உங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது? அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது

உங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது? அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது

உங்கள் பிள்ளையின் கவலைகளை சமாளிக்க பல உத்திகள் உள்ளன. அதற்கு முன், அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது.

ஒரு பெற்றோராக , வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து உங்கள் பிள்ளையை பாதுகாக்க  விரும்புவர்.அவர்கள் பிள்ளை பருவத்தை கவலை இல்லாமல் அனுபவிக்கதான் விரும்புவீர்கள்.இருந்தும், குழந்தையின் பதட்டத்தையும் கவலையும் சமாளிப்பது பெரும் போராட்டம்தான்.அவர்களது சிந்தனையும் செயலும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், குழந்தை பருவத்திலிருந்து பருவமடைந்ததற்கு அப்பாலும்,மன வலி மற்றும் வருத்தத்திலிருந்து காப்பாற்ற முயற்சிப்பீர்கள்.

ஆனால், வலியும் வேதனையும் வாழ்க்கையின் அங்கம்தான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.இதை ஆரோக்கியமான முறையில் சமாளிப்பது, வாழ்க்கைக்கு தேவையான  முக்கிய திறன்.

குழந்தை பருவத்தில்  பதட்டத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களது பக்குவமும் நாளடைவில் வளரும்.

குழந்தைகளை அதிகமாக கொஞ்சாமல் அவர்களது பதட்டத்தை கையாளுங்கள்

உங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது? அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது

இன்றைய தலைமுறை ஒரு வித பதட்டத்துடனே வளர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் மட்டுமே, மூன்றில் ஒரு குழந்தைக்கு  பதற்றக் கோளா றினால் பாதிக்கப்படுகிறார்கள். தூக்க சிக்கல்கள் மற்றும்

நம்பிக்கையற்றத்தன்மை இதற்கான அறிகுறிகள்.

சி.என்.என் அறிக்கையானது, குழந்தைகளில் எளிதில் பதற்ற கோளாறை எளிதாக கண்டறியமுடியாது. என்று சுட்டிக்காட்டியுள்ளது.

" சின்னஞ்சிறு குழந்தைகளில் அதிக அறிகுறிகளை காணலாம்.எளிதில் சோகமாகலாம்,, அதிக அழுகை, இரவில் தனியாக தூங்க பயம்ம் அதிக எரிச்சல் மற்றும் அடக்கமுடியாத ஆத்திரம் இதில் அடங்கும்."

குழந்தையின் மனத்தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தின் ஆரம்பகாலகட்டத்தில் அவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை

திறம்பட குழந்தையின்  கவலைகள் கையாள்வது : 9 உத்திகள்

Inc.com படி, குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அதே சமயத்தில் அதிக செல்லம் மற்றும் சலுகை கொடுக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

அதிக சலுகைகளால் மட்டும் அவர்களது கவனத்தை திசை திருப்பவேண்டாம்.

உங்கள் குழந்தை கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம் நல்லதுதான்.ஆனால் , சிறு பதட்டம் நல்லதுதான்.அவர்களது ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளிவரவும். அவர்களது பயத்தை எதிர்கொள்ளவும் இந்த பதட்டம் உதவும்.

பெற்றோருக்குரிய பாணியும் வளர்ந்தலும் குழந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பதை நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்கிறார்கள் என்பது உண்மை.இருந்தும் குழந்தையின் கவலை கோளாறுகளுக்காக தங்களை குத்தம் சொல்லிக்கொள்ளக்கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது.அவர்களது மனோபாவம் மற்றும் குணநலம்தான் அவர்களது கவலை கோளாறை தூண்டும்.

உங்கள் குழந்தையின் ஏதேனும் பதட்டக்கோளாறை கண்டறிந்தால், அதை சமாளிக்க  சில உத்திகள் உள்ளன:

உடலியல் சமாளிப்பு திறன்களை கற்றுக்கொடுங்கள்

கோபமோ எரிச்சலோ வந்தால் , உதடுகளில் விறல் வைத்து பத்து வரை எண்ண கற்றுக்கொடுங்கள்

அடிப்படை பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்

நாளை தொடங்குவதற்குமுன், நன்றாக மூச்சை இழுத்து விட கற்றுக்கொடுங்கள்.

வாழ்க்கையின்  மாற்றங்களின்போது  உதவுங்கள்

மாற்றம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும், நடைமுறை ஒழுங்கு தவறாமல் இருப்பது மிக முக்கியம்.

எல்லா உணர்ச்சிகளுக்கும் மதிப்புண்டு  என்று உங்கள் குழந்தைக்கு கற்பிக்கவும்

நேர்மறை மற்றும்எ எதிர்மறை எதுவாக இருந்தாலும், எல்லா  உணர்ச்சிகளும் முக்கியம்.ஆனால் கவலை கொண்ட பிள்ளைகளுக்கு, நேர்மறையான உணர்வுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நேர்மறையான பக்கத்தை பார்க்க ஊக்குவிக்கவும்

தனக்கு நடந்த ஒரு நல்ல விஷயத்தை பற்றி தினமும் அவர்களை கேட்டு பழக்குங்கள். இதனால் நம்பிக்கையையும் திறமையும் மேம்படுகிறது.

மற்றவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிடுங்கள்

அகவயத் தன்மை கொண்ட குழந்தையை மற்றவர்களிடம் பேசச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

குழந்தையின் மனோபாவத்தை அறிந்துகொள்ளவேண்டும். அவர்கள் மனதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகமாக அறிவுரைத்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்காது;கொஞ்சம் கொஞ்சமாக புரியும்படி சொல்லிக்கொடுக்கவேண்டும்.

உங்கள் தினசரி  கிரியைகளில் உடற்பயிற்சியையும்  சேர்க்கவும்

மனநிலை மற்றும் உணர்ச்சி ரீதியாக குழந்தைகளை சமாதானப்படுத்துவதில் உடற்பயிற்சி பல  அதிசயங்களைச் செய்ய முடியும்.

உங்கள் தினசரி நடைமுறைகளில் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ளவும்.

தவறுகளைச் சமாளிக்கும் திறனை கற்றுக்கொடுங்கள்

சுய இரக்கம் கற்பிப்பதால் , தங்கள் செய்யும்  தவறுகளை கண்டு அதிகம் வருந்தாமல் இருக்க உதவும். மன்னிப்பு குணமும் மேம்படும்

அடிக்கடி கட்டி தழுவுங்கள்

தழுவலும் ஆறுதல் வார்த்தைகளும் மண்வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெருதும் உதவும் .உடலின் நல்ல ஹார்மோன்களை தூண்ட உதவும்.

Written by

theIndusparent