அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

"பம் என்று சொல்வதே கடினமாக இருந்தது " என்கிறார் அக்ஷய் குமார் . தனது அதிர்ச்சியூட்டும் தனிப்பட்ட சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறார்."

சமீப காலங்களில், பெண் குழந்தை பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.தங்கள் பெண்குழந்தைகளை விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள பெற்றோர்களும் போதுமான அளவு பொறுப்பேற்றுள்ளனர். அனால் பாதிக்கப்பட்ட ஆன் குழந்தைகளை பற்றி நாம் அதிகமாக பேசுவதில்லை.

பெண் குழந்தை பாலியல் வன்முறைபோலவே,ஆண் குழந்தை பாலியல் வன்முறையும் இருக்கிறது அதனால் இதுபற்றி அதிகமாக பேசப்படுவதில்லை.இதை ஒரு பிரபல பாலிவுட் நடிகரும் ஒப்புக்கொண்டார்.

அக்ஷய் குமார் குழந்தை பருவத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளார்

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபத்னாவிஸ் உடன் பெண்களின் பாதுகாப்பு குறித்த அண்மைய கருத்தரங்கில் , அக்ஷய் குமார் தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அக்ஷய்க்கு 6  வயது இருந்தபோது,தனக்கு நடந்த கொடூரமான சம்பவத்தை நினைவு கூர்கிறார்.லிப்டில் தனியாக இருந்தபோது, தன்னை தவறான இடத்தில ஒரு ஆண் தொட்டதாக பகிர்ந்துகொண்டார்.

தான் கூச்சசுபாவமிக்க குழந்தையாக இருந்தபோதும், உடனடியாக தனது தந்தையிடம் இந்த சம்பவத்தைப் பற்றி தெரிவித்தார்.இந்த சம்பவம் உளவியல் ரீதியாக வாராய் பெரிதும் பாதித்தது.இன்று வரை அவர் ‘பம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதுகூட கடினமாகத்தான் இருந்திருக்கிறது.

“பம் என்று சொல்வதே இன்றுவரை  கடினமாக இருக்கிறது” என்றார்

அக்ஷய் போல் பல ஆண்குழந்தைகள் பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்

இதுபோல் பதிவு செய்யப்படாத  சம்பவங்கள் அதிக அளவு உள்ளன.பெண்கள்தான்  பாதுகாக்கப்பட வேண்டும், ஆண்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.எந்த பாலினமாக இருந்தாலும், இதை புரிந்துகொள்ளவும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் முதிர்ச்சி இருக்காது.இது ஒரு பையன் அல்லது ஒரு பெண்ணாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்களில் இருவரையும் சமமாகத்தான் நடத்தவேண்டும்.

இதுபோன்ற மோசமான நிலைமைகளை எதிர்கொண்டதில் என் ஆண் நண்பர்கள் பலர் உள்ளனர்.ஒரு தந்தையாகும்வரை, அவர்களால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அத்தகைய சூழ்நிலைகளை எப்படி தவிர்ப்பது?எப்பாய்டு திருத்தும் செய்வது?

குழந்தையை வளர்ப்பதில் மனதில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கியமான அம்சங்கள் கீழே உள்ளன.

 
அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

# 1 நம்பிக்கையை உருவாக்குங்கள்

பெற்றோராக நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய  முதல் விஷயம், உங்கள் குழந்தையை நம்புவதுதான்.அவர்கள் அதிகம் குறும்பு செய்யும் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால் உங்களுடைய நடத்தை அவர்களை ஒழுங்குபடுத்த உதவவேண்டுமே தவிர, நேர்மையாக இருப்பதைக்கண்டு அச்சப்படுத்தக்கூடாது. தங்கள் இரகசியங்களை உங்களுடன் பகிர்வதற்கு நம்பிக்கை வந்தால் மட்டுமே, இதுபோன்ற சூழலை எதிர்கொண்டால் உங்களுக்கு தெரியவரும்.

Mutual understanding and trust is the key to positive parenting

Mutual understanding and trust is the key to positive parenting

# 2 விழிப்புணர்வு உருவாக்கவும்

இதை patriya அறியாமை இருந்தால், தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்ற விவரம் குழந்தைக்கு தெரியாது.உங்கள் குழந்தை பேச ஆரம்பித்தவுடன், யாரும் அவர்களை தொட அனுமதிக்காதபடி கற்றுக்கொடுங்கள்.குறிப்பாக தவறான இடங்களில் தொடுவதைப்பற்றி அவசியம் புரியாவையுங்கள்.புத்தகங்களைப் பயன்படுத்தலாம் அல்லது  நீங்களே செயல்முறையில் காட்டலாம்.எந்த ஒரு எடுத்துக்காட்டையும் கடுமையான முறையில் எடுத்து  சொல்லவேண்டாம் .சூழ்நிலைகளின் சிக்கலைக் கண்டறியா குழந்தைக்கு நேரம் தேவை

# 3 தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்கிறாரோ அதற்கான முடிவுடன்  கடந்த அனுபவம் பகிர்ந்து கொண்டால், அதை தொடர்பு படுத்தி குழந்தைக்கு எளிதில் பதிலளிக்கலாம்.தான் தனியாக இல்லை என்று உறுதியளித்து,இது போன்ற விஷயங்களை தவிர்க்க உதவுகிறது.

#4  குற்றவுணர்வு இல்லாத சூழலை உருவாக்கவும்

பெரும்பாலான இந்தியர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, குழந்தைகளை போட்டு குடைவதுதான்.”இது எல்லாமே உன் தவறுதான்” என்று சொல்வதுதான் மிகப்பெரிய தவறு. இது  பிற்போக்கான சமுதாயத்தின் அடையாளம்.உங்கள் பேச்சை கேட்பதற்கு குழந்தையை உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தக்கூடாது.அப்படி செய்தால், உங்களிடம் எல்லா விஷயத்தையும் மறைப்பார்கள்.அல்லது ,சாகும்வரை குற்றணர்ச்சியுடன் வாழ்வார்கள்.நம் குழந்தைகளை ஊக்கப்படுத்த நாம் செய்யும் சிறு விஷயம் இதுதான்

 
அக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்

# 5 நடவடிக்கை எடுக்கவும்

குறிப்பாக பாலியல் வன்முறை போன்ற சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கையில், நிச்சயமாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்காக நீங்கள்தான் போராடவேண்டும்.சமுதாயம்  குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம். ஏனென்றால் இது குழந்தையின் தவறல்ல.நீங்கள் தகுந்த நடவடிக்கைஎடுத்தால்தான், உங்களிடமும் தங்களை சுற்றியிருக்கும் மக்களிடமும் ஒரு நம்பிக்கை ஏற்படும்.அவர்கள் வளர்ந்து வரும் போது அவர்கள் அத்தகைய விஷயங்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பதையும் இது உறுதிப்படுத்தும்.

Written by

theIndusparent