உங்கள் குழந்தையை வளர்க்கவேண்டும் என்பதால். நிறைய கேள்விகள் இயற்கையாக எழுகின்றன: எனது குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த உணவு என்ன?குறுநடை போடும் குழந்தை என்ன கொடுக்கலாம், என்ன கொடுக்கக்கூடாது?
முதலில், உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட உணவின் தேவை என்ன?உதாரணமாக, உங்கள் குழந்தைக்கு பிடிக்காத உணவிற்கு சுவை சேர்க்க உப்பு சேர்க்கப்படுகிறது.
உப்பு, உணவிற்கு சுவை சேர்க்க உதவுகிறது.ஆனால் உங்கள் ஒரு வயது குறைந்த குழந்தைக்கு, வித்தியாசம் தெரியப்போவதில்லை
இருப்பினும், பெற்றோர்கள் இந்த தவறை அடிக்கடி செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில், உங்கள் குழந்தைக்கு ஒரு உணவு பிடிக்காமல் போன காரணம், அவர்களுக்கு தாய்ப்பால் குடிப்பது பழக்கமாகிவிட்டது.அறிமுகமில்லாத ஒரு உணவை சாப்பிடுவதற்கு பழகவில்லை.
ஆறு மாதங்கள் எட்டாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுவை மட்டுமே தெரிந்திருக்கிறார்கள்.இதனால் அவர்கள் உணவிற்கு உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
photo: dreamstime
உப்பு சேர்ப்பதனால் தீய விளைவுகள்
ஒரு குழந்தையின் தினசரி உப்பு தேவை ஒரு நாளைக்கு 1 கிராமிற்கு (0.4 கிராம் சோடியம்) குறைவாக உள்ளது.இதில் புட்டிபால் மற்றும் தாய்ப்பால் மூலம் சந்திக்கப்படும் அளவு.இதில் இருக்கும் அளவை விட அதிக உப்பும் சக்கரையும் அதிகம் சேர்த்தால்,அவரது சிறுநீரகங்கள் பாதிக்கும்.உங்கள் குழந்தை வளரும் போது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கான இடர்பாடுகள் ஏற்படலாம்
குழந்தை பருவத்தில் அதிக உப்பு உட்செலுத்துதலால்,ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் உண்டாகும்.
SACN ² பின்வரும் உப்பு தேவையை குழந்தைகளுக்கு பரிந்துரை செய்கிறது.
அடுத்த பக்கத்தில் குழந்தைகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட உப்பு உட்கொள்ளலைக் கண்டறிக
பல பெற்றோர்கள் வீட்டிலே குழந்தைக்கு உணவு தயார் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் பேக்கேஜ் உணவு வாங்க திட்டமிட்டால் , அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் பாதுகாப்பான உப்பு உள்ளடக்கத்தை தீர்மானிக்க வேண்டும்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) படி, 100 கிராமுக்கு 0.6 கிராம் சோடியம் அளவு ஏற்கனவே அதிகமாகத்தான் இருக்கிறது. சோடியம் அளவு 2.5 ஐ பெருக்குவதன் மூலம், உப்பு உள்ளடக்கத்தை கணக்கிட முடியும்.
ஊட்டச்சத்து தொடர்பான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (எஸ்ஏசிஎன்) படி,வயதுக்கு பரிந்துரைக்கப்படும் அதிகபட்ச உப்பு உட்கொள்ளல் பட்டியளிக்கப்படுகிறது
0-6 மாதங்கள்
<1 கிராம் (0.4 கிராம் சோடியம்)
6-12 மாதங்கள்
<1 கிராம் (0.4 கிராம் சோடியம் )
1-3 ஆண்டுகள்
2 கிராம் (0.8 கிராம் சோடியம்)
4-6 ஆண்டுகள்
3 கிராம் (1.2 கிராம் சோடியம் )
7-10 ஆண்டுகள்
5 கிராம் ( 2 கிராம சோடியம் )
11 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
6 கிராம் (2.4 கிராம் சோடியம்)
photo: dreamstime
குழந்தை உணவில் உப்பு ஒரு சிட்டிகை சேர்ப்பது பாதிப்பில்லாதது என்று நீங்கள் கருதினால், ஒரு “சிட்டிகை” என்பது எவ்வாறு கருதப்படுகிறது என்பதில்தான் ஆபத்து நிறைந்திருக்கிறது.
பொதுவாக, ஒரு 1 சிட்டிகை உப்பு 1/4 கிராமிற்கு சமம் .மூன்று வேலை உணவிற்கும் நீங்கள் உப்பு சேர்த்தால்,0.75 கிராம் உப்பு சேரும். மேலும், தாய்ப்பாலில் புட்டிப்பாலிலும் இருக்கும் உப்பும் இதனுடன் சேரும்.
உப்பு சேர்க்காமல் குழந்தையின் உணவுக்கு எப்படி சுவை சேர்க்கலாம்? ? நீங்கள் மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை போன்ற வயதுக்கு பொருத்தமான வாசனை பொருட்களை சேர்க்கலாம்.
photo: Pixabay
அடுத்த பக்கத்தில் உங்கள் குழந்தையின் உணவில் எப்படி சர்க்கரையை சேர்க்கலாம் என்பதைக் கண்டுபிடிக்கவும்.
பல பெற்றோர்கள் பெரும்பாலும் சர்க்கரையை தவிர்க்க ,குழந்தைகளுக்கு இனிப்பான ஊட்டச்சத்துமிக்க பழங்களை அறிமுகப்படுத்துவ தவிர்க்கிறார்கள். இது தவறு.
சர்க்கரை, இந்த குறிப்பிட்ட சூழலில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை .இதற்கு இனிப்பு பழங்கள் அர்த்தமாகும் என்ற அவசியமில்லை.
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சர்க்கரை ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?
1 . . சர்க்கரை நிறைய இரசாயன சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு உட்பட்டு இருப்பதால், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
2 அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல், குழந்தைகளுக்கு பல் சிதைவு மற்றும் பல் சொத்தை ஏற்படுத்தும்
3 அதிக சர்க்கரை உட்கொள்ளல் நோய் எதிர்ப்பு அமைப்பை அழிக்கும்.
4 உயர் சர்க்கரை உணவு கொண்ட குழந்தைகளுக்கு இதய நோய், உடல் பருமன், மற்றும் நீரிழிவு நோய் பிற்காலத்தில் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
சர்க்கரைக்கு என்ன மாற்று?
குழந்தையின் ஒவ்வொரு உணவுக்கும் இனிப்பை சேர்க்க அவசியமில்லை.எப்போதாவது இயற்கை இனிப்புகளை சேர்க்கலாம்.குழந்தை உணவுக்கான இயற்கை இனிப்பு எப்படி சேர்க்கலாம்?
குழந்தை உணவுக்கான இயற்கை இனிப்பு என்ன?
- குழந்தை உணவுக்கு எந்த பழத்தையும் இயற்கையாகவே இனிப்புடன் சேர்க்கலாம்.
- உங்கள் குழந்தைக்கு எட்டு மாதங்கள் வரை, பேரீச்சம்பழ சாற்றை சேர்க்கலாம்.
- குழந்தைக்கு ஒரு வயது ஆனா பிறகு, தேனை இயற்கை இனிப்பாக பயன்படுத்தலாம்.
Source: theindusparent