உங்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்!

செய்து பாருங்கள்!
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையுடன் பெற்றோர்கள் கண்ணாமூச்சி விளையாடி பழகவேண்டும். விளையாட்டாக மட்டும் இல்லாமல், குழந்தையின் ஊட்டச்சத்து நலனிற்காக சாப்பாட்டிலும் சில விஷயங்களை மறைத்துதான் கொடுக்கவேண்டும்.
எனவே குழந்தைகளுக்கு பிடித்தமான இந்திய உணவை பற்றி பேசப்போகிறோம்- தோசை.தோசை மிக சத்தான உணவு.அரிசி மற்றும் பருப்பின் சரியான கலவையை கொண்டிருக்கிறது.இரண்டையும் அரைத்து, இயற்கை நொதிகளால் மாவாக உண்டாகும். எனவே, அரிசி (கார்பஸ்), பருப்பு (புரதங்கள்) மற்றும் குடல் இயக்கத்திற்கு தேவையான பாக்டீரியா வின் நன்மைகள் உள்ளது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துடனும் உணவை தயாரிக்க அவர்களுக்கு தெரியாமல் தோசையில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 எளிய வழிகள்!
1. பீட்ரூட் பாஜி தோசை
குழந்தைக்கு பிடித்த பாவ் பாஜியை எப்படி தோசைக்குள் சேர்ப்பது என்று யோசித்ததுண்டா? உங்கள் குழந்தைக்கு பிடித்தமான தோசை .பீட்ரூட் பாஜி தோசையாகதான் இருக்கமுடியும்.
தேவையான பொருட்கள்
- ½ வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு
- 1 வேகவைத்த பீட்ரூட்
- 1 நறுக்கப்பட்ட வெங்காயம்
- 1 நறுக்கப்பட்ட தக்காளி
- சுவைக்க உப்பு
- வறுக்க 1 தேக்கரண்டி எண்ணெய்
- தோசை மாவு
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- பாவ் பாஜி மசாலா
செயல்முறை
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவைக்கவும்.வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வறுக்கவும்
- மசித்த உருளைக்கிழங்கையும் பீட்ரூட்டையும் சேருங்கள்
- சுவைக்காக, உப்பையும் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவேண்டும்
- சூடாறும்வரை கார்த்திருங்கள்
- சட்டியில் தோசை மாவை ஊற்றுங்கள்
- ஒரு பக்க தோசை வெந்தவுடன், 2 தேக்கரண்டி பாஜி கலவையை சேர்த்து அதில் தடவவும்.
சூடாக பரிமாறுங்கள்!
2 ப்ரோக்கோலி-கேரட் சைனீஸ் தோசை

ப்ரோக்கோலி என்று சொன்னாலே குழந்தைகள் ஓடிவிடும். இருந்தாலும், சைனீஸ் சமையலை என்றைக்குமே குழந்தை வெறுக்காது! வைட்டமின் ஏ, டி மற்றும் உணவுத் திசுக்களில் உயர்ந்த ப்ரோக்கோலியை சேர்ப்பதற்கு இது ஒரு புத்திசாலித்தனமான செய்முறையாகும்.
தேவையான பொருட்கள்:
- ½ நறுக்கப்பட்ட ப்ரோக்கோலி
- ½ நறுக்கப்பட்ட ஸ்பிரிங் ஆனியன்
- ½ நறுக்கப்பட்ட கேரட்
- 1 தேக்கரண்டி சோயா சாஸ்
- சுவைக்க மிளகு
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- டோஸா மாவு
செயல்முறை
- பாத்திரத்தில் எண்ணெயை சுடவைக்கவும் . அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
- சூடாற தனியாக வைத்துக்கொள்ளவும்
- தோசைக்கல்லில் தோசை மாவை ஊற்றுங்கள்
- தோசையின் ஒரு பக்கம் வெந்தபின், இரண்டு கரண்டி கலவையை தோசையில் சேர்க்கவும் .
- சூடாக பரிமாறவும்
3 சர்க்கரைவள்ளிக்கிழங்கு- அர்பி மசாலா தோசை
உங்கள் குழந்தைகள் வைட்டமின் பி 12 நிறைந்த உணவு எது என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள்.இதோ வந்துவிட்டது -சர்க்கரைவள்ளிக்கிழங்கு ! .நார்ச்சத்துகளில் மட்டுமல்லாமல், வைட்டமின் பி 12 அளவும் அதிகமாக உள்ளது. வைட்டமின் B6, சி மற்றும் மக்னீசியத்தை அர்பி- யிலிருந்து (கொலாசியா வேட்ஸ்) பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
- ½ வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு
- ½ வேகவைத்த அர்பி
- ½ தேக்கரண்டி கடுகு விதைகள்
- 3-4 கறிவேப்பிலை
- ஆயில்
- ½ தேக்கரண்டி நறுக்கப்பட்ட பூண்டு
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி வெட்டப்பட்ட கொத்தமல்லி
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- மிளகாய் தூள் மற்றும் உப்பு
செயல்முறை
- கடாயில் எண்ணெயை ஊற்றி, கடுகு விதைகள் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்
- கடுகு வெடித்தவுடன், மீதமுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வசிக்கவும்
- சூடாறும்வரை காத்திருக்கவும்
- கல்லில் தோசை மாவை ஊற்றவும்
- தோசையின் ஒரு பகுதி வெந்தபின், தோசையில் இரண்டு கரண்டி கலவையை சேர்த்துக்கொள்ளுங்கள்
சூடாக பரிமாறவும்
4 கீரை பன்னீர் தோசை

குழந்தைகளுக்கு கீரையை பிடிக்கவைக்க பாபாயால்தான்
முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு இரும்புதத்தை சேர்க்க, கீரையை வைத்து சில சுவையான உணவுகளை செய்யும் கட்டாயம் இருக்கிறது.மறுபுறத்தில் பனீர், புரதம் மற்றும் கால்சியம் சத்தை சேர்க்கும் உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- 100 கிராம் மசித்த பனீர்
- ½ தேக்கரண்டி வெண்ணெய்
- ½ தேக்கரண்டி கிரீம்
- 1 கப் பச்சடி,புயூரீட்
- ½ தேக்கரண்டி ஜீரா பவுடர்
- உப்பு
- 1 நறுக்கப்பட்ட வெங்காயம்
- 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட பூண்டு
- தோசை மாவு
- 1 தேக்கரண்டி எண்ணெய்
செயல்முறை:
- கடாயில் எண்ணெயை சுடவைக்கவும்
- வெங்காயம் , பூண்டு மற்றும் வறுத்த கீரை கொண்டு சமைக்கவும்
- மசித்த பனீர், வெண்ணெய், கிரீம் மற்றும் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- ருசிக்க உப்பு சேர்க்கவும்
- சூடாற காத்திருக்கவும்
- கல்லில் தோசை மாவை ஊற்றவும்
- ஒரு பக்கம் வெந்தவுடன், 2 கரண்டி கலவையை சேர்த்து தோசையில் தடவவும்
சூடாக பரிமாறுங்கள்
5 சுரைக்காய் - பூசணி தோசை

நோய்த்தடுப்புக்கு தேவையான வைட்டமின் சி உங்கள் குழந்தைக்கு பிடிக்காத காய்கறிகள் இருந்தால் என்ன செய்யமுடியும்? சிம்பிள். குழந்தைக்கு பிடித்த மசாலாவுடன் காய்கறிகளை சேருங்கள். காய்கறியும் நன்மையும் சுவையும் குழந்தைக்கு சேரட்டும்.
தேவையான பொருட்கள்
- ¼ துருவிய சுரைக்காய்
- ¼ துருவிய பூசணி
- 1 தேக்கரண்டி நறுக்கிய பூண்டு
- உப்பு
- எலுமிச்சை சாறு
- ஆரிகானோ
- மிளகாய் செதில்கள்
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 2 தேக்கரண்டி வெட்டப்பட்ட சீஸ்
- உப்பு ( Repeated twice)
செயல்முறை
- கடாயில் எண்ணெய் சுற்றி சூடாக்கவும்
- நறுக்கப்பட்ட பூண்டை சேர்த்து வறுக்கவும்
- துருவப்பட்ட சுரைக்காய் மற்றும் பூசணியை சேர்க்கவும்
- உப்பு, ஆரிகானோ மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
- தோசை மாவை கல்லில் ஊற்றவும்
- ஒரு பக்கம் வெந்தவுடன், கலவையின் இரண்டு பக்கம் சேர்க்கவும். அதில் துருவப்பட்ட சீஸை சேர்த்து ரோல் செய்யவும்
சூடாக பரிமாறவும்