இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்

இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்

ஆயுஷ் அமைச்சகம், மாதர் அண்ட் சைல்ட் கேர் என்று அழைக்கப்படும் மகளிர்- குழந்தை பராமரிப்பு கையேட்டை, இந்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டுதலுக்காக வெளியிட்டிருக்கிறது.

நீங்கள் ஒரு இந்திய கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால், ஆயுஷ் அமைச்சகம் உங்களுக்கான சில பரிந்துரைகளை வழங்குகிறது -பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்பதுதான்.உண்மைதான்!

ஆயுஷ் அமைச்சகம், மாதர் அண்ட் சைல்ட் கேர் என்று அழைக்கப்படும் மகளிர்- குழந்தை பராமரிப்பு கையேட்டை, இந்திய கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டுதலுக்காக  வெளியிட்டிருக்கிறது.

இந்திய சிகிச்சைமுறைகளை மேம்படுத்துவதற்காக யோகா மற்றும் நேச்சுரோபதி (சி.சி.ஆர்.வை.ன்.என்) கவுன்சில் நியமிக்கிறது.
இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்

கையேட்டின் பதினான்காம் பக்கம்தான் ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது.அதில், வெற்றிகரமான பிரவேசத்திற்கும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க "கர்ப்பிணி பெண்கள் ஆசை, கோபம், பந்தம் , வெறுப்பு மற்றும் காமத்திலிருந்து விலகி இருக்கவேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஆன்மீக எண்ணங்களோடு இருப்பதோடு , வீடு முழுக்க  அழகிய குழந்தைகளின் புகைப்படங்களை மாட்டி வைத்தால் , ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்றும் எழுதப்பட்டிருக்கிறதுஇந்த கையேட்டை

.ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ,மாநில அமைச்சர் ஸ்ரீபத் நாயக் வெளியிட்டார்.

எனினும், எதிர்பார்த்தபடி ,வல்லுநர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

" இதில் அறிவியல் காரணம் எதுவும் இல்லை .கர்ப்பிணி பெண்கள் புரோட்டீன் குறைபாடு  மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்படாமல் இருக்க இறைச்சி அவசியம் சாப்பிடவேண்டும்.இறைச்சி,  புரதம் மற்றும் இரும்பின் சிறந்த மூலாதாரம். தாவரங்களிலிருந்து பெறுவதைபிவ இறைச்சியிலிருந்து ஊட்டச்சத்தை பெறுவது உடலுக்கு நல்லது" என்கிறார் அப்பல்லோ ஹெல்த் குழுமத்திலிருந்து டாக்டர் மாளவிகா

சபர்வால்.

பின்னர், இவை எல்லாம் பரிந்துரைகள்தான், கட்டளைகள் இல்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்திருக்கிறது.

"இவை அறிவுரைகள்தான். ஆரோக்கியமான குழந்தை பெற பாலியல் மற்றும் மாமிசத்தில் ஈடுபடக்கூடாது என்பது கட்டளை இல்லை" யோகா மற்றும் இயற்கை மருத்துவ கவுன்சிலில் பணியாற்றும் டாக்டர் ஈஸ்வர ஆச்சார்யா

கர்பம் குறித்து இந்தியாவில் பொதுவான தொன்மங்கள்

இதில் குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அபத்தமாக இருக்கிறது. ஆறுவயது குழந்தையின் தாய் நான்.என் கர்பகாலத்தில் என் கணவருடன்  நிறைய செக்ஸ் வைத்துக்கொண்டேன் , இறைச்சி சாப்பிட்டேன் மற்றும் என் கணவரிடம் தினம் ( ஹார்மோன்களின் காரணமாக ) சண்டைபோடுவேன்.இவை எதுவும் என் பிரசவத்தை பாதிக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தைக்கு தாயானேன்

இந்தியாவில் கண்மூடித்தனமாக கர்ப்பம் குறித்த தொன்மங்கள் பின்பற்றப்படுகின்றன.இதை உறுதிப்படுத்துவதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதுதான்  உண்மை

  • மூன்றாம் மாதத்திலிருந்து நெய் நிறைய சாப்பிட்டல் , குழந்தை வேகமாக வெளியே வரும்
  • வெள்ளை உணவு நிறைய சாப்பிட்டால் (தயிர் மற்றும் பன்னீர் போன்ற வை ), சிகப்பான குழந்தை பிறக்கும்
  • குறைவான இதய துடிப்பு இருந்தால் ஆண். வேகமான இதய துடிப்பு இருந்தால் பெண்
  • கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் வலி எடுத்துவிடும்
  • அழகான கொழுகொழுகுழந்தை படங்களை பார்த்துக்கொண்டே இருந்தால்,உங்களுக்கும் அது போல் பிறக்கும்
  • இரண்டு உயிர்களுக்காக சாப்பிடவேண்டும்
  • பாலியல் உறவு கொள்ள கூடாது.அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே எந்தவொரு தகவலையும் பின்பற்றுவதற்கு முன்,நன்றாக யோசிக்க வேண்டும்.

Written by

theIndusparent