இரவில் விழித்திருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம்?

இரவில் விழித்திருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம்?

இந்த எளிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம்உ, ங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தை இரவில் அமைதியாக உறங்கும்

குழந்தைக்கு எப்பொழுதாவது உடல்நிலை சரியில்லாமல் போனால், இரவை சமாளிப்பதுதான் பெற்றோருக்கு பெரிய சவாலாக இருக்கும்.

வயது வந்தவர்கள் நோய்வாய்ப்பட்டாலே சிக்கல். இதில் தங்கள் உடலையே புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்கு, நிலைமை  இன்னும் மோசம் .

அணைத்து சங்கத்திலும் பெற்றோருக்கு வருத்தம் தரக்கூடிய விஷயம் - குழந்தை வலியிலும் அசௌகரியத்திலும் கஷ்டப்படுவதுதான்.

உடல்நலம் சரியில்லாத குழந்தையை ஆர்த்துக்கொள்ளும் பெற்றோருக்கு, சீக்கிரம் குணமாகவேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்வார்கள்.இதில் அடங்கும் அச்சமும் பீதியும் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.இருந்தும்,நோய்வாய்ப்பட்ட குழந்தை இரவில் தூங்குவதற்கு பெற்றோர் உதவியைதான் நாடும்.

" குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றால் பெற்றோர்கள்  கவலைபடுவது இயல்புதான்.முடிந்தவரை உங்கள் அச்சத்தை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் . இல்லையென்றால் ,உங்களால சரியான முடிவை எடுக்கமுடியாது" என்கிறார் பேரண்ட்டவுன் சமூக உறுப்பினர், கிர்ஸ்டென் எஸ்.

காய்ச்சலிலிருந்து தீவிரமான தொற்று வரை,  இந்த ஆறு வழிகாட்டுதல்கள் நிச்சயமாக உங்கள் குழந்தையின் அசௌகரியத்தை போக்கி, உங்கள் கவலையையும் மறக்கடித்துவிடும்.

நோயுற்ற குழந்தைகளுக்கு  இரவு ஆறுதல்: பெற்றோர்களுக்கான 6 வழிகாட்டிகள்

ஓய்வெடுக்க கட்டாயப்படுத்த வேண்டாம்

தூங்கவும் ஓய்வெடுக்கவும் குழந்தைகளின் முடிவாக இருப்பதுதான் நல்லது.

தங்களை வருத்திக்கொண்டு குழந்தைகள் ஒருபோதும் விளையாடமாட்டார்கள்.எனவே, அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுங்கள் .

தங்களை சிரமப்படுத்துக்கொள்ளாமல் மட்டுமே குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்.

உணவுத்திட்டத்தை கொஞ்சம் மாற்றலாம்

இரவில் விழித்திருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம்?

நோய்வாய்ப்பட்ட பிள்ளைக்கு பசியின்மை இருந்தாலும், பாரம்பரிய பத்திய  உணவு மட்டுமே கொடுக்கவேண்டும் என்றில்லை.

அவர்களுக்கு என்ன சாப்பிட விருப்பமோ என்று கேட்டுக் கொண்டு , அந்த உணவை எப்படி ஆரோக்கியமாக்குவது என்று பாருங்கள்.பிடிக்காத உணவை சாப்பிட கட்டாயப்படுத்தவேண்டாம்.

எந்த உணவையும் தவறவிடாமல் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.

காய்ச்சல், ஜலதோஷம் ,வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால் , நீரேற்றம் மிக  அவசியம்.நீர் மற்றும் சாறு மூலம் பெறப்பட்ட நீரேற்றம் மட்டுமல்லாமல் நூடுல் சூப், கோழி சூப், அரிசி கஞ்சி ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலமும் அதிக நீரேற்றம் பெறலாம்.

4 மணி நேரத்திற்கோ குழந்தை எதுவும் சாப்பிடாமலோ குடிக்காமலோ இருந்தால் உடனடியாக குழந்தை மருத்துவரிடம் எடுத்து செல்லுங்கள்.

 

மருந்து அருந்துவதை சுவாரஸ்யமாக்குங்கள்

எல்லா மருந்தும் சுவையாக இருக்காது.ருசி குறைந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டால், அதன் கசப்பை மறைக்க குளிர்ச்சியாக கொடுங்கள்.

தயிர் அல்லது புட்டிங்கில் கலந்துகொள்ளலாம்.

இரவில் விழித்திருக்கும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம்?

உணவில் மருந்தை கலப்பது மூலம், அதன் குணப்படுத்தும் திறன் மாறாது என்பதை மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

 

மூக்கடைப்பு நீக்கி அமைதியாக தூங்கச்செய்யுங்கள்

 

மூக்கடைப்புக்கு நெஞ்சு சளியும்தான் குழந்தையின் தூக்கத்தை அதிகம் பாதிக்கும்.

 

குழந்தைகளுக்கு தங்கள் மூக்கடைப்பை நீக்கமுடியாது .ஆதலால், மூக்கின் இரு துளைகளிலும் சலைன் சொல்யுஷனை செலுத்தவேண்டும்.

நினைவில் கொள்ளுங்கள்: மூக்கடைப்பு நீக்குமருந்து நான்கு வயதுக்கு கீழ் குழந்தைகள் பரிந்துரைக்கப்படவில்லை.

இரவில் சிறந்த நிவாரணத்திற்காக ஒவ்வொரு நாளும் இரண்டு முறை இதை செய்யுங்கள்.

மேலும், குழந்தைகளை நீராவி சுவாஸோக்கவோ அல்லது நெஞ்சில் தைலமும் தடவலாம்.

அவர்களுக்கு தலைவலி இருக்கிறதா? மிருதுவான மசாஜ் செய்யுங்கள்

நோயைப் பற்றி அறிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்

 

நல்லறிவு வெறும் சக்தி மட்டுமல்ல.அதை கொண்டுதான் பயத்தையும் போக்க வேண்டும்.குழந்தைகளுக்கு வந்துள்ள நோயை பற்றி அவர்களிடம் பேசுங்கள்.

தன் நோயை பற்றி தெரிந்திருந்தால் , குழந்தைகளுக்கு பயமோ கவலையோ இருக்காது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இருவரும் ஒரேய  விஷயத்திற்கு எதிராகதான் போராடுகிறீர்கள்.இதுவும் நிச்சயமாக கடந்துபோகும்.

 

குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்

நல்ல புத்தகம் அல்லது நல்ல திரைப்படம், குழந்தைகளின் கவனத்தை நிச்சயம் திசை திருப்பும்.

கவனத்தை திசைதிருப்புவது என்பது உங்களுக்கு அமைந்த பெரும் வாய்ப்பு , அம்மா அப்பாக்களே! இதை கவனமாக பயன்படுத்துங்கள்.

அளவில்லா அன்பு கொடுங்கள்

குழந்தைகளுக்கு நம் கவனம் நிச்சயம் தேவைப்படும்.அவர்கள் நோயுற்று இருந்தால்,பலமடங்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

நோய்வாய்ப்படுவது என்றாலே குழந்தைக்கு பயம் வரும்.இதனாலே அரவணைப்பும் ஆறுதலும் மிக முக்கியம். உடல் தேவைகளை மட்டுமே பார்க்காமல் உணர்ச்சி தேவையையும்  கண்டுகொள்ளவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவரிடம் கொண்டு செல்ல தயங்கவேண்டாம்.

இந்த வழிகாட்டுதல்களை உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக நீங்கள் நம்புகிறோம். உங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தையை  நீங்கள் எப்படி ஆறுதல்படுத்துகிறீர்கள்?

கீழே உள்ள கருத்து பட்டியலில்  எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Written by

theIndusparent