அந்நியன் ஆபத்து: சமூக ஊடகங்களில் பகிரக்கூடாத உங்கள் குழந்தையின் 7 படங்கள்

அந்நியன் ஆபத்து: சமூக ஊடகங்களில் பகிரக்கூடாத உங்கள் குழந்தையின் 7 படங்கள்

பெற்றோர்களாக, உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பகிரும்போது பொறுப்பாக இருக்கவேண்டும்.இந்த 7 படங்கள் : சமூக ஊடகங்களில் பகிரக்கூடாதவை.

இதை நியாபகமிருக்கா?

"ஒரு நபர் உங்களுக்கு நண்பர் வேண்டுகோளை பேஸ்புக்கில்அனுப்புகிறார். உங்களுக்கு அவரை தெரியாது. ஆனால் அவர் பார்க்க படித்தவர் போல், அவரது  வேண்டுகோளை  ஏற்றுக்கொள்வீர்.

உங்கள் பெண் குழந்தைக்கு இன்றுதான் பள்ளியின் முதல் நாள்! அவளை ஒரு புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில், நண்பர்களும் குடும்பத்தினரும் பார்க்க பகிர்வீர்கள  உற்சாகம் தாங்கமுடியாமல், அவள் பள்ளியில் "செக் இன்" செய்து " சீக்கிரம் வளர்ந்துவிட்டாள். காலம் பறந்துவிட்டது. நான் ஒரு பெருமையான அம்மா!" என்று எழுதுவீர்கள்.

இதற்கிடையில், இந்த மர்ம நபர் உங்கள் குழந்தையின் போட்டோவை சேவ் செய்கிறார். இதை  60  மில்லியன் ஆண்களோடு " வயது 5 .காக்கேசியன் பெண் குழந்தை.  பிரவுன் முடி, பச்சை கண்கள்" என்ற தலைப்புடன் பகிர்கிறார்.

ஒரு கடத்தல்காரரிடம், உங்கள் குழந்தையின் புகைப்படத்தை மட்டும் கொடுக்காமல், வெள்ளி சைபர் தட்டில் அவளது

பள்ளியின் பெயரையும் சரியான இடத்தையும் கொடுத்துவிட்டீர்கள்.

நீங்கள் மதியம் 3:00 மணிக்கு  அவரை குழந்தையை  வர செல்கிறீர்கள். ஆனால் அவளை காணமுடியவில்லை. உங்கள் தங்கமான குழந்தை 43 வயதான பெடோஃபிலுக்கு விற்கப்பட்டார்,ஒரு தலையில் துணி போர்த்திக்கொண்டு சவுத் ஆப்ரிக்காவிற்கு கடத்தப்படுகிறாள்.குழப்பி, பயந்து, அழுகிறாள். ஏனென்றால், அவள் ஒருபோதும் பார்த்திராத ஒரு நபர் பள்ளியில் இருந்து அவளை அழைத்துக்கொண்டு போகிறான். இப்போது அவளுடைய பெற்றோர் எங்கே என்று தெரிய வில்லை, அவள் எங்கு இருக்கிறாள் என்னவாக போகிறாள் என்று அவளுக்கு தெரியாது.

இனி ஃபேஸ்புக்கில் அன்னியர்களை நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்.

செப்டம்பர் 2014 ல், இந்த கட்டுரை பேஸ்புக்கில் வைரலாகியது.பெற்றோர்களை  அச்சுறுத்தியது.இந்த கட்டுரை,  'இண்டர்நெட் வேட்டைகார்கள்' பற்றிய

அடிப்படை கருத்தை வெளிப்படுத்துகின்றன.

புகைப்படம் எடுத்து ஆன்லைனில் பகிரும் உலகில் வாழ்கிறோம் என்பது ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க விதி.ஆனால் உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள்  காட்சிகள், பூங்காவில் விளையாடுவது போன்ற  புகைப்படங்கள் உங்கள் குடும்ப சொத்து. இதை பகிரக்கூடாது. இதனால், உங்கள் குழந்தை ஒரு சங்கடமான நிலைக்கு தள்ளப்படுவார். அல்லது, இதுபோல் இன்டர்நெட் வேட்டைக்கு இரையாகி விடுவார்.  

எனவே, உங்கள் குழந்தைகளை பாதுகாக்கவும் , உடனடி ஆபத்தை தவிர்க்கவும், இந்த 7 படங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் .

சமூக ஊடகங்களில் பகிரக்கூடாத உங்கள் குழந்தையின் 7 படங்கள்

# 1 குளியல் நேர புகைப்படங்கள்

உங்கள் குழந்தை தொட்டியில் சோப்பு நுரையோடு குளித்து கொண்டிருப்பது  ஒரு அழகான  தருணமாக  இருக்கலாம்.அனால்,இணையத்தில் நிர்வாண குழந்தைகள் படங்களை பதிவு செய்வது நல்லதல்ல.உங்களுக்கு அது

கியூடாக இருக்கலாம். ஆனால் குழந்தையைப் புணருபவனுகில்லை. குழந்தை ஆபாசத்தில் ஈடுபட அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு.

# 2 தனிப்பட்ட விவரங்களை  வெளியிடுவது

ஆன்லைனில் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ள கூடாது.உங்கள் வீட்டின் எண் விவரங்கள்,உங்கள் வட்டாரத்தின் பெயர், பள்ளியின் பெயர்,யது மற்றும் குழந்தையின் விவரங்கள் ஆகியவற்றைப் பகிர்தல் முற்றிலும் தவறு.இந்த விவரங்களால்,மர்ம நபர்கள் உங்கள் குழந்தையை எளிதில்  அணுகலாம்.

# 3   மலம் பயிற்சி புகைப்படங்கள்

உங்கள் குழந்தை மலம் கழிக்க கற்றுக்கொள்வது வேறு யாருக்கும் தெரிய தேவை இல்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இது போல் சங்கடமான புகைப்படங்களை பார்க்க விரும்புகிறீர்களா?ஆன்லைனில் இது போன்ற நெருக்கமான தருணங்களை பகிர்ந்து கொள்வது நல்லது அல்ல. ஆன்லைனில் நீங்கள் பகிரும் அனைத்து விஷயங்களும்

எப்போதும் நீடித்திருக்கும் !

# 4 அவமானப்படுத்தும் புகைப்படங்கள்

சில சமயங்களில்  அது போன்ற புகைப்படங்களை

பகிர்வதால், குழந்தைக்கு   மனதளவில்  பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையேயான நம்பிக்கையை மீறுவது மட்டுமில்லாமல், மனஉளைச்சல் சீர்குலைவு, மனச்சோர்வு மற்றும் குழந்தையின் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட கவலைப்பதற்றம் ஏற்படலாம்.

#5 குழு புகைப்படங்கள்

உங்கள்  குழந்தை, மற்ற குழந்தையின் பிறந்த நாள் கொண்டாத்திற்கு சென்றால், குழந்தைகள் குழுவாக விளையாடிக்கொண்டிருக்கும்.

புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னர் சக பெற்றோரின் அனுமதியைப் பெற நல்லது.உங்களுக்கு பிரச்னை இல்லாவிட்டாலும், , சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் படத்தை ஆன்லைனில் பகிர்ந்து கொள்வதை எதிர்க்கிறார்கள்.

#6 நோயுற்ற அல்லது காயமடைந்த புகைப்படங்கள்

உடல்நிலை சரியில்லாத பிள்ளையின் படங்களை பகிர வேண்டாம். பெற்றோர்களாக, நம் குழந்தைகளுக்கு ஏதேனும் தீங்கு விளைவாகாமல், பாதுகாக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது யாரோ உங்களுடன் ஒரு செல்பி எடுத்தால் அதை விரும்புவார்களா?  உங்கள் குழந்தைக்கும் அதே கொள்கைகளை கடைபிடியுங்கள்.

# 7  பாதுகாப்பற்ற செயல்களின் புகைப்படங்கள்

உங்கள் குழந்தையோடு, நகரும் காரில், பெல்ட் போடாமல் செல்பி எடுத்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கலாம்.ஆனால் இதில் பாதுகாப்பில்லை. பாதுகாப்பற்ற நடைமுறைகளை நீங்கள் ஊக்குவிப்பதோடு  மட்டுமல்லாமல்,  உங்கள் குழந்தையை ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்க்கிறீர்கள்.இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள், பல நேரங்களில் ஆபத்தாக முடியலாம். பல கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவீர்கள்.

Source: theindusparent

Written by

theIndusparent