உங்கள் பெண் குழந்தைக்கு காது குத்த போகிறீர்களா? பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் பெண் குழந்தைக்கு காது குத்த போகிறீர்களா? பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

டாக்டர் சலோனி கடோச் , தோல் மருத்துவர்,கொலம்பியா ஆசியா மருத்துவமனை , பெங்களூர், காது குத்திக்கொள்வதற்கு முன்னால் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுள்ளார்.

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், ஏற்கனவே அவளது காது குத்துவதை பற்றி நினைத்திருப்பீர்கள்.  மூத்தோர்கள் விரைவில் குழந்தையின் காதுகள் துளையிட சொல்லிருப்பார்கள். அனால் அதற்கு எந்த அவசரமும் இல்லை என்று நான் உங்களுக்கு சொல்கிறேன்.

"  பெற்றோரின் தனிப்பட்ட விருப்பமானலும்,  அமெரிக்க குழந்தைநல கழகம், காது குத்துவதற்கு சரியான வயது 7 - 8 ஆண்டுக்கு உட்பட்ட குழந்தைகள், என்று அறிவித்திருக்கிறது. அவர்களது  நோய்எதிர்ப்புத் திறன் அப்பொழுதுதான் முழுமையாக உருவெடுக்கும்" : என்கிறார் டாக்டர் சலோனி கடோச் , தோல் மருத்துவர்,கொலம்பியா ஆசியா மருத்துவமனை,பெங்களூர்.

சரியான வயது

இந்தியா பெற்றோர்கள் என்னதான் தங்கள் குழந்தைக்கு விரைவில் காதுகுத்து நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினாலும், குறைந்தது  6 மாதம் முடியும்வரை காத்திருத்தல் நல்லது.

"ஒரு குழந்தைக்கு டெட்டனஸ் மற்றும் பிற முக்கிய  தடுப்பூசிபோடல்  6  மாதங்களுக்கு மேல்தான் நடக்கும்.இதனால்  தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு"என்கிறார் டாக்டர் கடோச். மேலும் நம் குடும்ப வழக்கத்தில் ஆசாரியை வைத்துதான் குழந்தைக்கு காது குத்தப்படும். அனால் அது சரியான முறை அல்ல.

இந்த பணியை ,நோய் நுண்மை நீக்கப்பட்ட, சுகாதாரமான சூழலில் செய்யவேண்டும். அதனால்  ஒரு பொதுநல மருத்துவர், அறுவை மருத்துவர் அல்லது ஒரு தோல் மருத்துவரால் மட்டுமே இது சாத்தியமாகும் .

"மருத்துவர்கள் கைகளை சுத்தம் செய்து, கையுறை அணிந்து,சுத்தமான சாதனங்களை மட்டுமே உபயோகிப்பர். சுகாதார சூழலுக்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுவர்.அனால் ஆசாரிகள் அப்படி இல்லை. உங்களால் ஒரு மருத்துவரை அணுக முடியாமல் போனால் மட்டுமே, ஆசாரிகளை சிபாரிசு செய்வேன்" என்கிறார் டாக்டர் கடோச்.

செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

குழந்தைக்கு காது குத்திய பிறகு. எந்தவித தோற்றும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். டாக்டர் கடோச் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாத சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளார். படித்து பயனடையுங்கள்.

  • கைகளை நன்றாக கழுவி, தினமும் இருமுறை டெட்டோல் போன்ற கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யுங்கள். சுத்தமான சாதனங்களையே பயன்படுத்துங்கள்.
  • தொற்றின் வாய்ப்புகளை குறைக்க, குறைந்தபட்ச இரண்டு வாரங்களுக்கு தோல் கிருமி  நாசினிகளை தடவவும்.
  • குத்திக்கொண்ட பகுதி குணமானதும் உடனே காதணிகளை மாற்ற வேண்டாம். குறைந்தபட்சம் 6 -8 வாரங்களுக்கு காத்திருங்கள். எனால், காது சுவர் குணமாவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
  • நிக்கல் சார்ந்த காதணிகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு எஃகு(stainless steel) காதணிகள் அறிவுரைக்கப்படுகிறது. காது குத்தி 2 மாதங்களுக்கு மேல் அனால், பிளாட்டினம்,  டைட்டானியம் அல்லது 14 -18 காரட் தங்க காதணிகள் அணியலாம்.
  • நோய்தொற்று , சீழ் ஒழுகுதல் போன்றவை ஏற்படாமல், காது குத்திய இடத்தை  கண்காணித்துகொண்டு இருங்கள். காதுகளில் வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுங்கள்.
  • அசுத்தமான கையால் தொடவேண்டாம்.
  • காதணிகளை இலேசாக சுழற்றி, குத்திய இடம் சுத்தமாக இருக்கிறதா என்று பாருங்கள்.
  • ஒரு வயதுக்கு குறைவான குழந்தையை ஆசாரியிடம் கொண்டுபோகவேண்டாம்.நல்ல மருத்துவரிடம் காமியுங்கள்.

Source: theindusparent

Written by

theIndusparent