அம்மக்கள் ஜாக்கிரதை! காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் தரக்குறைவானதாக கருதப்படுகின்றன!

அம்மக்கள்  ஜாக்கிரதை! காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் தரக்குறைவானதாக கருதப்படுகின்றன!

நம்மில் பெரும்பாலோர் , சின்ன தலைவலிக்கும் அலோபதி மருந்தை நாடுகிறோம்.இதனால், இந்தியாவில் மிகவும் பிரபலமான, இரண்டு மாத்திரைகள் காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் .

நம்மில் பெரும்பாலோர் , சின்ன தலைவலிக்கும் அலோபதி மருந்தை நாடுகிறோம்.இதனால், இந்தியாவில் மிகவும் பிரபலமான, இரண்டு மாத்திரைகள் காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் .

இவை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது அவற்றை ஒரு சில முறை எடுத்துக்கொண்டும் இருக்கலாம்.அனால் இதை உடனடியாக நிறுத்துங்கள்!

இதுதான் உண்மை.

காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் தரக்குறைவாது

இப்யூபுரூஃபன் மற்றும் பராசிட்டமால் ஆகியவற்றின் கலவையான காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் ஆகிய பிரபலமான மருந்துகளை, மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), தரக்குறைவாக கருதுகிறது.

காம்பிஃப்லாம் ஒரு வலி நிவாரணி .டி-கோல்ட் டோட்டல், இருமல் மற்றும் சளி எதிர்க்க உட்கொள்ளப்படுகிறது. ஆகவே, பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகின்றன.இதன் விரைவான பலன்தரும் காரணமாக,பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

ஆனால் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலினால், இதை வெளியேற்ற சரியான  நேரம் இதுதான் என்று தெரிகிறது.
அம்மக்கள்  ஜாக்கிரதை! காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் தரக்குறைவானதாக கருதப்படுகின்றன!

இந்த ஒரு பேட்ச்சுக்கு  மட்டும்தானா அல்லது முற்றிலுமாக வாங்கக்கூடாதா?

கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனைகள்படி  மற்றும் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் ( சனோஃபி இந்தியா, காம்பிஃப்லாம் மற்றும் ரெக்கிட் பென்கிசர் ஹெல்த்கேர் இந்தியா, டி-கோல்ட் டோட்டல்) இந்த தகவல் சில உற்பத்திகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால், இது உண்மையில்லை.

சனோஃபி இந்தியா செய்தித் தொடர்பாளர், "  "2015 இல் தயாரிக்கப்பட்ட சில மாத்திரைகள் மட்டுமே தரக்குறைவானதாக கருதப்பட்டது. ஏனெனில் மாத்திரைகள் சிதைவு நேரத்தில் தாமதத்தை காட்டின. முக்கியமாக, பல மருந்து அளவுருக்கள் வழக்கமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதில் ஒன்று. மாத்திரைகள் உடலுக்குள் சிதையும் நேரத்தை அளவிடுதல். மார்ச் மாதம்  2017 - இல்  சி.டி.எஸ்.ஓ.சி மூலம் அடையாளம் காணப்பட்ட  மாத்திரைகள் 2015 ல் உற்பத்தி செய்யப்பட்டது.உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பெற்றவுடன், நாங்கள் கண்டுபிடித்து சரியான நடவடிக்கையை எடுப்போம். " என்றார்னைகள்படி மற்றும் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள்( ரெக்கிட் பென்கிசர் ஹெல்த்கேர் இந்தியா மூலம்  டி-கோல்ட் டோட்டல் ; சனோபி இந்தியா மூலம்  காம்பிஃப்லாம்), இந்த தரம் சார்ந்த பிரச்னை சில பேட்ச்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறுகின்றன.

கடந்த ஆண்டு, மூன்று பேட்ச் (batch) காம்பிஃப்லாம் தரக்குறைவாக கருதப்பட்டது.

சோதனை தோல்வியுற்ற மற்ற நிறுவனங்கள், (RB உட்பட)  இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. தர சான்றிதழ் பெறும்வரை, பெற்றோர்கள் இந்த மருந்தை விட்டு தள்ளி இருப்பதே நல்லது.

சுய சிகிச்சையை தவிர்க்கவும்

இதற்கிடையில், உங்கள் பிள்ளை சளி அல்லது இருமல் அல்லது வழக்கமான உடல் வலி,  தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்,ஒரு டாக்டரிடம் அவரை அழைத்துச் செல்வது நல்லது.டாக்டரிடம் குழந்தையை அழைத்து செல்ல  சரியான காரணங்கள் இதோ!

ஒரு வாரத்திற்குமேல் சளி நீடித்தால்

100 F -கும் மேற்பட்ட காய்ச்சல் இருந்தால்

2-3 நாட்களுக்கு மேல் இருமல் இருந்தால்

நோய்அறிகுறிகள் திரும்ப வந்தால்

வீட்டு வைத்தியம் வேலை செய்யவில்லை என்றால்

இவை வெறும் அடிப்படை வழிகாட்டுதல்கள்.பெற்றோர்களாகிய உங்களுக்குதான் எப்பொழுது குழந்தைகளை டாக்டரிடம் அழைத்து செல்வதற்கு சரியான நேரம் என்பது தெரியும். நாங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஒரே ஆலோசனை, நிலைமை மோசமாகும்வரை  காத்திருக்காமல் முடிந்தவரை விரைவாக செயல்பட வேண்டும்.

Source: theindusparent

Written by

theIndusparent