உங்கள் குழந்தைக்கு வெல்லம்  கொடுப்பதற்கு யோசிக்கவேண்டாம்!

உங்கள் குழந்தைக்கு வெல்லம்  கொடுப்பதற்கு யோசிக்கவேண்டாம்!

பல மக்கள் இதில் சர்க்கரை தன்மை ஜாஸ்தி இருப்பதாக சொன்னாலும், வெல்லம்தான் வெள்ளை சர்க்கரைக்கு உண்மையான மாற்று. இதில் பலவித நன்மைகள் அடங்கி இருக்கிறது.

நம் வீட்டு  முதியோர்கள்  உணவிற்கு பின்  சிறிய வெல்லக்கட்டி சாப்பிட்டு பார்த்திருக்கீர்களா? எங்கள் மேற்கிந்திய பாரம்பரியத்தில், என் அம்மா அடிக்கடி வெல்லத்தினால் செய்த கோதுமை அல்வாவை பனிக்காலத்தில் செய்வார். நாங்கள் அதை  ரசித்து ருசித்து கொண்டாடிருக்கிறோம்!

வெல்லம் மேற்கிந்தியாவின் பாரம்பரியமான உணவுப்பொருள். பஞ்சாபிலும் ஹரியானாவி லும் அதிகமாக உற்பத்தி ஆகக்கூடியது. அனால் , பல தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு வெல்லம் கொடுக்க அஞ்சுகிறார்கள். குழந்தைகளின் செரிமானம் பாதிக்குமோ என்றுதான் அவர்களது பயம்.

பொதுவான கருத்தைப்போல் அல்லாமல் , வெல்லத்தில் அதிகப்படியான வைட்டமின்களும் மினரல்களும் அடங்கியுள்ளன. உங்கள் குழந்தையின் தினசரி உணவில் இது நிச்சயம் இருக்கவேண்டும்.

இதற்காக, 5  காரணங்களை நாங்கள் குறிப்பிடுகிறோம்.  ஒரு புதிய உணவு அறிமுகபடுத்தும்போது , முன்னெச்சரிக்கையாக , சிறிய அளவில் கொடுங்கள்.  அரிப்பு, காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற ஒவ்வாமை ஏற்பட்டால், உடனே கொடுப்பதை நிறுத்துங்கள்.

இரும்பு சத்து நிறைந்தது

அடர்த்தியான கரும்பு சாற்றை கொதிக்கவைத்து கெட்டியாகும் நேரத்தில் வெல்லம் தயாராகிறது. பல மக்கள் இதில் சர்க்கரை தன்மை ஜாஸ்தி இருப்பதாக சொன்னாலும், வெல்லம்தான் வெள்ளை சர்க்கரைக்கு உண்மையான மாற்று. இதில் பலவித நன்மைகள் அடங்கி இருக்கிறது.

இரும்பு, ஹீமோகுளோபின்  உற்பத்திக்கு அதிக பங்கு வகிக்கிறது. சிறுகட்டி வெல்லம் உங்கள் குழந்தையின் ஒரு நாள் இரும்பு தேவையை பூர்த்தி செய்து, இரத்த சோகை மற்றும் இரும்பு குறைபாடை தடுக்கிறது.

மலச்சிக்கலை தடுக்கிறது

வெல்லம், நொதிகளை  கிளர்வூட்டி, செரிமானம் அதிகரிக்க மற்றும் குழந்தைகளிடம் மலச்சிக்கல் போக்க உதவுகிறது. அது குடல் இயக்கங்களை சரிசெய்யும் உதவுகிறது. இதற்காகத்தான்,நம் வீட்டு முதியோர்கள்  உணவிற்கு பிறகு சிறிய வெல்லக்கட்டி சாப்பிடுவார்கள்.  

கால்சியம் நிரம்பியது

ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகள் கட்டியெழுப்பும் அத்தியாவசிய கனிமங்களான துத்தநாகம், செலினியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்  போன்றவை வெல்லத்தில் உள்ளதுவளரும் குழந்தைகளுக்கு கூடுதல் கால்சியம்  சேர்க்க வெல்லம்தான் ஒரே வழி.

சிறந்த கல்லீரல் டானிக்

வெல்லம், ஒரு சிறந்த கல்லீரல் டானிக்.நச்சுக்களை நீக்கி கல்லீரலை தூய்மையாகும் .ஆயுர்வேத மருந்துகளிலும் இது சேர்க்கப்படும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.

நோய்எதிர்ப்புத் திறனை வலிமையாக்கும்

குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறன் வலிமையானால்தான்  தொற்றுக்களையும், பருவகால நோய்களையும் சமாளிக்க முடியும். இதில் துத்தநாகம் மற்றும் செலினியம்  போன்ற ஆக்சி ஜன் தடுப்பிகள், நோய்எதிர்ப்புத் திறனை வலிமையாக்கும் .

Source: theindusparent

Written by

theIndusparent