உங்கள் குழந்தையை ஒழுங்குபடுத்துவது எப்படி: 8 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

உங்கள் குழந்தையை ஒழுங்குபடுத்துவது எப்படி: 8 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

நமது இளம் குழந்தைகளின் மோசமான நடத்தைகளை திருத்துவது எப்படி?

உங்கள் குழந்தை வளரும்போது, அவர்களது மனபன்மையில் வித்தியாசம் தெரியும் – தூக்கி எரிந்து பேசுவது,உங்கள்  கட்டளைகளை நிராகரிப்பது போன்றவை. ஒரு வளர்ந்த குழந்தைக்கு ஒழுக்கம் கற்று கொடுப்பதே பெரிய சவால். இதில், தளர்நடைப் பருவத்தில் உள்ள குழந்தையை பற்றி யோசித்து பாருங்கள். வல்லுநர்கள், நம் இளம் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும்போது பின்பற்ற வேண்டிய சில தங்க விதிகளை குறிப்பிடுகிறார்கள்:

1. அன்போடு திருத்துங்கள்

உங்கள் பிள்ளையின் நடத்தையை திருத்த விரும்பினால், அன்போடு திருத்துங்கள்.ஒழுக்கம்  என்பது ஒரு செயலை குறிப்பிட்ட வழியில் செய்ய கட்டாயப்படுத்துவது இல்லை.ஆனால் ,உங்கள் குழந்தைக்கு எது சிறந்த வழி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.உங்கள் குழந்தையை கண்டித்த பின், அவரை அரவணைத்து உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள்.

 

how to discipline baby

Photo: Dreamstime

2. கூட்டணியாக கண்டியுங்கள்

குழந்தைக்கு பெற்றோர் மீது நல்லவர்/ கேட்டவர் அபிப்பிராயம் இருந்தால், அதை உடனடியாக மாற்ற வேண்டும்.உங்கள் குழந்தை ஸ்மார்ட் – அவள் காரியத்தை சாதிக்க யாரை அணுக வேண்டும் என்பது அவளுக்கு தெரியும்.இறுதியில், அவளை ஒழுங்கு படுத்த இன்னும் கடினமாகும்.நடுநிலைத்தன்மை முக்கியமானது.

உங்கள் பிள்ளையை ஒழுங்குபடுத்துவது பற்றி மேலும் வாசிக்க அடுத்த பக்கத்திற்கு செல்க.

3. குறும்பு குழந்தை என்றே ஒரு கருத்தில்லை

இளம் பிள்ளைகளுக்கு உந்துவிசை கட்டுப்பாடு வளர்ச்சி அடைந்திருக்காது.இதனால் அவர்களுக்கு கெட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கும் திறன் இல்லவே இல்லை.எனவே, உங்கள் பிள்ளையின் செயல்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது “குறும்பு” குழந்தை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.உண்மையில், குழந்தையை “குறும்பு” அல்லது “நாட்டி” என்று சொல்லுவதை நிறுத்தவேண்டும் . தன் நடத்தைக்குப் பதிலாக அவளையே அடையாளப்படுத்துகிறாள் என நினைக்கலாம்.அதற்கு பதிலாக, அவர் தவறு செய்ததை விளக்குங்கள்.

 

how to discipline baby

Photo: Fotolia

4. உங்கள் பிள்ளையை புரிந்து கொள்ளுங்கள்

தங்கள் தேவைகளை புரிந்துகொள்ளாமல், பெற்றோர்கள் பொறுமையற்றவர்களாகவும் நியாயமற்றவர்களாகவும் இருந்தால், குழந்தைகள் மோசமாக நடந்துகொள்வார்கள். அலுப்பு, பசி, சோர்வு போன்ற உணர்ச்சிகளை சமாளிக்க முதிர்ச்சி அவர்களுக்கு இன்னும் வரவில்லை.சில நேரங்களில் நாம் பொறுமையாகதான் இருக்க வேண்டும்.

5. விதிகளை நிறுவுதல்

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு அதிக சலுகை கொடுத்து, முடிந்தவரை கெட்ட நடத்தைகளையும் சகித்துக்கொள்கிறார்கள்.எனினும், உங்கள் குழந்தைகளுக்கு வரையறைகள் தேவை.கெட்ட நடத்தை பற்றி பேசாததன் மூலம், பிற்காலத்தில் அதை மாற்றுவது கடினம்.

அடுத்த பக்கத்தில்: உங்கள் குறுநடை போடும் குழந்தையை ஒழுங்குபடுத்த சில வழிகள்

Source: theindusparent

Written by

theIndusparent