இந்த 4 வழிகளில் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக துன்புறுத்துகிறீர்களா ?

இந்த 4 வழிகளில் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக துன்புறுத்துகிறீர்களா ?

உங்கள் ஐந்து வயது குழந்தையிடம் சொன்ன சுடுசொல், அடிவாங்கியதைவிட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

உங்கள் ஐந்து வயது குழந்தையிடம் சொன்ன சுடுசொல், அடிவாங்கியதைவிட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

" உனக்கு என்னை பிடிக்குமா, பாப்பா? எனக்காக இதை செய்ய மாட்டியா"? என் தோழி தனது நான்கு வயது மகளை டிவி ரிமோட் தன்னிடம் கொடுக்க சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

பத்து நிமிடத்தில் ஐந்து வெவ்வேறு விதத்தில் குழந்தையிடம் கெஞ்சி பார்த்தள். இறுதியில் " உன் அப்பாவிடம் சொல்லி என்ன செய்கிறேன் பார். இன்னும் பத்து நாளைக்கு உன்னை டிவி பார்க்க விடாமல் செய்து விடுவேன்" என்று கத்தினாள்.

"அவளை கடுமையாகதான் கண்டிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவள் கேட்க மாட்டாள். அவள் டிவிக்காக எதையும் செய்வாள்" கையில் ரிமோட்டுடன் என்னை நோக்கி திரும்பினாள்.இருப்பினும், எங்கள் உரையாடலை அந்த குழந்தை கேட்டுக்கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை.

உடலளவில் அல்லது ஒருவரின் உடலில் காயங்கள்  உருவாக்கும் செயல்களை மட்டும்தான்  நாம் "அப்யூஸ்" என்று தவறாக நினைக்கிறோம்.அனால் குழந்தைகளை பொறுத்தவரை,செயல்களை விட வார்த்தைகள், ஆழமாக காயப்படுத்தும்.

உங்கள் ஐந்து வயது குழந்தையிடம் சொன்ன சுடுசொல், அடியைவிட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கீழே குறிப்பிட்டுள்ள  இந்த 4 வழிகளில் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக துன்புறுத்துகிறீர்களா  என்று எண்ணிப்பாருங்கள். இதை துன்புறுத்தலாக இதுவரை தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

1. குடும்பம், நண்பர்கள் மற்றும் பிரியமானவர்கள் முன்  கண்டிக்கப்படுகிறார்கள்

விருந்தினர்களுக்கு முன்னால் தங்கள்  குழந்தைகளின் சிறப்புத் திறன்களை வெளிக்காட்ட  இந்திய பெற்றோர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.இதில் ஏதேனும் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவதால், அவர்களை கருமையாக கண்டிப்போம். பெரும்பாலும் விருந்தினர்கள் முன் நிகழ்த்தப்படும் அத்தகைய சூழ்நிலைகளில், குழந்தைகள் நிராகரிக்கப்பட்டதுபோல் உணர்கிறார்கள்.அதே நேரத்தில் அவமான படுத்தப்படுகிறார்கள்.
இந்த 4 வழிகளில் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக துன்புறுத்துகிறீர்களா ?

நாம் செய்யும் இன்னொரு தவறு, நம் குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்கிறோம்.அவர்களை பற்றி நகைச்சுவையாக கேலிபேசும்போது, அவர்கள் அனைத்தையும் புரிந்தும், உணர்ந்து கொள்கிறார்கள்.

" அவளை பார். எவ்வளவு அழகாக செய்கிறாள். நீ ஏன் அவளை போல் செய்ய கூடாது"?

பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும்போது அல்லது நம் பிள்ளைகளை  மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர்கள் தாழ்ந்ததாக உணரப்படுவது  மட்டுமல்லாமல், தாங்கள் எதற்குமே பயன்படமாட்டோம் என்றும் நினைத்துக்கொள்வார்கள்.

இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன், அவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் எவ்வாறு உணர்வீர்கள்?

2 . அச்சுறுத்தல் / உணர்ச்சி ரீதியாக அச்சுறுத்தல்

" இப்பொழுது நீ இதை செய்யாவிட்டால், உன் அப்பாவிடம் சொல்வேன்"  "வீட்டுப்பாடத்தை சீக்கிரம் செய்து முடி. என்னிடம் அடி வாங்காதே" " நான் சொல்வதை கேட்டால், இன்னும் ஒரு மணி நேரம் டிவி பார்க்க அனுமதிப்பேன்" இதை எத்தனை முறை உங்கள் குழந்தையிடம் சொல்லிருப்பீர்கள்.

குறைந்தபட்சம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேல், இல்லையா?உங்கள் பிள்ளையின் உணர்வுகளுடன் உணர்ச்சி ரீதியாக விளையாடுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு காரியம் ஆகவேண்டும் என்றால் முதலில் உங்களை குஷிப்படுத்தவேண்டும் என்று காமிப்பதுபோல் தெரிகிறது.  

3.அவர்கள் சொல்வதை கேட்டு கவனத்தில் கொள்ளாதிருப்பது

ஒரு நாளில், நம் குழந்தைகளிடம்  " சேற்றில் விளையாடாதே" " சாப்பிடும் முன் கையை நன்றாக கழுவு" "ஆசிரியரின் அனுமதியின்றி உன் வகுப்பிலிருந்து வெளியே வராதே" " உன் ஆசிரியர் பேசும்போது பேசாதே" என்று பல்லாயிரம் விஷயம் சொல்கிறோம் .

ஆனால் உங்கள் பிள்ளை என்ன சொல்ல வருகிறார்  என்பதை  எத்தனை முறை உண்மையிலேயே கவனித்திருக்கிறீர்கள்? குழந்தைகள், தங்களுக்கு நல்ல சூழ்நிலை அமைந்தால்தான் மனம் திறந்து பேசுவார் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.அவர்கள் உங்களிடமிருந்து தங்கள் உணர்வுகளை மறைத்தால், புறக்கணிக்கப்படுவதாகவும் தனிமையாகவும் உணருவார்கள். எதிர்காலத்தில், உளவியல் ரீதியான தாக்கம் ஏற்படும். பிற்காலத்தில், உங்களிடமிருந்து நிறைய விஷயங்களை மறைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

4.குழந்தைகளை சத்தம் போடுவது

"நான் என் குழந்தையை அடிக்கமாட்டேன், அவனை அடிக்காமல், நான் சொல்ல விரும்புவதை புரியவைப்பேன்" என்றாள் ஒரு தோழி . " எப்படி முடியும் ?" என்று கேட்டேன்.

" நான் கோபப்பட்டு சத்தம் போடுவேன்.அப்படி சத்தம் போட்டால், என் விருப்பப்படிதான் அவன் இருக்கவேண்டும்.எத்தகைய கோவத்திலும், அவனை அடிக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்"

என்று பெருமையுடன் பதிலளித்தாள்.

உண்மையில், அந்த குழந்தைக்காக நான் வருத்தப்பட்டேன். உங்கள் முகபாவம், உடலபாவம், குரல்  மாறுபடுதல்

குரல் ஒலி அளவு,  சத்தமிடுதல், என்று இவை அனைத்தும் உங்கள் கோபத்தை காட்டும். உங்கள் கோபம், குழந்தைகளை உணர்ச்சி ரீதியாக பாதிக்கும் .

ஒவ்வொரு நாளும் குழந்தையை சத்தம்போடுவதற்கு பதிலாக, ஒரு அரை அரைந்துவிட்டு பிரச்னையை முடித்தால், குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும் .

Source: theindusparent

Written by

theIndusparent