அம்மக்கள் ஜாக்கிரதை! உங்கள் பிள்ளைகளை லிச்சி பாதிக்கலாம்

lead image

பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது ! அதிலும் லிச்சி பழம் தீங்கு விளைவிக்கும் என்பதால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நமது உடலுக்கு நாம் செய்யக்கூடிய ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.பல ஆராய்ச்சிகளும் இதைதான் சொல்கிறது.

ஆனால் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு லிச்சி பழம் விஷமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

இந்தியாவில், ஆசிய லிச்சி  மரம் (லிச்சி செனென்சிஸ்),  பீகார் மாநிலத்தில் வளர்ந்து வரும் ஒரு அபாயகரமான மூளை நோய் பாதிப்புக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. வைராலஜிஸ்ட் டி. ஜேக்கப் ஜான்  (கிரிஸ்டியன்  மருத்துவக் கல்லூரி) அவர்களின் தலைமை கொண்ட குழுவால், பழுத்த  லிச்சி பழங்களில் மீத்திலேன் சைக்ளோப்ரப்பில்-கிளைசின் (MCPG) அல்லது ஹைபோகிளின்சின் கி- யின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

லிச்சியால் மரணம் ஏற்படலாம்

குழந்தைகளுக்கு சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது, MCCPG  என்செபாலோபதி என்றும் நோயை தூண்டுகிறது. இதனால், மூளையை பாதிக்கும் ஒரு வளர்சிதைமாற்ற நோய் உண்டாகும்.

ஒரு நபர் உண்ணாமல்  இருக்கும்போது, உடலில் சேமிக்கப்படும் கிளிசரின் ஆற்றல் உற்பத்திக்காக வெளியிடப்படும் போது இது நிகழ்கிறது.

கார்னிடைன் மற்றும் கோஎன்சைம் போன்ற நொதிகள்,  கொழுப்பு அமிலங்கள் முறிக்க தேவைப்படுகிறது."இந்த வளர்சிதைமாற்றம் குறைவாக இருக்கும் போது, இரத்தச் சர்க்கரைக் குறைபாடு உருவாகிறது,"  என்று மாயா தாமஸ், சி.எம்.சி வேலூரில் குழந்தை மருத்துவ நரம்பியல் வல்லுநர் கூறினார்.

இதை தவிர்க்க சிறந்த வழி, குழந்தைகள் உணவை சாப்பிட பின்னரே பழங்கள் சாப்பிட வேண்டும்.அம்மக்களே, உங்கள் வீட்டில் நல்ல ஊட்டச்சத்து பழக்கம் இருக்கிறதா?

ஆரோக்கியமான உணவு பழக்கம்

ஆரோக்கியமான குழந்தை பருவ உணவு பழக்கத்தை மேம்படுத்துவதற்கு பின்வரும் குறிப்புகள் பரிந்துரைக்கின்றன.

  • குறிப்பிட்ட உணவை விட ஒட்டுமொத்த உணவில் கவனம் செலுத்துங்கள்.  உணவோடு வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்கு,குழந்தைகள் குறைந்தளவு பதப்படுத்தப்பட்ட, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
  • வழக்கமான வீட்டு உணவை சாப்பிடுங்கள். கிட்டத்தட்ட அதே நேரத்தில் உணவு பரிமாற படுவதால், முழு குடும்பமும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதுடன் பசியார்வமும் அதிகரிக்கிறது.காலை உணவு  ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசியம்.
  • வீட்டில் அதிகமாக சமைக்கவும்.வீட்டில் சமைத்த உணவு சாப்பிடுவது முழு குடும்பத்திற்கும் ஆரோக்கியமானதாகும்.இது உணவின் முக்கியத்துவத்தை பற்றி குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அமைக்கிறது.மேலும் ஒரு குடும்பத்தை ஒன்றாக கொண்டு வர முடியும்-இன்றைய இளைஞர்களுக்கும் சுவையான, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட விரும்புகிறார்கள்!
  • குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். குழந்தைகளுக்கு மளிகை வாங்குவதில், லஞ்ச் மற்றும் டின்னெர் பிளான் செய்வதிலும் பெற்றோர்களுக்கு நன்கு உதவுவார்கள்.
  • வெற்று கலோரி தின்பண்டங்களுக்கு பதிலாக பல்வேறு வகையான ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தயார் செய்யவும்.நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானிய தின்பண்டங்கள் மற்றும் ஆரோக்கியமான பானங்கள் (தண்ணீர், பால், தூய பழ சாறு) தயார் செய்யலாம்.
  • அளவுகளை  வரம்பிடவும். உங்கள் குழந்தையை பாத்திரம் துலக்க வலியுறுத்தாதீர்கள், உணவு  லஞ்சம் போல் ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

Source: theindusparent

Written by

theIndusparent

app info
get app banner