ஆஹா! குரங்குகளால் வளர்க்கப்பட்ட 'மோக்லி பெண்' உ.பியில் காணப்பட்டாள்

ஆஹா! குரங்குகளால் வளர்க்கப்பட்ட 'மோக்லி பெண்' உ.பியில் காணப்பட்டாள்

இந்த 'மோக்லி பெண்ணால் பேசவோ அல்லது மொழி புரிந்துகொள்ளவோ இயலாது. விலங்குகள்போல் கீச்சிடுவாள், நான்கு கால்களில் நடப்பாள்

இந்தமோக்லி பெண்ணால் பேசவோ அல்லது மொழி புரிந்துகொள்ளவோ இயலாது.  விலங்குகள்போல் கீச்சிடுவாள், நான்கு கால்களில் நடப்பாள்

நாம் அனைவரும்  ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய தி ஜங்கிள் புக்  படித்திருப்போம்.அதில், பெற்றோர் இழந்த சிறுவன் ஓநாய்களால் வளர்க்கப்படுவான். ஒரு மனிதன் எப்படி விலங்குகளால் வளர்க்கப்படுவான்? இது கற்பனைக்கும் எட்டாமல் இருக்கிறதல்லவா?

இப்பொழுது இது சாத்தியம் மட்டுமில்லாமல், நிஜவாழ்விலும் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. இது உண்மைதான்!

நிஜ வாழ்க்கையில் இந்திய மோக்லி

கிப்ளிங் புத்தகத்தய் நேரில் பார்த்ததுபோல், ஒரு எட்டு வயது சிறுமி உத்தர் பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் அருகே அந்த ஊர் கிராமத்தினரால் மீட்கப்பட்டாள்.சரணாலயதிற்கு அருகே இருக்கும் மோடிப்பூர் கிராமத்தில் காணப்பட்டு,மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டாள்.

புத்தகத்தில் இருப்பதுபோல், கிராமத்தினர் அந்த பெண்ணை  மீட்கும்போது, குரங்குகள்  கடினமான எதிர்ப்பு காட்டினார்கள். அந்த சிறுமியை தொட அனுமதிக்கவில்லை .எனினும், போலீசிடம் தெரிவித்து அந்த நிர்வாண சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள்.

விலங்கை போன்ற சிறுமி

மோக்லி பெண்என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த எட்டு வயது  சிறுமி, விலங்குகள்போல், நான்கு கால்களில் நடந்தாள்.

குரங்குகளால் வளர்க்கப்பட்டதால்,அவளுக்கு மனிதர்களின் மொழியை பேசவோ புரிந்துகொள்ளவோ தெரியவில்லை.

 

mowgli girl

Image courtesy: Youtube

அவளுக்கான மீட்பு பணி மிக கடுமையானது. நாங்கள் கண்டெடுக்கும்போது, உடலில் பலத்த காயத்தோடு காணப்பட்டாள். அவளுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதும்,அவளது பெற்றோர்களை கண்டுபிடிப்பதும்தான் எங்கள் முதல் கடமைஎன்கிறார் தினேஷ் திரிபாதி, காவல்துறை  ஆய்வாளர்.

அந்த சிறுமி மிகவும் பலவீனமாகவும் பசியுடனும் இருந்தாள்.  குரங்குகள் வளர்பதற்காகவே பெற்றோர்களால் கைவிடப்பட்டதுபோல் தெரிந்தது.

மனித நடத்தையை வேகமாக கற்றுக்கொள்கிறாள்

தலைமை மருத்துவ ஆய்வாளர், டி.கே. சிங், அச்சிறுமி காட்டிலே அதிக நாட்கள் வளர்ந்ததால், குரங்கைப்போலவே கீச்சிடுகிறாள் என்று கூறியுள்ளார்.

அவளுக்கு எந்த மொழியையும் பேசவோ புரிந்துகொள்ளவோ முடியவில்லை. விளங்கிகளுடனே வளர்ந்ததால், அது போலவே நடந்துகொண்டாள்என்றும்இப்பொழுது சில சைகைகளால்,வார்டு பாய், செவிலியர் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களை தெரிந்துகொள்கிறாள்என்கிறார்.
ஆஹா! குரங்குகளால் வளர்க்கப்பட்ட 'மோக்லி பெண்' உ.பியில் காணப்பட்டாள்

அவளால் சைகை புரிந்துகொள்ளமுடிகிறது. சீக்கிரம் மனித சூழலுக்கு தழுவிக்கொள்வாள்.இரண்டே மாதங்களில் நிறைய கற்று கொண்டாலும், இன்னும் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.

இந்தமோக்லி பெண்கதையால் ஒரு பெண் குழந்தையை கைவிடும் மனிதத்தன்மையற்ற செயலை முன்னுக்கு வைக்கிறது. இந்திய பெற்றோருக்கு இன்னும் ஆண் பிள்ளைகள் மீதுதான் ஆர்வமிருப்பதாக தெரிகிறது.

கதையில் புதிய திருப்பம்

மோக்லி பெண்‘  காட்டில் வளர்க்கப்பட்டதாக எழும் குற்றசாட்டை போலீசார் மறுக்கிறார்கள்.”எஹ்சாஸ்என்று பெயர்  சூட்டப்பட்ட இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.

தற்பொழுது  குழந்தைகள காப்பகத்திற்கு கொண்டுசேர்க்கப்பட்டாள்

மற்ற குழந்தைகளோடு அவள் வளருவாள் . இந்த இரண்டு மாத சிகிச்சையில், இப்பொழுதுதான் அவள் சிரித்து  பார்க்கிறோம்.தன்னை போன்ற குழந்தைகளை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தாள். எங்களுக்கு சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததுஎன்று பகிர்ந்தார்  அருண் சவுதாரி, ஆர்வ ஊழியர் , பாகரைச் சைல்டுலைன்.

பெற்றோருக்கு இன்னும் ஆண் பிள்ளைகள் மீதுதான் ஆர்வம்

இந்திய பெற்றோருக்கு இன்னும் ஆண் பிள்ளைகள் மீதுதான் ஆர்வமிருப்பதாக, இந்திய மனிதவள மேம்பாட்டு மையம் ( ஜஹ்ஸ்) ஆய்வுகள் தெரிவிக்கின்றது. சில பெற்றோர்கள், ஒரே ஒரு பெண்குழந்தைக்கு விருப்பம் தெரிவித்தனர்.

  • கணக்கெடுக்கப்பட்ட  சுமார் 73 சதவீதம் பெற்றோர்கள், ஒரு மகளாது  வேண்டும்  என்று தங்கள் ஆசையை வெளிப்படுத்தினார்.
  • 11  சதவீதம் பெற்றோர்கள், இரண்டு பெண்குழந்தைகளுக்கு ஆசைப்பட்டனர்
  • 60  சதவீதம் பெற்றோர்கள், ஒரு மகன் மட்டும் போதும் என்று கூறியுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு, சமூகத்தில் இதுபோன்ற களங்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.வளர்ந்து வரும் காலத்திலும், இது போன்ற சார்பு கொடிகட்டி பறக்கிறது.

இந்த சிறுமி தன்னை சுற்றிருக்கும் சூழலிலிருந்து எப்படி கற்றுக்கொள்கிறாள் அன்று பார்க்க பின்வரும் விடியோவை பார்க்கவும்.

Source: theindusparent

Written by

theIndusparent