உங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா? இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .

உங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா? இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .

பிறந்த குழந்தைகளின் பசியின்மை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, இண்டஸ்பேரண்ட் , டாக்டர் கீதா குமார், ஆலோசகர், மகப்பேறியல் , கொலம்பியா ஆசியா மருத்துவமனை, பெங்களூர், அவர்களை தொடர்பு கொண்டோம்.

இந்தியாவில் புதிய தாய்மார்கள் பெரும் கவலையில் இருக்கிறார்கள் . தாய்ப்பால் சுரக்காமல் போவது,போதுமான தூக்கம் பற்றும் பல காரணிகளால் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக தாய்ப்பால் ஊட்டுவது, சிலநேரங்களில் கொடுமையாக மாறிவிடும்.  பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது எத்தகைய போராட்டம் என்பது பல தாய்மார்களால் ஒப்புக்கொள்ளமுடியும். தன் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா என்ற கேள்வியும் ஐயமும் எல்லா தாயையும் திடுக்கிட வைக்கும்.

குழந்தையானது, மார்பகக்காம்பை சரியாக தன் வாயால் பற்றியிருக்கிறதா (latching)என்று அடிக்கடி சரிபார்த்தாலும் இக்கேள்வி எழும்.

பம்ப் பயன்படுத்தினால் ஒழிய உங்களால் தாய்ப்பாலை அளவிட முடியாது. அனால் உங்கள் குழந்தைக்கு நன்றாக பசி மாறிவிட்டதா என்று சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.

பிறந்த குழந்தைகளின் பசியின்மை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, இண்டஸ்பேரண்ட்   ,  டாக்டர் கீதா குமார், ஆலோசகர், மகப்பேறியல் , கொலம்பியா ஆசியா மருத்துவமனை, பெங்களூர், அவர்களை தொடர்பு கொண்டோம்.

போதுமான தாய்ப்பால் கிடைக்கிறதா என்பதை எப்படி உறுதி செய்வது ?
balanced diet

“குழந்தைக்கு போதுமான பால் வருகிறதா என்று தீர்மானிக்கும் ஒரேய வழி, அவரது எடையை கண்காணிக்க வேண்டும்.முதல் இரண்டு நாட்களில், 5 - 7 சதவீதம் எடை குறைவது இயற்கை. அது 10 சதவீதம் போனால் மட்டுமே மருத்துவர்கள் கவலை கொள்வோம்.பிறந்த குழந்தைகல் இரண்டு வாரத்திற்குள் அவர்கள் பிறந்த எடைக்கு திரும்பி விடுவார்கள் . பின்னர் வழக்கமாக 100-200gm  வரை எடை கூடும் " என்கிறார் டாக்டர். குமார்.

நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய அறிகுறிகளை  டாக்டர்.குமார் சுட்டி காட்டிருக்கிறார்.

 • உங்கள் குழந்தைக்கு குறைந்து 6 - 8 நாப்பி  துணிகளை ஈரமாக்கிருக்க வேண்டும்.அல்லது, 24 மணிநேரத்தில் குறைந்தது 5 களைந்துவிடும் நாப்பி துணிகளை ஈரமாக்கிருக்க வேண்டும்.சிறுநீர் மனமற்ற, நிறமில்லாத/ மங்கலாக இருக்க வேண்டும்.
 • கருமையான சிறுநீர் கழித்தல் குதந்தைக்கு தாய்ப்பால் போரவில்லை என்று அர்த்தம். உடனே மருத்துவரைஆலோசியுங்கள்.
 • பச்சிளங்குழந்தைகள், ஒரு நாளைக்கு மூன்று முறை நீர் போல் மலம் கழிக்கும். இது பல வாரங்களுக்கு தொடரும். பிறகு, குடல் இயக்கம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கும். மலம் கட்டியாக கழித்தல் குழந்தைக்கு தாய்ப்பால் போதாததின் அறிகுறி.
 • உங்கள் மார்பு, பாலூட்டும் முன் கனமாகவும்,ஊட்டியபின் மென்மையாகவும்  இருக்கும்.

"வாய் ஓரங்களில் இருந்து பால் கசிவு மற்றும் சப்பிக்குடிக்கும் நேரத்தில் அடிக்கடி விழுங்கும் சத்தம் போன்றவையும் அறிகுறிகளே " என்கிறார் டாக்டர்.குமார். ஆகமொத்தம், குழந்தை பால் குடித்தபின் திருப்தியாக தோன்ற வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள சில அறிகுறிகளை நீங்கள் கண்டுகொண்டிருக்கலாம்.இதில் பயப்பட எதுவும் இல்லை. உங்கள் குழந்தை ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் வரையில் உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்.

பல மருத்துவமனைகளில் தற்பொழுது பாலூட்டும் நிபுணர்கள் உள்ளனர். இவர்கள் பாலூட்டும் வாழுமுறைகளை புதிய தாய்மார்களுக்கு கற்றுத்தருவார்கள்.

"ஆரம்பகாலத்தில் பாலூட்டும்போது சில தயக்கமும் தடுமாற்றமும் இருப்பது இயல்பு. ஆனால் முயற்சி செய்யுங்கள்" என்றார். மேலும்,குழந்தை மருத்துவர் ஆலோசனைக்கு பின்னர்தான் புட்டிபால் கொடுக்கவேண்டும்

அபாயங்கள்
breastfeeding

பின்வரும் அறிகுறிகளை ஏதேனும் கண்டறிந்தால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

 • சோர்வு
 • சக்தியின்மை
 • பலவீனமான அழுகை
 • உலர்ந்த வாய் அல்லது கண்கள்
 • குழந்தையின் மண்டை ஒடின் மென்மையான இடம் மூழ்கி/ தாழ்த்தப்பட்டுள்ளது.
 • தோல் அதன் மீள்தெறிப்பை இழக்கிறது. மென்மையாக கிள்ளினால், கிள்ளிய இடம் சுருக்கமாகவே இருத்தல்.
 • காய்ச்சல்
 • கரு மஞ்சள் நிற சிறுநீர்.

Source: theindusparent

Written by

theIndusparent