உங்கள் மூத்த குழந்தை தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா? இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் மூத்த குழந்தை  தனது உடன்பிறந்த சகோதரர்களை பார்த்துக்கொள்கிறார்களா? இப்பொழுதே இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மூத்த குழந்தைகள் இளைய தம்பி தங்கையை பார்த்திக்கொள்வது சாதாரணமான விஷயம்தான்.இருப்பினும், இது சரியான பயிற்சி இல்லை. எவ்வளவு வசதியாக இருந்தாலும், இது நல்ல விஷயம் என்று சொல்லமுடியாது.தொடர்ந்து படிக்கவும்.

மூத்த குழந்தை தன் உடன்பிறப்புகளை கவனித்துக்கொள்வது அவ்வளவு   நல்லதில்லை.ஒரு ரஷ்ய உளவியலாளர் அறிக்கையின்படி, பெற்றோர்கள் தங்கள் மூத்த குழந்தைகளின்மேல் இப்படிப்பட்ட பெரிய பொறுப்பை சிறுவயதிலிருந்தே திணிப்பது நல்லது இல்லை என்று கூறுகிறது.

அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் எவ்வளவாக இருந்தாலும், ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கு போதுமான சக்தியும் திறனும் இருக்காது. உங்கள் இளைய குழந்தையை சில நிமிடங்கள் பார்த்து கொள்ள கேட்டுக்கொண்டால் தப்பில்லை. ஆனால், நாள் முழுவதும் கவனித்து கொள்ள சொல்வது முற்றிலும் தவறு.

குழந்தைகள் இடையே வயது வேறுபாடு குறைவாக இருந்தால், மூத்த குழந்தை இளைய குழந்தையை கவனித்து கொள்ள சொல்வது மிகவும் தவறு. ஏழு வயதான ஒரு குழந்தை, ஐந்து வயதான உடன்பிறப்பை  ஆபத்தான நடத்தைகளிலிருந்து  ஈடுபடுவதைப் பாதுகாக்க முடியாது.சில நேரங்களில் அவர்களே அதில் ஈடுபடலாம்.இது உடன்பிறப்பிற்கு தீங்கு விளைவிப்பதற்கான நோக்கம் இல்லை.இந்த பெரிய குழந்தைக்கு போதுமான முதிர்ச்சி இல்லை என்று தான் பொருள்.

 

babysitting siblings

என் குழந்தை பருவம் எனக்கு நினைவிற்கு வருகிறது. என் அண்ணனுக்கும் எனக்கும் 7 வயது வித்தியாசம. ஒரு வாரம் என் அண்ணனை என்னை கவனித்து கொள்ள சொல்வார்.ஒரு நாள் நாங்கள் இருவரும் கொஞ்சம் விளையாட முடிவெடுத்தோம்.தரை முழுக்க சோப்புத்தூள் தூவி, எல்லா தண்ணீர் வடிகாலையும் மூடிவைத்தோம். தரைமுழுக்க தண்ணீரில் மூழ்கி சறுக்க தொடங்கினோம்.சில நேரம் சறுக்கியபின், நான் தடுக்கி விழுந்து என் நெற்றியில் அடிபட்டுக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக,என் அண்ணன் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களை கூப்பிட்டார்.அன்று மாலை, என் அம்மா வீட்டிற்கு வந்தபோது என் நெற்றியில் மூன்று தையல்கள் இருந்தது.என் அண்ணன்என்னை கவனித்து கொள்வது அதுதான் கடைசி முறை.

இந்த வகையான விபத்து நிகழ்ந்தால், மூத்த குழந்தையை உண்மையிலேயே குற்றம் சொல்ல முடியாது. அவரும் ஒரு குழந்தைதான். உங்கள் இளைய குழந்தையைவிட சிறு ஆண்டுகள்தான் பெரியவர்.ஒரு குழந்தையை கவனிக்கும் அளவிற்கு பொறுப்பை திணிப்பது கொடுமையான செயல்.நம் குழந்தையின் ஆர்வத்தை யதார்த்தமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் மூத்த குழந்தையை கவனிக்க சொன்னபோது, பின்வரும் குறிப்புகளை படியுங்கள்.

உதவுவது நல்லது:

நிச்சயமாக, உங்கள் பிள்ளைகள்  உங்கள் வேலையில் கொஞ்சம் கொஞ்சமாக உதவலாம்.எனினும், ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வது ஒரு  "வேலையாக" இருக்கக்கூடாது.குறிப்பாக நீங்கள்  இல்லாத நிலையில்,ஒரு குழந்தையை மற்றொரு குழந்தைக்கு ஒப்படைக்க கூடாது .

வயது முக்கியம் :

உங்கள் இளைய குழந்தை ஒரு விபத்தை மேற்கொண்டால், முதலுதவி கொடுக்கும் அளவிற்கு உங்கள் மூத்த குழந்தைக்கு முதிர்ச்சி இருக்கிறதா?அவசரகாலத்தில் என்ன செய்வதென்று தெரிந்து கொள்வதற்கு  அவருக்கு பக்குவம் இருக்கிறதா?இந்த எல்லா கேள்விகளுக்கு பதில் இருந்தால் மட்டுமே இந்த பொறுப்பை ஒப்படையுங்கள்.

வலுக்கட்டாயமாக குழந்தையை கவனிக்க சொல்லவேண்டாம்:

உங்கள் மூத்த குழந்தைக்கு இது  ஒரு சுமையாக இருக்கக்கூடாது.மேலும் வயது வேறுபாடு குறைவாக இருந்தால்,தயவு செய்து இந்த பொறுப்பை ஒரு சிறு குழந்தைக்கு கொடுக்க வேண்டாம்.

ஒரு சாண்ட்விச் செய்வதற்கும் ஒரு குழந்தையை பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.தங்களுடைய விருப்பப்படி அவர்கள் உதவி அளிப்பதற்கும், அவரை வற்புறுத்தி வேலை செய்ய சொல்வதற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.அவர்கள் உணர்விற்கு மதிப்பு கொடுங்கள்

Source: theindusparent

Written by

theIndusparent