ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது: உங்கள் குழந்தைகளிடம் சத்தம் போடுவது வேலைக்கு ஆகாது.

ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது: உங்கள் குழந்தைகளிடம் சத்தம் போடுவது வேலைக்கு ஆகாது.

சில சந்தர்ப்பங்களில் குழந்தையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமில்லாமல், இது பயனற்றதாகவும் இருக்கிறது.

உங்களால் முடியவில்லை.

காலை நான்கு மணிக்கு தூக்கம்  கலைந்துவிட்டது

உங்கள் குழந்தை எந்நேரமும் உங்களை நச்சரித்து கொண்டே இருக்கிறான்

. நீங்களும் மனுஷிதான்.ஒரு கட்டத்தில், பொறுமை இழந்து உங்கள் பிள்ளையை சத்தம் போடுவீர்கள். படிப்படியாக இதுவே பழக்கமாகி விடுகிறது

பெற்றோரின் உலகில் விட்டுச்செல்லப்படும் சில ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுங்குபடுத்தும் முறைகளில், கத்துவது ஒன்றாகும்.

இந்த விருப்பமும் கூட மாற்று   ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அது சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டும் இல்லாமல், பயனற்றதாகவும் இருக்கிறது.

குழந்தைகளை சத்தமிடுவது

லாரா மார்க்கம் ஒரு மருத்துவ உளவியலாளர் மற்றும் "பீஸ்ஃபுல்  பேரெண்ட் , ஹாப்பி கிட்ஸ் : ஹவ் டு ஸ்டாப் எல்லிங் அண்ட் ஸ்டார்ட் கண்ணேகிட்டின்   " புத்தகத்தின்  எழுத்தாளர்.

பாதர்லி பத்ரிக்கையாளருடன் பேசுகையில் பிள்ளைகளிடம் பேசும் சில எதிர்மறை அம்சங்களை விளக்குகிறார்.மன அழுத்தம் நிறைந்த உலகில், பெற்றோர்களின் பொறுமையை காக்கும் போராட்டத்தையும் கவனத்தில் கொள்கிறார்.

அடிப்பதை விட,உங்கள் குரல் உயர்த்துவது குழந்தைக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும். (வாய்மொழி முறைகேடு இல்லாதவரை)

இதில் பேட் நியூஸ், பிற்காலத்தில் உங்கள் கொந்தளிப்பு உங்கள் இளம் வயது குழந்தையுடன் சத்தமிடும் போட்டியாக மாற கூடாது.

உங்கள் குழந்தைகளை சத்தம் போடும்போது இதுதான் நடக்கிறது

1. மூளை வளர்ச்சியை பாதிக்கிறது

உங்கள் பிள்ளைகளை நீங்கள் அதட்டும்போது, அவர்கள் மூளை வளர்ச்சியை அழிக்கும் என்று அர்த்தமில்லை. அனால், நீங்கள் மாற்றி வருகிறீர்கள்.

"ஒரு அமைதியான அல்லது இனிமையான அனுபவத்தில், மூளையின் நரம்பியக்கடத்திகள் 'குறிப்பிட்ட' உயிர் வேதியியல் வழியாக நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்  என்று உணர்கிறோம்" என்று  'டாக்டர் மார்க்ஹாம் விளக்குகிறார். "அப்பொழுதுதான் ஒரு குழந்தை நரம்பியல் பாதைகளை அமைதியாக அமைக்கும் "என்கிறார்.

ஆனால், தளர்நடை பருவத்தில் இருக்கும் குழந்தையை அதட்டினால்,

"குழந்தைக்கு  சண்டை அல்லது முடக்கம் என்று உயிர் வேதியியல் வெளியிடுகிறது. அவர்கள் உங்களை  அடிக்கலாம். அல்லது  ஓடலாம். அல்லது ஹெட்லைட்கள் முன்னால் நிற்கும்

 ஒரு மான் போல உறைந்துபோகிறார்கள். அவற்றில் எதுவுமே  மூளை வளர்ச்சிக்கு நல்லதில்லை  "என்று  கூறுகிறார்.

இது அடிக்கடி நடந்தால், நம் அதட்டலுக்கான  எதிர்ச்செயல் நிரந்தரமாக அமைந்துவிடும்.

இது நல்ல பேச்சுவார்த்தை இல்லை

ஒவ்வொரு முறையும் ஊழியக் கூட்டத்தில் நீங்கள் இருந்திருந்தால்,உங்கள் மேலாளர் உங்களைக் கடிந்துகொண்டே இருந்தால் எப்படி உணர்வீர்கள்? அவர் பேச்சை கேட்க தோணுமா தோணாதா? அநேகமாக தோணாது.குழந்தைகளுக்கும் அதேதான்.

யாருக்கும் தன்னை அதட்டினால் பிடிக்காது."பெற்றோர் அதிகம் கண்டித்தால், பிள்ளைகளும் திரும்பவும் கத்துவார்கள்.அனால் உங்கள் செல்வாக்கு உங்கள் பிள்ளைமேல் செல்லாது" என்று டாக்டர் மார்க்கம்.

சின்ன குழந்தைகள் அழலாம்.வளர்ந்த குழந்தைகளுக்கு சலிப்பாக இருக்கும்.இரண்டு எதிர்வினைகளுமே,உங்கள் பிள்ளை உங்களது தாக்கத்தை தடைசெய்கிறார்கள் என்று அர்த்தம்

பயமுறுத்தும் விஷயம்

நீங்கள்தான் உங்கள் குழந்தையின் பலம்.நீங்கள் அவர்களைவிட மும்மடங்கு பெரியவர்கள். அதனால், உங்கள் குழந்தை உங்களை தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக கருதுகிறார்கள்.ஆனால் அவர்களை பயமுறுத்தும்போது ( தொடர்ந்து கத்தும் போது ) உங்கள் குழந்தையின் பலத்தையும் நம்பிக்கையும் உண்மையிலேயே  உடைந்துவிடும்.

"பெற்றோர்கள் சத்தம் போடுவதை படம்பிடித்துக் காட்டிய ஆய்வுகள் இருக்கின்றன. அந்த படங்களை திரும்ப பார்க்கும்போது, அவர்களின் முகங்கள் எப்படி உருமாறியது என்பதை அவர்களால்  நம்ப முடியவில்லை" என்று டாக்டர் மார்க்கம் கூறுகிறார்.

பெரியவர்களுக்கு கோபத்தை சமாளிக்க முதிர்ச்சி இருக்கும்.ஆனால்மூன்று வயது குழந்தைக்கு அது  இல்லை.

கத்துவது சாதாரணமாகிவிடும்

நீங்கள் உங்கள் குழந்தையை சத்தமிடுகையில், இதுதான் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்வதற்கு சரியான முறை என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறீர்கள். இதை டாக்டர் மார்க்கம் சுட்டிக்காட்டியுள்ளார், சில சமயங்களில், ஒரு குழந்தை திட்டிற்கு சிறிதும் பணியாமல் இருந்தால்,அதிக அளவு அதட்டலை சந்தித்த  வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்

குரல் தோனியை குறைக்க டாக்டர்  மார்க்கம் மட்டும் ஆலோசிக்க வில்லை.  பிற ஆய்வுகளும் இந்த  பரிந்துரையை உறுதிப்படுத்துகின்றன.

2 013 ஆய்வில், சிறுவர் அபிவிருத்தி இதழில் " கத்துதல், சபித்தல், அல்லது அவமதிப்பு-உடல் ரீதியான தண்டனையை விட தீங்கு விளைவிக்கும்" என்று வெளியிட பட்டிருக்கிறது.

மேலும், குழந்தைகளை தொடர்ந்து கத்திகொண்டே இருந்தால் வன்தாக்கம் மற்றும் பதட்டம் போன்ற பிறஎதிர்மறையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

இதற்கு மாற்று என்ன?

டாக்டர் மார்க்கம் திட்டங்களில் ஒன்று நகைச்சுவை . குழந்தைகள் தவறு செய்வது இயல்பு." பெற்றோர் நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்தால்.உங்கள் அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து பராமரிக்க முடியும், உங்கள் குழந்தை உங்களுடன் இணைந்திருக்க முடியும்.' என்கிறார் டாக்டர் மார்க்கம்.

இது தவிர, சில நேரங்களில்  உங்களை நீங்களே சமாதான படுத்தி கொள்ளுங்கள்.உணர்ச்சிகளைப் பற்றி வெளிப்படையாக பேசுங்கள்.வெற்று அச்சுறுத்தல்களைத் தூண்டுவதை விட,எது போன்ற  விளைவுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பது முக்கியம்.

பெற்றோரே, உங்கள் பிள்ளையை ஒழுங்குபடுத்துவது முக்கியம் என்று எங்களுக்கு புரிகிறது.. ஆனால், பலவிதமான ஒழுக்கநெறிகளை நீங்கள் அறிந்துகொண்டால்தான் எந்த வழி சரியான வழி என்பது உங்களுக்கு புரியும்.

Source: theindusparent

Written by

theIndusparent