இந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்

இந்திய பெற்றோர்கள் இந்த 6 கேள்விகள் கேட்பதை நிறுத்தவேண்டும்

நாம் குழந்தைகளை கேட்க கூடாத கேள்விகள் இவை

நேற்று, என் தோழி அவளது மூன்று வயது மகளை ஒலியியல் ( phonetics ) பயிலகத்தில் சேர்த்ததாக சொன்னாள். அவள் குழந்தைக்கு நாட்டமிருக்கிறதா என்று கேட்டபோது, " அவளுக்கு இஷ்டம்  இருக்கோ இல்லையோ, இதன் அடிப்படையை அவள் கற்றுகொண்டே ஆகவேண்டும்" என்றாள்.

இந்த கருத்தோடு எனக்கு வேறுபாடு இருந்தாலும், பெற்றோர்களாகிய ஆகிய நாம், இதை அடிக்கடி செய்வோம். இந்திய பெற்றோர்களாகிய  நாம், நம் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு, கருத்துகளை திணித்து,வற்புறுத்தி நமக்கு சரி என்று படுவதை செய்யச்சொல்வோம். அனால், இந்த சிறு  குழந்தைகளுக்கு இதன் பின்னல் ஒளிந்திருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு  வயதும், முதிர்ச்சி யும் இல்லை.

மேலும், நம் குழந்தைகள்,  நம்மை பார்த்துதான் பல விஷயங்களை பின்பற்றுகின்றன. பலமுறை ஒரே கேள்வியை அவர்களிடம் தொடர்ந்து கேட்டால், அவர்கள் பலமுறை பதிலளிக்க மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார். பிறகு, நீங்கள் சொல்வதையே கேட்டுக்கேட்டு, அவர்களது சொந்த அடையாளத்தையம் தனித்தன்மையையும் இழக்கிறார்கள்.

நாம் குழந்தைகளை கேட்க கூடாத கேள்விகள் இவை :

1 . நீ வளர்ந்தவுடன் என்னவாக ஆசைப்படுகிறாய்?

பெற்றோர்களாகிய நாம் இந்த குற்றத்தை செய்பவர்கள்தான். கேட்ட கேள்வி தப்பில்லை . அனால் இதற்கு அவர்கள் அளிக்கும் பதில் உங்களிடம் ஒரு குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்தும். உதாரணமாக, உங்கள் குழந்தை ஒரு நடிகையாகவோ இல்லாது மாடலாகவோ ஆகா ஆசைப்பட்டால், நீங்கள் நிச்சயமாக அவர்களை கண்டிப்பீர்கள்.

fix your kids

அனால் ஒரு டாக்டராகவோ இஞ்சினீராகவோ ஆசைப்பட்டால்,உங்களுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியாது.

உங்களிடமிருந்து வரும் பதில்தான் அவர்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களை திருப்திப்படுத்துவதற்காக யோசிக்கும் பதில், அவர்களுக்கு மனஅழுத்தத்தை தரும். பிற்காலத்திலும், தனக்கு வேண்டியதை பற்றி யோசிக்காமல் உங்களை சந்தோஷப்படுத்த மட்டுமே முடிவெடுப்பார்கள்.

உனக்கு யாரை மிகவும் பிடிக்கும் ?

எத்தனைமுறை உங்கள் குழந்தையிடம் " உனக்கு யாரை மிகவும் பிடிக்கும் ? அம்மாவா? அப்பாவா? தாத்தாவா? பாட்டியா? அத்தையா? சித்தியா? " என்று கேட்டிருப்பீர்கள். இந்த கேள்வி , மனதில் ஒரு சார்பை ஏற்படுத்தும். உங்களை சந்தோஷப்படுத்த ஒரு பதிலை கண்டுபிடிப்பார்கள்.இது  சொந்த முடிவல்ல, உங்கள் தாக்கத்தால் ஏற்பட்ட முடிவு. .

ஏன் உங்கள் குழந்தையை அம்மாக்கும் அப்பாக்கும் இடையே தேர்வு செய்ய சொல்கிறீர்கள்? உங்கள் குழந்தை உங்கள் இருவரையும் அன்புடன் நடத்தவேண்டாமா ? குழந்தைகளுக்கு அனைவரையும் அன்போடும் மரியாதையோடும் சமமாக நடத்த கற்பிக்க வேண்டும். சரியா?

உன் தோழனைப்போல்  நடந்துகொள்ளமாட்டாயா ?

நம் குழந்தையின் குணநலன்களை நாம்தான் வளர்க்கிறோம் என்பதை அடிக்கடி மறந்துபோகிறோம். அப்படி ஒரு கேள்வி கேட்டால், அவன் தன்   தனித்துவத்தை இழந்து வேறு ஒருவரை போல் நடந்துகொள்ளவேண்டும் என்று அர்த்தமாகும்.

நான் எதிகாலத்தை பற்றிதான் பேசுகிறேன். ஒரு குழந்தையின் மனோபாவத்தை தீர்மானிக்கும் வேறு பல காரணங்கள் இருந்தாலும், அவனது எதிர்காலத்தின் செங்கற்கள் குழந்தைப்பருவதில்தான் பதிக்கப்படுகின்றன.

நீ ஏன் சீக்கரம் சாப்பிட கூடாது ?

ஒரு பக்கத்தில், நான் தாய்மார்கள் அனைவரும், நம் குழந்தை சாப்பிடாமல் அடம்  பிடிக்கிறான் என்று புலம்புவோம். அதே சமயத்தில், சீக்கரம் சாப்பிடு என்றும் வற்புறுத்துவோம் . உங்கள் குழந்தைக்கு தன் உணவை சுவைத்து மகிழ அவகாசம் கொடுங்கள்.

நீ என் சீக்கிரம்  தயாராக கூடாது ?

இந்த கதை எல்லா வீட்டிலும் பொதுவாக நடக்கக்கூடியதுதான். 8:35 டிரெய்னய் பிடிப்பதற்கும், காலகெடுவிற்குள் வேலையை முடிப்பதற்கும் நமக்கு 24 மணி நேரம் போதவில்லை. நம் எரிச்சலையும் கோபத்தையும் அவர்கள்மேல் திணிக்கிறோம்.இந்த கலவரத்தில் நம் குழந்தைகளுக்கு நேரம் காலமெல்லாம் ஒரு  விஷயமல்ல என்பது புரியாமல் போய்விடுகிறது.

நாம் என் சீக்கரம் தயாராகக்கூடாது? அப்படி தயாரானால், நம் குழந்தைகளுக்கும் 10 நிமிடங்கள் அதிகமாக கிடைக்குமே?அவர்கள் வெறும் குழந்தைகள்தான். வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கட்டுமே!

இதை எடுத்துக்கொள்!

உங்களுக்கு நீங்கள் தேர்ந்தேடுத்த  புது டிரஸ்ஸை உங்கள் மகள் உடுத்தவேண்டும் என்று ஆசை. அனால் உங்கள் மகளுக்கோ ஜீன்ஸ் டீ ஷர்ட் தான் பிடித்திருக்கிறது. எங்கள் என்ன செய்வீர்கள் ?உங்கள் மகள் தேர்ந்தெடுத்தது சரி இல்லை என்று நம்பவைத்து நீங்கள் எடுத்த டிரஸ்தான் அவளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்வீர்கள் . இதனால், அவள் தனக்கென்று தேர்ந்தெடுக்கும்  திறனும், தன்னம்பிக்கை யும்  பாதிக்கும்  .

வேறு சில கேள்விகளை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டுமா ? எங்களிடம் சொல்லுங்கள்!

Source: theindusparent