இந்திய பணியாற்றும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் 5 சவால்கள்

இந்திய பணியாற்றும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் 5 சவால்கள்

நீங்கள் ஒரு குழுத் தலைவராகவோ அல்லது பிராஜெக்ட் தலைவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் குடும்பம் என்று வந்தால், நீங்கள்தான் முக்கிய பொறுப்பாளி.

இந்திய தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பணியாற்றும் தாயாக இருந்தால், உங்கள் சவாலாக; இரட்டிப்பாகி விடும்.

பணியாற்றும் தாய் என்ற கருத்தாக்கத்தை இன்னும் நம் இந்திய சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் ஒரு குழுத் தலைவராகவோ அல்லது பிராஜெக்ட் தலைவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் குடும்பம் என்று வந்தால், நீங்கள்தான் முக்கிய பொறுப்பாளி.இதனுடன், உங்கள் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளையும், மாமியாரின்  எதிர்பார்ப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான சவால்களை எதிர்கொள்வீர்கள்.

ஒரு  உலக வங்கி ஆய்வில்,  15 வயதிற்கு உட்பட்ட பெண்மணிகளில் 27% மட்டுமே இந்தியாவில் வேலை செய்கின்றனர். இது பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) நாடுகளை காட்டிலும் இந்தியாவில் இது மிக குறைவுதான். சீனாவில்தான் அதிக அளவு பெண்கள் வேலை செய்கிறார்கள் ( 64 %)

இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? இதுதான்  என் கருத்து.பணியாற்றும் தாய்மார்கள் வாழ்க்கையில் பல சவால்கள் எதிர்கொள்கிறார்கள்.இந்த சவால்கள் பலவும் அவளது ஊக்கத்தை குறைக்கும்.

இதனால் பல பெண்கள் தங்கள் பணிகளை விட்டு இல்லத்தரசி ஆகிறார்கள். இது சுய சேர்வை விட, கட்டாயத்தினாலும் கடமைக்காகவும் எடுத்த முடிவாக அமைகிறது.ஒரு பணியாற்றும் தாயாக நான் எதிர்கொண்ட சில சவால்கள்.

1. உங்கள் கடமைகளை பற்றி தொடர்ந்து நினைவுபடுத்தபடுகிறீர்கள்

குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள மட்டும்தான் பல பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள்.உங்கள் பிள்ளை உடல்நிலை சரியில்லாமல் இருந்து , உங்கள் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருந்தால், முதலில் உங்கள் பிள்ளையை கவனித்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.

உங்கள் குழந்தையை டேகேரில் சேர்த்தால், நீங்கள் ஒரு சுயநலவாதி என்றும் குழந்தையை அலட்சியம் செய்வதாக தூற்றப்படுவீர்கள்.
working

திருமணமானவுடன், ஒரு பெண், தன எல்லா தேர்வுகளுக்கு முடிவுகளுக்கும் கடும் விமர்சனத்திற்குள்ளாகிறார்.அவள் எப்பொழுது குழந்தையை பெற வேண்டும்,எப்படி வளர்க்க வேண்டும் என்று சமுதாயம் நிர்ணயிக்கிறது.

இது போன்ற விதிகளை  பின்பற்ற மறுக்கும் பெண்களை, திமிர் பிடித்தவள் என்று சமுதாயம் தீர்மானிக்கிறது.குழந்தைகள் பிறந்தும் அவ்ளவேலைக்கு சென்றால்.அவள் சுயநல வாதி.பல படித்த குடும்பங்களும் இதைத்தான் சொல்கிறது.

2.உங்கள் அலுவலகத்தில் குறைவாக மதிப்பிடப்படுகிறீர்கள்

நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும்,அதிகப்படியான விடுப்புகள் எடுத்தாலோ அல்லது சீக்கிரம் வெற்றிக்கு சென்றாலோ, சற்று குறைவாகத்தான் மதிப்பிடப்படுகிறீர்கள் .இதற்காகதான், பல தாய்மார்களுக்கு  இந்திய நிறுவனங்களில் முக்கிய பாத்திரங்கள் வழங்கப்படுவதில்லை.மேலும், தாய்மார்களை கருத்தில் கொண்டு சில பணியிடங்கள் மட்டுமே இளக்கமான பணிநேரங்களும், டேகேர் வசதிகளும் அளிக்கிறது

தில்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளிலும் பணிபுரியும் 1,000 பெண்களைப் பற்றிய பிரபலமான ஆய்வில், குழந்தை பெற்ற பிறகு 18-34% பெண்கள் மட்டுமே தொடர்ந்து பணிபுரிகிறார்கள்.

இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் மற்ற சவால்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்

3.உங்களால் அதிகமாக பயணம் மற்றும் நைட் ஷிஃப்டில் வேலை செய்யமுடியாது

வேலை வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கும் சமயத்தில்,இந்திய தாய்மார்கள் தங்களது வேலை தேடலை ஆசிரியர் பணிக்கோ  அல்லது 9 -டு - 6 டெஸ்க் வேலைகளுக்கோ குறைத்துக்கொள்வார்கள். பல வேலைவாய்ப்பு போர்டல்களும் இதைஒரு வரைகூறாக குறிப்பிடுவது அபத்தமானது.

ஒரு நேர்காணலுக்கு போனால்கூட,உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், குழந்தை பற்றி பல கேள்விகள் எழுப்பப்படும்.உங்கள் வேலையே தீர்மானிக்கும் விஷயங்கள் இதுதான்.

4, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கும் , குழந்தைக்காக வேலையிலிருந்து ஓய்வு எடுக்க எதிர்பார்க்கப்படுகிறீர்கள்

குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு சேருவது பெரிய சவால். குடும்பத்தினர் யாரும் இல்லாமல், குழந்தையை பார்த்து கொள்ள ஒரு அந்நியரை நியமிப்பது ஆபத்து. நீங்கள் சார்ந்திருக்க மிக குறைந்த டேகேர்கள் உள்ளன.

இந்திய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வைத் தேர்ந்தெடுத்து, நல்ல சம்பளமுள்ள வேலைகளை விட்டுக்கொடுகிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் மிக குறைவு.அப்படியே அமைந்தால்கூட, அந்த வேலையே தொடர போதுமான சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
working-mom

5. நீங்கள் ஒரு சூப்பர் உமனாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் குடும்பத்தை விட வேலைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், எல்லாவற்றையும் கையாளக்கூடிய ஒரு சூப்பர் உமனாக இருக்க எதிர்பார்க்கப்படுவீர்கள்

குடும்பம், பிள்ளையின் பி.டி.எம் மீட்டிங், ஆண்டு விழா, உறவினர் திருமணம் என்று எதுவாக இருந்தாலும்,, உங்கள் இருப்பு அங்கே எதிர்பார்க்கப்படுகிறது.ஏதேனும் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் தவறினால், நீங்கள் ஒரு பொறுப்பில்லாத அம்மாவாக கருதப்படுவார்கள்.

இந்த குற்றசாட்டை பல முறை சந்தித்திருக்கிறேன்.அதிர்ஷ்டவசமாக, என் கணவர், என்னோடு எல்லா வேலை சுமைகளை  பகிர்ந்துகொள்கிறார் .துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான இந்திய பெண்களுக்கு இந்த ஆதரவு கிடைப்பதில்லை. இதுபோல் எதிர்காலத்தில் அமைவதற்கும் சாத்தியம் குறைவுதான்.

Source: theindusparent

Written by

theIndusparent