உங்கள் சமையலறையில் மீண்டும் வரவேண்டிய 4 பண்டைய இந்திய தானியங்கள்

உடல் ஆரோக்கியத்திற்காக ஓட்ஸ் மற்றும் கினோவாவை சாப்பிடும் பலர், நமது பண்டைய இந்திய தானியங்களை முற்றிலும் கைவிட்டுவிட்டனர்.நம் முன்னோர்கள் பயன்படுத்திய தானியங்களை பற்றி பார்க்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட மாவு, கோதுமை ஆட்டா மற்றும் நவீன தானியங்கள் நம் இந்திய சமயலறையில் தனி இடத்தை பிடித்துவிட்டது.. புராதன இந்திய தானியங்களான ஜொவர், பஜ்ரா மற்றும் ராகி ஆகியவை பளபளப்பான வெள்ளை அரிசி  மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவால் மாற்றப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில்,நமது சொந்த இந்திய பண்டைய தானியங்கள், பதப்படுத்தப்படாத வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்தவை.இதனால்தான், என் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தனர்.

உடல் ஆரோக்கியத்திற்காக ஓட்ஸ் மற்றும் கினோவாவை சாப்பிடும் பலர், நமது பண்டைய இந்திய தானியங்களை முற்றிலும் கைவிட்டுவிட்டனர்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய தானியங்களை பற்றி பார்க்கலாம்.

உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டிய 4 பண்டைய இந்திய தானியங்கள்

 

1 அமரந்த் (அல்லது )ராஜ்கிரா

""</b

அமரந்த் (அல்லது )ராஜ்கிரா இதில் ்பெரிய ஊட்டச்சத்து தானியமாகும். இதில் அதிக புரதம் இருப்பதால், சைவம் சாப்பிடுவோருக்கு பயன்படும்.

செல்கள் மற்றும் திசுக்களின் உற்பத்திக்கு புரோட்டீன் முக்கியமானதாகும். நோய்த்தொற்றுகளை அண்டவிடாமல் மற்றபார்த்துக்கொண்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தை  பலப்படுத்தும். மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது, இதில் புரத உள்ளடக்கம் அதிகமாக உள்ளது.

இது தவிர,இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் உணவு நார்ச்சத்து அதிகமாக உள்ளது.எலும்புகளை வலுப்படுத்தும், பார்வை மேம்படுத்துவதற்கும் ,கொழுப்பு அளவு குறைத்து நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் அமரந்த் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும், இதில் கோதுமைப்புரதம் இல்லை .செலியாக் நோயுள்ள நபர்களுக்கு சரியான உணவாக அமையும்.

2.பெர்ல் மில்லட் அல்லது பஜ்ரா

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வசிக்கும் மக்களால்  அதிகம் சாப்பிடப்படுவது , பஜ்ரா.இது தவிர, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களின் முக்கிய உணவாகும்.இது இந்தியாவின் பழமையான சாகுபடி செய்யப்பட்ட தானியங்களில் ஒன்றாகும்.மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைத்து, இரத்த குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும்.

மேலும்,கொழுப்பு அளவை சீராக்கி, எடை அதிகரித்தலை தடுத்து, சோர்வை குறைத்து செரிமானத்தை ஊக்குவிக்கும்.

3.சோர்கம் அல்லது ஜொவர்

ஜொவர்,    கோதுமைப்புரதம் இல்லாத தானியமாகும். இதனால், சப்பாத்தி, தோசை க்ரி, மற்றும் சீலா தயாரிக்க பயன்படுகிறது.இந்த பண்டைய கால தானியம், தினை குடும்பத்தை சேர்ந்தது.உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளுக்கான ஆரோக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும்.

இதில்    பி- காம்ப்ளெக்ஸ் கொண்ட வைட்டமின்கள் மற்றும் தாமிரம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை உள்ளடங்கும்.

ஜொவாரை தினசரி சாப்பிட்டால், உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.எனவே, எடை இழக்க  விருப்புவோருக்கு இது ஏற்ற உணவாகும்.சர்க்கரை நோய் இருப்பவருக்கும் தங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக ஜுவரை சேர்க்கவேண்டும்.

4.ராகி அல்லது நாச்சினி

ராகி, தென்னிந்திய சமையலறையில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. தோசை, காஞ்சி மற்றும் பிற உணவு பொருட்கள் தயாரிக்க உதவும் ராஜிக்கு பிரதான இடம் என்றும் உண்டு.குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ற உணவாகும்.

இதில் கால்சியம் அதிகம் உள்ளதால், ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.இது மட்டுமல்லாமல், இரத்த சோகை தவிர்த்தல், எடை இழப்புக்கு உதவுதல், மனச்சோர்வை  கட்டுப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

எனவே, உங்கள் முன்னோர்கள் சாப்பிட்ட உணவை நீங்களும் சாப்பிட தொடங்கலாம்.பண்டைய இந்திய தானியங்களை  உங்கள் வழக்கமான உணவின் பகுதியாக்கி, உங்கள் சமயலறையில் தனி இடத்தை கொடுக்கலாம் !