்ராக்சி டொலுவீன்)உள்ளிட்ட ரசாயன பொருட்கள் இருக்கிறதா என்று கவனியுங்கள்.பல நிறுவனங்கள் எண்ணெயை  ஆக்ஸிஜனேற்றத்திலிருந்து  தடுக்க இதை பயன்படுத்துகின்றன.பொதுவாக சீரியல்ஸ், சீவிங் கம் பீர் மற்றும் சில பழ பானங்களில் காணலாம்.இருப்பினும்,பல ஆய்வில் கார்சினோஜென்கள் என்று பெயரிடப்பட்டுள்ள . குழந்தையின் கல்லீரல் மற்றும் நுரையீரலை பாதிக்கும்.
 • ஸல்பய்ட்ஸ் : பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் பொருள்தான் ஸல்பய்ட்ஸ்.பழங்கள் மற்றும் காய்கறிகளில் உப்பை அதிகரிக்கும்.சோடியம் சல்பைட், சல்பர் டையாக்ஸைட், பொட்டாசியம் மற்றும் சோடியம் பிஸல்பால்ட், சோடியம் மற்றும் பொட்டாசியம் மெட்டா பைஸல்பய்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது .குழந்தைகளிக் ஆஸ்தமா அதிகரிக்கும்.
 • மோனோசோடியம் குளூட்டமேட் (MSG):இவை எல்லாம் டனடி நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சூப்கள் மற்றும் மசாலாப் பொருட்களில் காணப்படுகிறது.ஆசிய உணவகங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.உணவு நிறுவனம் இதை "பாதுகாப்பானவை" என்று அங்கீகரித்தாலும் ,இதனால் " MSG  சிக்கல் ஏற்படலாம்" என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குழந்தைக்கு தலைவலி, மார்பு வலி, வியர்வை, குமட்டல் ஏற்பட்டு, உடல்  பலவீனத்தை யும் ஏற்படுத்தும்
 • பொட்டாசியம் புரோமைட் : பிரெட்டில்  ஆக்சிஜனேற்றியாக உபயோகிக்கப்படுகிறது.மாவை வலுப்படுத்தி, அதன் மீள்தன்மையை அதிகரிக்கும். இருப்பினும், கடந்த ஆண்டு, இந்திய அரசாங்கம், பொட்டாசியம் புரோமைட்டை தடை செய்ய உத்தரவிட்டது.  அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ.) மேற்கொண்ட ஒரு ஆய்வில்,இது புற்றுநோயை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது.இதனால், நிச்சயமாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவேண்டும்.
 • ஓலெஸ்ட்ரா : உருளைக்கிழங்கு சிப்ஸை வழக்கமாக சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு இருந்தால் , இதை படித்தபின் நிறுத்திவிடுங்கள்.இது ஒரு கொழுப்பின் மாற்று.மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் கொழுப்பை நீக்க உதவும்.இருப்பினும், வாயு மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

நிறுவனங்கள் இன்னும் பதப்படுத்தப்பட்ட உணவை அறிமுகப்படுத்துவதால், பெற்றோர்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.சகிப்புத்தன்மை, மனச்சோர்வு, தசைநார் சிக்கல்கள் மற்றும் பக்கவாதம், புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் தடுக்கவேண்டும்.

அடுத்த முறை நீங்கள் பல்பொருள் அங்காடிக்குச் சென்றால், ஒவ்வொரு லேபிலையும் செக் செய்து பாருங்கள்.பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க மேலும் சில விஷயங்களை செய்யலாம்

குழந்தையின் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளலை எப்படி கட்டுப்படுத்துவது

 • உணவுப் பதிவை தயாரிக்கவும்: உங்களுக்கான உணவு டயரியை பராமரிக்கவும்.குறைந்தபட்சம் 5-6 நாட்களுக்கு அவர் சாப்பிட்டிருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.பள்ளியில், வீட்டில் சாப்பிடும் உணவை பதிவு செய்யுங்கள்.வாராந்திர உணவு உட்கொண்டதை சரிபார்க்க உதவுவதோடு, பதப்படுத்தப்பட்ட உணவை அடிக்கடி வழங்காமல் பார்த்துக்கொள்ள உதவும்.
 • உணவு மாற்றங்கள் : உங்கள் பிள்ளையின் உணவில் அதிக  காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தவிர்க்கவும்.அதற்கு பதிலாக, எளிய பழ சாலடுகள் அல்லது காய் கறி சாண்ட்விச் சாப்பிடவும்.
 • கரிம உணவு அடையாளங்கள் சரிபார்க்கவும்: 'கரிம' உணவுகளை நிச்சயம் சரிபார்க்கவும்.அவற்றில் பல குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.'சோதனை செய்யப்பட வேண்டும்', 'மாறுபட்ட முடிவுகளுடன் சோதிக்கப்பட்டது ' போன்ற லேபிள்கள் கொண்ட உணவுகள் பாதுகாப்பில்லாதவை .

 

குழந்தைகள் என்ன சாப்பிடலாம் ?

கலர் சேர்க்கப்படாத ஐஸ்- க்ரீம் மற்றும் யோகர்ட் சாப்பிடலாம் .குளிர் பானங்களிக்கு பதிலாக அதிக தண்ணீர் குடிக்கச்சொல்லுங்கள்.எப்பொழுது வீட்டு சாமான் வாங்க சென்றாலும், இதை மனதில் கொள்ளுங்கள்.

 

Written by

theIndusparent