உங்கள்  துணை உங்களை மதிப்பதில்லை என்பதற்கான 5 அறிகுறிகள்

lead image

பின்வரும் 5 குணங்களில் ஏதேனும் உங்கள் துணைவரிடம் இருந்தால்,தாமதிக்காமல் இதை சரி செய்யுங்கள்

நம் துணைவரிடம் நாம் எதிர்பார்க்கும் பல குணங்களில், மரியாதை மிக முக்கியமான ஒன்றாகும்.பரஸ்பர அன்பும் மரியாதையும்  இல்லை என்றால் திருமணங்கள் நிச்சயமாக பாதிக்கப்படும். இதனால், கணவன் மனைவி இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பும் மரியாதையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை எல்லா வகைகளிலும் நிரூபித்து காட்ட  வேண்டும்.

உங்களை நீங்களே அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை துணைக்கு,நீங்கள் மதிக்கும் அணைத்து குணங்களும் இருக்க வேண்டும்.உங்கள் முடிவுகளுக்கு ஆதரவாகவும், பொறுப்புகளுக்கு சுமைதாங்கியாகவும் , கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பவராக இருக்க வேண்டும். பின்வரும் 5 குணங்களில் ஏதேனும் உங்கள் துணைவரிடம் இருந்தால்,தாமதிக்காமல் இதை சரி செய்யுங்கள். உங்கள் திருமண பந்தத்தை மேம்படுத்தி , சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்!

முன்னறிவிப்பில்லாமல் அலுவலகத்திற்கு வருதல்

ஆரம்ப காலத்தில்  இது விளையாட்டாகவும் இன்ப அதிர்ச்சியாக தோன்றும். இரண்டையும் சேர்த்து சுழம்ப வேண்டாம். போகப்போக இதுவேய வினையாக மாறிவிடும்.

signs that your spouse doesn't respect you

நீங்கள் அலுவலக பணியில் மும்முரமாக இருக்கும் நேரத்தில், உங்கள் துணைவர், கவனத்தை திசை திருப்ப பார்ப்பார். அப்படிப்பட்ட குணமுள்ள ஒருவர், உங்கள் பொன்னான  நேரத்தை மதிப்பதில்லை என்று அர்த்தம்.

அவர்களது தேவை உங்கள் நேரத்தை விட முக்கியமானது என்று கருதும் இந்த மோசமான குணம் ஒரு உதாரணம். தி பிரிஸ்க்கியின்(The Frisky) அறிக்கையில் " உங்கள் துணைவளர் சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி உங்கள் அலுவலகத்திலோ பள்ளியிலோ காட்சியளித்தால்,உங்களை அவர் மதிப்பதில்லை " என்று குறிப்பிட்டுள்ளது.

"கேஸ் லாய்டீங் (Gaslighting)" நுட்பத்தை பயன்படுத்துதல்

யுவர் டாங்கோ , "கேஸ் லாய்டீங்"  முறையை " ஒருவர் நல்லறிவை சந்தேயகித்து உளவியல்ரீதியாக கையாளும் முறை. நீங்கள் நிஜத்தில் அல்லாமல், கற்பனையில் வாழுகிறீர்கள் என்று நம்ப வைப்பார். அவர் செய்ததை செய்யவில்லை என்றும்,நீங்கள் செய்யாததை செய்தீர்கள் என்று மூளைச்சலவை செய்வார். இதுவும் ஒருவகை துன்புறுத்தல்தான்" என்று வரையறுக்கப்படுகிறது .

உதாரணத்திற்கு, சில சூழ்நிலைகளில், உங்கள் துணை, பழியை உங்கள்மேல் திணித்து, பொறுப்பை மறுத்து,அத்தகைய சம்பவம் நடக்கவே இல்லை என்பதுபோல் பேசினால் ' கேஸ் லாய்டீங் " நுணுக்கத்தை பயன்படுத்துகிறார் என்று அர்த்தம் . இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் ! உங்கள் உணர்ச்சிகளுக்கும், நல்லறிவிற்கும் மதிப்பும் மரியாதையும் மிக முக்கியம். உங்கள் மதிப்பை ஒருபொழுதும் இழக்காதீர்!

 

signs that your spouse doesn't respect you

செக்ஸை  பரிமாற்றமாக நடத்துதல்

செக்ஸை   ஒரு வர்த்தக பரிமாற்றம் போல், ஒரு எதிர்பார்ப்பைபோல் நடத்துவது தவறு. ஒரு விஷயத்துக்கு ஈடாக செக்ஸை  பரிமாற்றம் செய்யும் கணமே, எல்லா வித பரஸ்பர அன்பும் நொடியில் காணாமல் போகும். மரியாதைக்குரிய தனிநபர்களுக்கு தெரிந்தவாறு, செக்ஸ், ஒரு செலவாணியோ அல்லது  கட்டணமோ அல்ல. என்னதான் உங்கள் துணையுடன் நீங்கள் நெருக்கமானவராக இருந்தாலும், உங்கள் உடலை வர்த்தகமாக பயன்படுத்த கூடாது. உங்கள் துணைவருக்கு, ஒரு வேளையில் ஈடுபடுவதற்கு நீங்கள் வாக்களிக்கும் "அந்த சிறப்பு சலுகை", உங்கள் அன்பையும், அந்தரங்கத்தையும்  மலிவாக்கும். இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உங்களை பற்றி பெருமை கொள்ளாதல்

வாழ்க்கையில் சிலரிடம் நீங்கள் மரியாதையை சம்பாதிக்க பாடுபடவேண்டும் .உங்கள் மேலாளர், சகா ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இந்த பட்டியலில் அடக்கம். அனால் எந்த நிலையிலும் மரியாதை வேண்டி போராட அவசியமில்லாத ஒரு நபர், நம் துணை. "நான் உன்னை நினைத்து பெருமை படுகிறேன்" என்று  அடிக்கடி கேக்கும் வாசகமாக இருக்கவேண்டும்.உங்களிடம் இருப்பதற்கு அவர் பெருமைப்பட்டால், இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று பொருள்.அப்படி இல்லாவிட்டால்,உங்கள் துணை உங்கள் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்.

சமரசம் மற்றும்  பேச்சுவார்த்தை மறுத்தல்

குடும்ப மையங்கள் " தொடர்ந்து உங்கள் துணையின் உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் உரிமைக்கு மதிப்பு கொடுத்தால்தான் பரஸ்பர மரியாதை உண்டாகும். உங்களை எப்படி நடத்த விரும்புகிறீர்களோ,உங்கள் துணையையும் அப்படி நடத்துங்கள். இருவரும் சமரசம் செய்து கலந்து பேசி முடிவெடுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளது.

நீங்கள் ஒரு தனிநபர் அல்ல. இரெண்டு பேர் கொண்ட அணி. ஒரு அணியின் வெற்றிக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். ஒரு பக்கத்துக்கு அணியினர் ஒத்துழைக்க மறுத்தால், உங்கள் கருத்திற்கு மதிப்பில்லை என்று தெள்ள தெளிவாக புரியும். நீங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களையே அர்ப்பணித்த ஒருவருக்கு, இது சகிக்க முடியாத தன்மையாகும்.

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner