அதிர்ச்சி! " ப்ளூ வேல் " சவாலிற்காக மாடியிலிருந்து குதித்த மும்பை சிறுவன்

அதிர்ச்சி! " ப்ளூ வேல் " சவாலிற்காக மாடியிலிருந்து குதித்த மும்பை சிறுவன்

விளையாட்டின் வழிமுறைகளில் மாடியிலிருந்து குதிக்கச்சொன்னதால் தான் அந்த சிறுவனும் அதையே பின்பற்றினான்

” ப்ளூ வேல் ” என்று அழைக்கப்படும் ஒரு கெட்ட சமூக ஊடக சவால் சிறுவர்களின் உயிரை பலிவாங்குகிறது.இதனால் சமீபத்தில்  பாதிக்கப்பட்டது 14 வயது ஆந்தேரி (மும்பை) சிறுவன்.

சனிக்கிழமை புறநகர் ஆந்தேரியில்ஏழு மாடி கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான் மன்ப்ரீத் சிங் சஹானி  என்ற சிறுவன்.

ஆன்லைன் சவால்களில் பங்கெடுத்துக்கொண்ட சிறுவன்

மரணத்தின் உண்மையான காரணத்தை உறுதி செய்யும் அதே வேளையில், இந்த ஆன்லைன்-சவால் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதாக இந்திய டுடே தெரிவித்துள்ளது. அவன் குதிப்பதை பார்த்த பார்வையாளர் உடனடியாக போலீசிடம் தகவல் தெரிவித்தார்.

இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாததால், தற்கொலை செய்து கொள்ளும் தூண்டுதலை பற்றி பெற்றோர்களால் எதுவுமே சொல்ல முடியவில்லை. எல்லா கோணங்களிலும்  இந்த வழக்கை விசாரணை செய்கிறோம் ” என்று DCP நவின் சந்திரா ரெட்டி கூறினார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றொரு அறிக்கையில், பெற்றோருக்கு எதுவும் தெரியாத நிலையில் தன்  தற்கொலை முயற்சியை பற்றி தன் நண்பர்களிடம் வாட்ஸாப்பில் சொல்லியிருப்பதாக தகவல் வெளிவந்தது.

அதிர்ச்சி!

This was his last message before he plunged to him death. Image courtesy: Facebook

துரதிருஷ்டவசமாக, பெற்றோருக்கு இதை பற்றி எதுவுமே தெரியாது.அவன் பைலட் ஆக ஆர்வம் இருப்பதாகவும், ரஷ்யாவில் பயிற்சி பெற விருப்பப்பட்டதாகவும் கூறினார்.இந்த விளையாட்டு பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை.

இந்தத் தற்கொலைக்குப் பிறகு,மும்பை முழுவதும் வாட்ஸாப்பில் எச்சரிக்கை சுற்றுகளைச் செய்யத் தொடங்கினர. இதன் மூலமாகத்தான், இந்த கொடூரமான விளையாட்டைப் பற்றி பெற்றோர்கள் கற்றுக்கொண்டார்கள்

ரஷ்யாவில்தான் இந்த “ப்ளூ வேல்”விளையாட்டு உருவானதாக நம்பப்படுகிறது.  ஆனால் இந்த விளையாட்டில் என்ன நடக்கிறது,ஏன் குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர்?

“ப்ளூ வேல் சவால்” என்றால் என்ன?

50 நாட்களுக்கு நீடிக்கும் இந்த சவாலில், ஒவ்வொரு  நாளும் வெவ்வேறு  டாஸ்கை பங்கேற்பாளர்கள் நடத்தி முடிக்கவேண்டும்.தன் வாழ்நாள் இறுதியில் கரையில் ஒதுங்கி உயிர் நீந்தும் நீல திமிங்கலத்தின் பெயர்தான் இந்த விளையாட்டிற்கு சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த விளையாட்டின் நிர்வாகிகளால் அறிவுறுத்தப்பட்டபடி,  திகில் கிளிப்புகள் பார்த்தது,  இசையை கேட்பது, உடலில் வரைவது போன்ற விதிகள் இதில் அடங்கும்.

விளையாட்டின் முடிவில், இந்த விளையாட்டின் பங்கேற்பாளர் தற்கொலை செய்துகொண்டு அதை பதிவும் செய்யவேண்டும்.
mumbai teen

ஒரு ரெடிட் பயனர் இந்த சவாலில் சம்பந்தப்பட்டபணிகளின்  பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.( டிஸ்க்ளைமர் : உங்கள் சொந்த இடரில் பார்க்கவும் )

கிட்டத்தட்ட 130 இளைஞர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்!

12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்தான் இந்த விளையாட்டிற்கு அடிமையாகின்றனர்.நிர்வாகிகள் தங்கள் கணினியில் இருந்து தனிப்பட்ட தகவல்களை திருடி, அதை கொண்டு விளையாட அச்சுறுத்துவார்கள். இந்த பயத்திலும் மிரட்டலிலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு விளையாட்டிற்கு சம்மதிப்பார்கள்.

இந்த விளையாடினல் , ரஷ்யா மற்றும் இங்கிலாந்தில் 130 இளம் வயதினரின் வாழ்க்கையை பறிகொடுத்தார். மேலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

ஒரு பயங்கரமான விளையாட்டிலிருந்து உங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்?முதலாவதாக, இது சைபர்  புல்லியின் வடிவம்  என்று புரிந்து கொள்ளவேண்டும்.விளையாட்டின் நிர்வாகிகள், தங்கள் சொந்த தகவல் கொடுக்கும்படி வற்புறுத்தி, அவர்களின் வழிமுறைகளை  பின்பற்றுமாறு அச்சுறுத்துவார்கள்

சைபர் அட்டூழியங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க சில வழிகள் உண்டு.

இது போன்ற  சைபர் கொடுமைகளிலிருந்து எப்படி குழந்தைகளை பாதுகாப்பது?

டெல்லியில் உள்ள ePsyClinic.com இன் மருத்துவ உளவியலாளரான கம்னா யாதவிடம் நாங்கள் பேசினோம். ” இந்த விஷயத்தை பற்றி தீவிரமாக ஆலோசிக்கவேண்டும்.பெற்றோர், அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் உளவியலாளர்கள் இதுபோன்ற அறிகுறிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.குழந்தையே பார்த்துக்கொள்ளும் என்று நினைக்காமல், இந்த பிரச்சனைக்கு நீங்கள்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்”

பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு உதவ பின்வரும் குறிப்புகளை பட்டியலிடுகிறது.

  1. சளி மற்றும் இருமல், குமட்டல், பசியின்மை, அல்லது பள்ளிக்கூடத்திற்கு செல்வது குறித்து பயப்படுவது போன்ற அறிகுறிகளை கண்காணிக்கவேண்டும்
  2. குழந்தைகளிடம் பாசமாக இருங்கள்.தாக்கப்பட்ட குழந்தைகளை சரியான நேரத்தில் தேவையான ஆலோசனையைப் பெற வேண்டும்.
  3. குழந்தைகளுடன் தங்கள் உரையாடலை வலுப்படுத்த வேண்டும்.சைபர் வழியாக கொடுமைப்படுத்துதலை பற்றி அப்பொழுதுதான் மனம் விட்டு பேசுவார்.அச்சங்களைப் பற்றி பேசுவதற்கு  ஃப்ரீ யாக உணரவேண்டும். மக்களின் கருத்துக்களையும் வேறுபாடுகளையும் மதிக்கும் ஒரு பரந்த உரையாடலாக   உணர வேண்டும்
  4. உங்கள் பிள்ளைகள் தங்கள் துன்புறுத்தலை பற்றி சொன்னால்,முதலில் அவர்களை நம்புங்கள்.
  5. உடல் பருமனுடைய குழந்தைகள்,  மற்றும் லெஸ்பியன், கே, இருபால் அல்லது திருநங்கையான குழந்தைகள் இதுபோன்ற பிரச்சனைக்கு ஆளாவர்கள்
  6. பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இதைப்பற்றி பேசுவதற்கு ஏற்ற சூழலை அமைத்து தரவேண்டும்.
  7. இதுபோன்ற கொடுமைகளுக்கு உடனே தீர்வுகண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இது போன்ற கொடுமையை ஏற்படுத்துபவர்களுக்கு உளவியல் ரீதியான சிக்கல் இருக்கும். அந்த சிக்கலுக்கு சீக்கிரம் நிவர்த்தி கண்டால், இந்த சிக்கலின் பிரதிபலிப்பாக வேறு யாரையும் கொடுமை படுத்தமாட்டார்கள்.

Written by

theIndusparent