அனைத்து இந்து மகள்களுக்கு பரம்பரை சொத்துக்களுக்கு சம உரிமை உண்டு : உச்ச நீதி மன்றம்

lead image

இந்த தீர்ப்பு இந்தியாவில் உள்ள பெண்களின் சொத்துரிமைகளுக்கான நம்பிக்கையை அளிக்கிறது.

பெண்களே, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று  சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்கியுள்ளது.

மகள்களும் மகன்களும் மூதாதையர் சொத்துக்களுக்கு  சமபங்கு உண்டு என்பதை 2005  ஆம் ஆண்டு  ஹிந்து சக்சஷன் ஆக்ட் தீர்ப்பளித்துள்ளது. இதில் 2005 க்கு பின் பிறந்த பெண்குழந்தைகளுக்கு அடங்குவர்.

இந்தியாவில் பெண்களின் சொத்துரிமைகளுக்கு உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது

தந்தையின் சொத்தில் சமமான பங்கை விரும்பிய இரண்டு சகோதரிகள் மனுவை தாக்கல் செய்தபோது இந்த விஷயம் வெளிப்பட்டது.அவர்களுடைய சகோதரர்கள் தங்கள் பங்கை மறுத்துவிட்டதால் 2002-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆயினும், விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் 2007 ல் தங்கள் வேண்டுகோளை நிராகரித்தன.காரணம் அவர்கள் 2005 க்கு முன்பே பிறந்தவர்கள்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒரு பெண் பிறந்த காரணத்தால்,பரம்பரை சொத்து மறுக்கப்படுவது நியாயமில்லை என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. 2005 க்கு முன்னர் அனைத்து சொத்து சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பு, ஏ.கே. சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோரால் தீர்ப்பளிக்கப்பட்டது.பிரிக்க முடியாத சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உள்ளது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.ஒரு ஆணுக்கு உள்ள பொறுப்புகளும் உரிமைகளும் பெண்ணுக்கும் வேண்டும் என்பதை நீதிபதிகள் வலியுறுத்துகிறார்கள்.  

மிசக்ஷாரா சட்டத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு கூட்டு இந்து குடும்பத்தைச் சேர்ந்த சட்டத்தில் வளர்ச்சிகரமான மாற்றத்திற்கு உள்ளடக்கியது.இந்திய குடும்ப மகள்களுக்கு சமமான சொத்து  வழங்குவதற்கான வளரும் தேவையை உரையாற்றுவதற்கு மாற்றங்கள் முன் வந்துள்ளன.இந்த மாற்றங்கள் சமத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது .ஒரு மகள் உட்படுத்தப்படுகிற இயலாமையை அகற்றுகிறது " ன்று பெஞ்ச் கூறியது.

இதனால், பிறப்பு  தேதி மட்டுமே சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் அளவுகோல் இல்லை என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது.

சட்டம் என்ன கூறுகிறது?

property rights of women

ஹிந்து தொடர்வு சட்டம் 1956 ன் 14 வது பிரிவு மட்டுமே பெண்களின் பரம்பரை உரிமைகள் பற்றி கூறுகிறது.

"ஒரு ஹிந்து பெண் வாங்கிய சொத்து, சட்டம் அமல் படுத்திய முன்னும்

அல்லது பின்னும் வாங்கியிருந்தால், அந்த சொத்தின் முழூ உரிமையாளரும் அவரே" என்று சட்டம் கூறுகிறது.

எல்லா மகள்களும் தங்கள் மூதாதையரின்  சொத்தின் உரிமையாளர்களே.அனால் பல பெண்களுக்கு தங்கள் அடிப்படை உரிமை அறிந்ததில்லை.உண்மையில், பல குடும்பங்கள் தங்களுடைய குடும்ப சொத்துக்களுக்கு சரியான வாரிசாக ஒரு மகனைதான்  கருதுகின்றனர்

ஹிந்து தொடர்வு சட்டம் 2005 ஆம் ஆண்டில் மேலும் திருத்தப்பட்டது. இந்த சட்டத்தில், பெண்களுக்கு  சொத்தில் இணை மரபுரிமை உள்ளது என்று கூறியிருக்கிறது .ஒரு மகனுக்கு உள்ள அதே பிறப்புரிமையும் சொத்துரிமையும் மகளுக்கும் உள்ளது என்று தெரிவித்துள்ளது

Written by

theIndusparent

app info
get app banner