உங்கள் ஆறு மாத குழந்தைக்கு ஆப்பிள் ரவை பாயசம் செய்வது எப்படி

lead image

ஆப்பிள் ரவை பாயசம், குழந்தையின் ஆரோக்கியத்திற்குப் பயன்படும் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பின் ஒரு சிறந்த கலவையாகும்.

உங்கள் குழந்தை சாலிட் உணவை தொடங்கும் போது, அது

சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் கவலை., நீங்கள் எதிர்பார்க்கும் சுவையும் ஊட்டச்சத்தும் ஆப்பிள் ரவை பாயசத்தில் உள்ளது.

ஆப்பிள் ரவை பாயசம்,  குழந்தையின் ஆரோக்கியத்திற்குப் பயன்படும் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கொழுப்பின் சிறந்த கலவையாகும்.உங்கள் குழந்தைக்கும் பசி அடங்கி திருப்தியாக இருக்கும். ஜீரணம் எளிதாக இருப்பது மட்டுமல்லாமல், மலச்சிக்கலையும் போக்குகிறது.

தேவையான பொருட்கள்:

1/2 ஆப்பிள்

1 டீஸ்பூன் ரவை

1/2 கப் பால்

1/2 கப் தண்ணீர்

ஒரு சிறிய ஸ்பூன் நெய் (விரும்பினால்)

செய்முறை

ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.ஒரு கடாயை மெல்லிய சூட்டில் வாட்டவும். சிறிது நெய் சேர்த்து, ரவையை வறுக்கவும்.பிறகு ரவை கொஞ்சம் மென்மையாக்க,  தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

துருவிய ஆப்பிள் தூளை சேர்த்துக்கொள்ளவும்.அல்வா போன்ற பதம் வரும்வரை தண்ணீர் சேர்த்து சமைக்கவும். இறுதியில் பால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சூடாறின பிறகு, காலை உணவாக அல்லது குரும்பசி அடங்க உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.

தண்ணீரும், நெய்யயும் தவிர்த்து, பாலை மட்டும் பயன்படுத்தி பாயாசம் செய்யலாம்.மேலும், சுவையை மெருகேற்ற ஏலம் சேர்த்துக்கொள்ளலாம். கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும்.

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner