உங்கள் குழந்தை சாப்பிட 3 சூப்பர் இந்திய உணவுகள்

உங்கள் குழந்தை சாப்பிட 3  சூப்பர் இந்திய  உணவுகள்

உலகம் சாப்பிடுவதைப் பற்றி கலவை படாமல்,உள்ளூர் உணவில் எது சிறந்தது என்று ஆராய்ந்து பாருங்கள்.

இன்றைய உலகம் விரும்பும் உணவுப் பரிமாற்றத்தில், குடும்பங்கள் தங்கள் வீட்டு சமையலில் கேலிலிருந்து கினோவா வரை, ஊட்டச்சத்துக்காகவும் பகட்டுக்காகவும் சேர்ப்பது ஒரு வழக்கமாக மாறி வருகிறது.

புதிய அம்மக்களுக்கு,தங்கள் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவின் தேடல், பெரும்பாலும் அயல் நாடுகளில் இருக்கும் சூப்பர் உணவுகள் அல்லது பதப்படுத்தப்பட்ட  ரெடிமேட் உணவுகளில் போய் முடிகிறது.

சுத்தமான உணவை உண்ணுங்கள்

வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை தயார் செய்வதற்கு ஒரு தாய் என்ன செய்ய வேண்டும்? ஊட்டச்சத்து நிபுணர்களை கேட்டால், உலகம் சாப்பிடுவதைப் பார்ப்பதை  நிறுத்தவேண்டும் என்றுதான் கூறுவார்கள்.அதற்கு மாற்றாக, ஆரோக்கியமான உள்ளூர் உணவை தேர்ந்தெடுக்கலாம்.

சில கவர்ச்சியான சூப்பர் உணவுகள் பற்றி  சர்வதேச குழந்தை புத்தகங்களில் படித்திருப்பீர்கள். அல்லது   விலையுயர்ந்த பல்பொருள் அங்காடிகளில் பாத்திருப்பீர்கள்.ஆனால் ஒரு ஸ்மார்ட்டான அம்மாவாகிய நீங்கள், உங்கள் உள்ளூர் உணவை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

1. ஸ்ட்ரிங் சீஸுக்கு குட்பை , பனீருக்கு  ஹாய்!

உங்கள் குழந்தை சாப்பிட 3  சூப்பர் இந்திய  உணவுகள்

உங்கள் குழந்தைக்கு சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்ட  சிற்றுண்டியாக தெரியலாம்.நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பிரிட்ஜிலிருந்து ஒரு சீஸ் ஸ்லய்ஸ் எடுத்துக்கொடுத்தால் உங்கள் குழந்தைக்கான கால்சியம் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும் என்று நீங்கள் நினைக்கலாபதப்படுத்தப்படாத  பாலால் செய்யப்பட்ட சீஸ் குழந்தைகளுக்கு கொடுக்க அறிவுரைக்க படுவதில்லை.சில குழந்தைகள் சில பாலாடைக்களுக்கு, ஒவ்வாமைகளை உருவாக்குகின்றன. எனவே, ப்ரை மற்றும் செவ்ரே நீங்கள் ஐரோப்பில் சுவைக்கலாம்.ஆனால் உங்கள் குழந்தையின் தினசரி தேவைக்கு, வறுக்கப்பட்ட பன்னீர் க்யூப்ஸ் உடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பரிமாருங்கள்.ஹாலுமி, கிரான பாடாணா அல்லது ரிகோட்டா போன்ற கவர்ச்சியான சீஸை பெறுவதற்கு முன் நம் ஊர் பனீரை ட்ரை செய்து பாருங்கள்.இதில் சீஸை விட அதிக பயன்கள் இருக்கிறது.

2. சார்டும் கொல்லார்டும் வேண்டாம் : நம்மூர் கீரையை போதும்

உங்கள் குழந்தை சாப்பிட 3  சூப்பர் இந்திய  உணவுகள்

கேல் மற்றும் ஸ்விஸ் சார்ட் ஆகியவை நவீன காலத்தின்  தற்பெருமைக்கான காய்கறிகளாக  மாறிவிட்டது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பெரும்பாலும் வளர்க்கப்பட்டிருக்கும் இந்த  கீரைகள், எந்த கடைகளிலும் பிரெஷாக இருக்காது.

இந்த இலை கீரைகளை குட்பை சொல்லி நம்மூர் பீட் கீரைகள் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு கீரைகள் ஆகியவற்றிக்கு ஹலோ சொல்லுங்கள்.மற்ற காய்கறிகளைவிட, இந்த கீரைகளில்  வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே மற்றும் புரோட்டீன், ஃபைபர், கால்சியம், இரும்பு மெக்னீசியம் நிரம்பி உள்ளன.

பீட் க்ரீன்ஸ், பீட்ரூட்ஸின் மேல் உள்ள  மென்மையான சிறிய இலைகள்,ஆக்ஸிஜனேற்றிகளுடன் நிரம்பியுள்ளன.நீங்கள் அதிக நன்மைகளை பெற விரும்பினால், குழந்தைக்காக  கீரை வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.

இந்த காலத்தில். கீரையை வீட்டிலே வளர்க்க முடியும். பசுமையான இளம்பச்சையில் இருக்கும் கட்டத்தில்,கீரை இலைகளை பறித்து , இஞ்சி பூண்டு விழுதுடன் சமைத்தால் அருமையாக இருக்கும்.

3. எடமாமி கிரேஸை முடித்து, பீன்ஸுக்கு  ஹலோ சொல்லுங்கள்

உங்கள் குழந்தை சாப்பிட 3  சூப்பர் இந்திய  உணவுகள்

இந்த 'பேஷன்' காயான எடமாமி, ஜப்பானிய, கொரிய மற்றும் சீன உணவில் பிரபலமானது. முதிர்ந்த சோயாபீன்ஸை, வறுத்தெடுத்தோ அல்லது வேகவைத்தோ என்று சாப்பிடலாம்.

சில இந்திய மளிகைக்காரர்கள் அவற்றை உலக உணவு வகைகளில் உள்ள பொதிகளில் வைத்திருக்கிறார்கள்.நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அறியப்படுகிறது.ஆனால் நம் குழந்தைகளுக்கு, சோயாபீன்ஸ் அல்லது உறைந்த பட்டாணிகளே போதுமானது.

மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் புரதங்கள் அதிகமுள்ள சோயாபீன்ஸ் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.மேலும், விலையுயர்ந்த எடமாமியை வாங்குவதற்கு முன்னால், மரபணு மாற்றப்பட்ட சோயாபான்ஸிலிருந்தும் எடுக்கப்படுகிறது என்ற எச்சரிக்கையோடு செயல் பட வேண்டும்.

எனவே, மொத்தமாக  பட்டாணிகளை வாங்கி பிரிட்ஜில்  உறையச்செய்யுங்கள். வருடம் முழுக்க தேவையான உங்கள் ஆரோக்கியமான சிற்றுண்டி ரெடி .இதை வெறுமனே வேகவைத்தும் வருத்தும் குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் சாப்பிடலாம்.

Source: theindusparent

Written by

theIndusparent